Saturday, September 09, 2023

மகன் எழில்

 மதுரை அப்பல்லோ மருத்துவ மனையில் மகன் எழில் 09.09.23!


Angio done. No problem.


அனிச்சைச்செயல்!


என்மகன் என்முன் படும்பாட்டை காண்பதற்கு

என்னால் முடியவில்லை! தானாடா விட்டாலும்

தன்சதை ஆடுமென்றே சொல்தல் இதுதானோ!

என்மகனைக் காக்கவேண்டும் சொல்.


கண்களில் கண்ணீரோ என்னை அறியாமல்

துள்ளி வருகிறதே! என்ன முயன்றாலும்

என்னால் அடக்க முடியவில்லை கண்ணீரை!

கண்ணீர் அனிச்சைச் செயல்.


கண்களின் கண்ணீரை நானோ அடக்கலாம்!

என்மனம் தேம்பும் அழுகையை எப்படி

இங்கே அடக்க முடியும்? தெரியவில்லை!

சென்னையில் நாங்கள்! மதுரையில் மைந்தனென்றால்

எங்களின் உள்ளம் துடிக்காதா? கண்ணுறக்கம்

எப்படித் தான்வரும்? சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home