போர்கள்! வன்கொடுமை!
போர்கள்! வன்கொடுமை!
இஸ்ரேல்-- பாலஸ்தீன்- சிரியா-- லெபனான்
உலகத்தின் நாடுகள் போர்க்கோலம் பூண்டு
கலகத்தை உண்டாக்கிப் பார்க்கிறதே நாளும்!
குழந்தை பெரியவர்கள் எல்லோரும் அய்யோ!
கலக்கத்தில் வாழும் அவலத்தைக் கண்டார்!
படபடத்தே ஓடுகின்றார் பார்.
வீடு உடைமைகள் எல்லாமே விட்டுவிட்டு
ஓடுகின்றார் திக்குத் தெரியாமல்! தங்குமிடம்
நாடுகின்றார்! எண்ணற்ற நாடுகள் வேடிக்கை
பார்க்கிறதே ஊடகத்தில் தான்.
எந்தநாடும் இங்கே விதிவிலக் கல்லவே!
அந்தந்த நாட்டிலே ஏதேனும் சிக்கல்கள்!
அங்கங்கே வன்கொடுமை எல்லாம் நடக்கிறது!
என்றுதான் மாறுமோ இங்கு?
மதுரை பாராஜ்
நல்ல கவிதை அய்யா.
என்று அன்பும் மனித நேயமும் எல்லா மனிதருள் தழைக்கின்றதோ அன்று தான் விடிவுகாலம்.
பணத்திலும் பதவியிலும் மோகம் கொண்டு மனிதத்தை கொல்கின்றார்களே… அது ஒழிய வேண்டும்.
எழில்புத்தன்
பெங்களூரு
0 Comments:
Post a Comment
<< Home