ரஜினி எம் பாலு
ரஜினி எம். பாலு
(என் வாழ்க்கைப் பயணத்தில் ரஜினி--50)
வாழ்நாளில் வந்தபாதை என்னென்ன என்பதையும்
சூழ்நிலைப் பின்னணி என்னென்ன என்பதையும்
கச்சிதமாய் நல்ல முறையில் எழுதிய
புத்தகம் படித்தேன் மகிழ்ந்து.
நடிகர் ரஜினியின் நல்ல ரசிகன்!
குடும்பத்தில் மாமாவின் ஊக்கம் ரசிப்பு
விறுவிறுப்பாய் தன்தலைவர் இங்கே திரையில்
அடுத்தடுத்து வந்தேதான் ஆற்றலைக் காட்டி
எடுப்பாய் நடித்ததை பாலு எழுத்தில்
படிப்பதே நல்லதோர் வாய்ப்பு.
மாமா மகனோ இயக்குந ராகித்தான்
பேட்டை படத்தை இயக்கிய வாய்ப்பையும்
தான்போய் ரஜினியைப் பார்த்து ஒளிப்படம்
தானெடுத்த வாய்ப்பையும் நன்கு விளக்கிய
சூழல் ரசித்திருந்தேன் நான்.
வீட்டில் ரகுவீரன் பாலு சரவணன்
ராஜ்குமார் நால்வரும் சேர்ந்தேதான் உட்கார்ந்து
நாட்டு நடப்பையும் வீட்டு நடப்பையும்
தேர்ந்த நகைச்சுவை யோடுதான் பேசுவார்கள்!
ஆர்வமுடன் கேட்டிருப்போம் சேர்ந்து.
வாழ்த்துகிறன்
மாமா மதுரை பாபாராஜ்
12.09.2025
.jpg)

0 Comments:
Post a Comment
<< Home