Thursday, March 26, 2026

பண்புடைமை--100

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

     பண்புடைமை--100

----------------------------------------------------------------

பண்புடைமையே வாழ்க்கையின் ஒளிவிளக்கு!

----------------------------------------------------------------

எல்லா ரிடத்தும் எளிமையாகப்

பழகும் தன்மைப் பண்புடைமை!


சிறப்பை எளிதாய்த் தந்திடுமே!

அன்பாய் இருத்தல், நற்குடும்பம்

பண்புடன் வாழச் சிறந்தவழி!


உறுப்புகள் தோற்றம் ஒத்திருந்தால்

ஒப்பெனச் சொல்ல முடியாது!


பண்பால் ஒத்து இருந்தால்தான் 

உண்மை யான ஒப்பாகும்!


நீதி நல்லறம் இவைகளுடன்

பிறருக் கிங்கே பயன்படுவோர்

பண்பை உலகம் புகழ்ந்துரைக்கும்!


ஒருவனை இங்கே விளையாட்டாய்

இகழ்ந்து பேசினால் புண்படுவார்!

பகைவன் மனமும் புண்படாமல்

பேசுவோர் தானே பண்புள்ளோர்!


பண்புடை யோர்கள் வாழ்வதாலே

மண்ணகம் இங்கே தழைக்கிறது!

இல்லை என்றால் அழிந்துவிடும்!


பண்பே இல்லா மானிடர்கள்

அரம்போல் அறிவுக் கூர்மையைப்

படைத்தவர் எனினும் மரம்போல்தான்!


நட்பைத் தவிர்த்துப் பகைவளர்க்கும்

மனித ரிடத்தும் பண்பின்றி

வாழும் வாழ்க்கை இழுக்காகும்!


கலந்து பேசும் மனமின்றி

வாழும் நிலையைக் கொண்டவர்க்குப்

பகலில் கூட இவ்வுலகம்

இருளில் இருப்பது போல்தோன்றும்!


பண்பே இல்லா மனிதர்கள்

தேடி வைத்த செல்வங்கள்

பாத்திரக் கேட்டால் பாலிங்கே

திரிந்து கெடுதல் போலாகும்!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home