Thursday, March 26, 2026

மானம்--97

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

         மானம் -- 97

----------------------------------------------------------------

தடம்மாறிப் போகாமல் வாழவைக்கும் கவசம்!

----------------------------------------------------------------

அருமை பெருமை வந்தாலும்

குடிப்பெயர் கெடுத்தால் தவிர்த்துவிடு!


புகழை நாடும் நிலையெனினும்

குடியின் பெருமையைப் பாதிக்கும்

செயலை என்றும் செய்யமாட்டார்!


செல்வச் செழிப்பில் பணிவுவேண்டும்!

வறுமையில் செம்மை துணிவுவேண்டும்!


ஒழுக்கம் தவறி நடப்பவரை

தரையில் விழுந்த தலைமுடிக்கே

இணையாய்க் கருதி நகைத்திடுவார்!


இழிந்த செயலோ குன்றிமணி

அளவே எனினும் செய்தவரோஅ

மலைபோல் நிமிர்ந்தே இருந்தாலும்


தாழ்வின் மடியில் துடித்திடுவார்!

இகழ்வோர் வாசலைச் சார்ந்திருந்தால்

புகழும், வானக வாழ்வுமில்லை!


மதியாப் பகவர் பின்சென்று

வாழ்வதைக் காட்டிலும் உயிர்துறத்தல்

பெருமைக் குரிய சிறப்பாகும்!


மானம் காக்கும் நிலைவிட்டு

உடலைப் பேண எண்ணுவது

இன்னுயிர் காக்கும் மருந்தாமோ?


கவரி மானோ மயிரிழந்தால்

உயிர்ரை மாய்த்தே அழிந்துவிடும்!


அதனைப் போன்ற மாந்தர்கள்

மானம் கெட்டு வாழமாட்டார்!


இழிவைத் தவிர்த்தே உயிர்துறப்போர்

புகழை உலகம் வணங்குமென்றும்!


0 Comments:

Post a Comment

<< Home