பகைமாட்சி--87
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
பகைமாட்சி--87
---------------------------------------------------------------
பக்குவமும் அணுகுமுறையும் பகைவரைக் கையாளும் ஆயுதங்கள்
---------------------------------------------------------------
வலிமை மிகுந்தோர் பாய்ந்துவந்தால்
பகையைத் தவிர்த்துப் பணிந்துவிடு!
வலிமை யற்றோர் சீறிவந்தால்
எதிர்த்து நிற்கத் துணிந்துவிடு!
சேர்ந்தோர் மீதோ அன்பில்லை,
வலிமை மிக்கத் துணையில்லை,
தனக்கும் ஆற்றல் வலிமையில்லை!
இவரோ பகையை வெல்லமாட்டார்!
அச்சம் உறுதி இல்லாதோர்
மற்றவ ரோடு இணங்காதோர்
ஈகைப் பண்பே இல்லாதோர்
இவரைப் பகைவர் வென்றிடுவார்!
ஒழுக்கம் இன்றி வாழ்பவனை
பகைவர் எளிதில் தோற்கடிப்பார்!
எதெற்கெடுத் தாலும் சினம்கொள்வோர்
சிற்றின் பத்தில் வெறிகொண்டோர்
பகையை வெல்தல் எளிதாகும்!
பகையை எதிரிகள் விரும்பிடுவார்!
சேர்ந்தே இருந்து கவிழ்ப்பவனை
எதைக்கொடுத் தேனும் பகையாக்கு!
குற்றம் புரியும் குணக்கேடர்
பகைமைப் பகைவருக் கெளிதாகும்!
அறிவிலி, அச்சம் கொண்டவர்கள்
பகையோ வெற்றியை எளிதாக்கும்!
கற்காத மாந்தரை வென்றிடலாம்!
செயலை முடிக்க முடியாதோர்
உலகில் புகழ்பெற முடியாது!

0 Comments:
Post a Comment
<< Home