Thursday, March 26, 2026

இகல் -- 86

 திருக்குறள் குழந்தைப் பாடல்

--------------------------------------------------------------

        இகல் -- 86

---------------------------------------------------------------

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

---------------------------------------------------------------

கூடி வாழ மறுக்கின்ற

அற்பக் குணந்தான் இகலாகும்!


சேர்ந்து வாழும் எண்ணமின்றி

வெறுப்பை உமிழ்ந்து நின்றாலும்

அவரை வெறுத்தல் பண்பல்ல!

அரவ ணைத்தல் பெருந்தன்மை!


வேற்றுமை என்னும் மனநோயை

மனதை விட்டே நீக்கிவிட்டல்

அழியாப் புகழுடன் வாழ்ந்திடலாம்!


துனபந் தன்னில் பெருந்துன்பம்

உட்பகை கொண்டு பிரிவதுதான்!


பகையை நீக்கும் பண்பிருந்தால்

அதுவே சிறந்த பேரின்பம்!


வேற்றுமை ஆடும் நேரத்தில்

ஒற்றுமை நாடும் உள்ளத்தை

வென்றவர் உலகில் யாருமில்லை!


பிரிவை விரும்பும் அறிவிலிகள்

வெற்றியின் நீதிப் பொருளறியார்!


வேறு பாட்டை ஒதுக்கிவிட்டால்

அதுபோல் செல்வம் ஏதுமில்லை!


அதையே மாந்தர் வரவேற்றால்

அதுபோல் கேடும் வேறில்லை!


நன்மை கொழிக்கும் நேரத்தில்

வேறு பாடு கொள்வதில்லை!


துன்பம் உலுக்கும் நேரத்தில்

காரணம் இன்றிப் பகைகொள்வார்!


வேறு பாட்டால் துன்பந்தான்!

இணக்கம் கொண்டால் இன்பந்தான்!


0 Comments:

Post a Comment

<< Home