படைமாட்சி--77
திருக்குறள் குழந்தைப் பாடல்!
----------------------------------------------------------------
படைமாட்சி--77
----------------------------------------------------------------
படையின் வலிமை நாட்டின் வலிமை!
----------------------------------------------------------------
பகையின் வலிமையைப் பந்தாடும்
வலிய படையே நற்செல்வம்!
போரில் அழிந்தே நிலைகுலைந்தும்
நாட்டின் சொந்த மக்களுக்கு
துணிவே வெற்றித் துணையாகும்!
எலிகள் கூடி ஒலித்தாலும்
பாம்பின் இரைச்சல் கேட்டவுடன்
ஓடி ஒளிந்து மறைந்துவிடும்!
பிறரால் வெல்ல முடியாத
அடிமை கொள்ள முடியாத
படையே அரசின் வீரமாகும்!
சாவைத் துணிந்தே எதிர்க்கின்ற
திறமை தானே படைவலிமை!
வீரம் மானம் நம்பிக்கை
நல்ல வழியில் நடைபோடல்
நான்கும் படைக்குச் சிறப்புகளாம்!
பகைவர் படையில் முன்னணியில்
வருவோர் தம்மைத் தடுத்தேதான்
மோதி அழித்தல் படைவலிமை!
வீரமும் ஆற்றலும் இல்லாமல்
அணிகள் வகுத்து நடைபோடும்
தோற்றப் பொலிவால் பெருமைபெறும்!
சேதம் வறுமை மனக்கசப்பு
இல்லாப் படையே வெற்றிபெறும்!
ஆற்றல் உள்ள படைவீரர்
இருந்த போதும் வழிநடத்தும்
தலைவன் இல்லாப் படையிங்கே
பகையை எதிர்க்க முடியாது.

0 Comments:
Post a Comment
<< Home