நட்பு--79
திருக்குறள் குழந்தைப் பாடல்!
----------------------------------------------------------------
நட்பு --79
----------------------------------------------------------------
நட்பின் மகிமை -- வாழ்வின் பெருமை!
---------------------------------------------------------------
நட்பைப் போல உறவில்லை!
காக்கும் கரமும் வேறில்லை!
அறிஞர் நட்பு வளர்பிறையாம்!
அறிவிலி நட்பு தேய்பிறையாம்!
படிக்கப் படிக்க நூலின்பம்!
பழகப் பழகப் பண்பாளர்
நட்பில் வளரும் இன்பந்தான்!
கூடிக் களிப்பது நட்பல்ல!
தவறைத் திருத்துதல் நட்பாகும்!
நேரில் பழகா விட்டாலும்
மனதின் உணர்வே நட்பாகும்!
முகத்தின் பொய்மை நட்பன்று!
அகத்தின் உண்மை நட்பாகும்!
அழிவில் இருந்து தடுத்தேதான்
அழிவே வரினும் உடனிருந்து
உதவி செய்தல் நட்பாகும்!
ஆடை நழுவும் நேரத்தில்
தடுக்கும் கரம்போல் முன்வந்து
துன்பம் தடுப்பது நட்பாகும்!
நட்பின் சிகரம் எதுவென்றால்
மாறு பாடே கொள்ளாமல்
நண்பனைத் தாங்கும் நிலையாகும்!
நண்பரை நண்பர் புகழ்ந்துரைத்தால்
நட்பின் பெருமை மங்கிவிடும்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home