புல்லறிவாண்மை--85
திருக்குறள் குழந்தைப் பாடல்
--------------------------------------------------------------
புல்லறிவாண்மை--85
---------------------------------------------------------------
அறிவாற்றல் இருந்தால் உலகம் மதிக்கும்
இல்லை என்றால் உலகம் நகைக்கும்!
அறிவில் லாமை இல்லாமை!
மற்றவை எல்லாம் இல்லாமை
என்றே உலகம் கருதாது!
அறிவிலி ஒருவன் மனமுவந்து
பொருளைத் தந்தால் பெறுபவனின்
நல்வினைப் பயனே என்றுரைப்பார்!
அறிவிலி இங்கே ஏற்படுத்திக்
கொள்ளும் தீமையைப் பகைப்புலமும்
செய்ய முடியாத் தீமையாம்!
தன்னைத் தானே அறிவுடையோன்
என்றே புகழ்தல் அறிவின்மை!
நூலைப் படிக்கா விட்டாலும்
படித்தது போல நடிப்பவர்கள்
படித்ததைக் கூட நம்பமாட்டார்!
மனதில் காக்கும் ரகசியத்தை
வெளியே சொல்லும் அறிவிலியோ
தனக்குத் தானே துன்பத்தை
தேடிக் கொண்டு தத்தளிப்பான்!
கேட்க மாட்டார் சொன்னாலும்!
தனக்கும் செய்யத் தெரியாது!
இந்தத் தன்மை உள்ளவரோ
இறுதி வரைக்கும் நோய்போலாம்!
அறிந்தவன் போல அறிவிலியோ
எண்ணி நடிப்பான்! அவனைத்தான்
அறிவுடை யோனாய் மாற்றிடவே
முயல்வோன் அறிவிலி யாகிடுவான்!
அனைவரும் உண்டு என்பதையோ
இல்லை யென்று சொல்பவனை
உலகம் பேயாய்க் கருதிடுமே!

0 Comments:
Post a Comment
<< Home