பகைத்திறம் தெரிதல் -- 88
திருக்குறள் குழந்தைப் பாடல்
---------------------------------------------------------------
பகைத்திறம் தெரிதல் -- 88
--------------------------------------------------------------
பகைவரின் இயல்புகள் அறிவது அறிவுடைமை!
--------------------------------------------------------------
பகையோ தீங்கை விளைவிக்கும்!
அதையே சிரித்து விளையாட்டாய்
பொழுது போக்காய் விரும்பாதே!
வில்லை உடைய வீரரிடம்
பகையைக் கொண்ட போதிலுமே
சொல்லை ஏராய்க் கொண்டிருக்கும்
அறிஞ ரோடு பகைக்காதே!
தனியாய் இருந்தும் பலபேரைப்
பகைத்துக் கொள்வோன் அறிவிலிதான்!
பகையை நட்பாய் மாற்றுகின்ற
பக்குவப் பண்பே பெருமையாம்!
துணையே இன்றி வாழ்பவர்க்கு
இருவர் பகைவ ராகிவிட்டால்
ஒருவரைத் துணையாய் மாற்றவேண்டும்!
ஆய்ந்து தெளிந்து பழகாத
ஒருவரை நம்பக் கூடாது!
துன்பம் ஆட்டும் நேரத்தில்
நடுநிலை கவனம் கொள்ளவேண்டும்!
நமது துன்பம் அறியாத
நண்ப ரிடத்தில் சொல்லாதே!
நமது குறையைப் பகைவரிடம்
எடுத்துச் சொல்லக் கூடாது!
வழியை அறிந்து பொருள்சேர்த்துப்
பாது காப்பாய் வாழ்பவனைக்
கண்டால் பகைவன் பயப்படுவான்!
முள்மரந் தன்னை இளம்நிலையில்
கிள்ளி எறிதல் நன்றாகும்!
முற்றி விட்டால் வெட்டுவோரை
காயப் படுத்தித் துடிக்கவைக்கும்!
பகைவர் செருக்கை அறிந்திருந்தும்
ஏளன மாக விட்டுவிட்டால்
மூச்சு விடுகின்ற பொழுதுக்குள்
பகைவர் அழிப்பார் உணர்ந்துகொள்!

0 Comments:
Post a Comment
<< Home