காலம் அறிதல் --49
----------------------------------------------------
காலம் அறிதல் --49
-------------------------------------------------------
பகற்பொழுதில் கோட்டானை வென்றுவிடும் காகம்!
பகைப்புலத்தை வெல்வதற்குப் பார்க்கவேண்டும் நேரம்!
காலத்திற் கேற்றபடி செயல்புரியும் ஆற்றல்
செல்வத்தை நிலையாகக் கட்டுகின்ற கயிறாம்!
செயல்முடிக்கத் தந்திரமும் ஆற்றலுடன் நேரம்
ஒருங்கிணைந்தால் முடியாத செயலிங்கே உண்டோ?
இடம்பொருள் ஏவலையே அறிந்துசெயல் முடித்தால்
உலகத்தை எளிதாக வசமாக்க முடியும்!
ஊக்கத்தைக் கொண்டவர்கள் காத்திருக்கும் கோலம்
பாய்வதற்குப் பின்வாங்கும் கிடாநிலை ஆகும்!
பகைவரிங்கே சீறிவந்தால் பதறாமல் நின்றே
இடங்காலம் பார்த்தேதான் தாக்குவார்கள் வென்று!
காலநேரம் பார்த்தேதான் காத்திருக்கும் கொக்கு!
இரையங்கே துள்ளிவரும் பிடித்துவிடும் கவ்வி!
நம்முடைய செயல்களையும் இப்படித்தான் நாமும்
காத்திருந்து உரியநேரம் செய்யவேண்டும் இங்கு.

0 Comments:
Post a Comment
<< Home