குறுந்தொகை 5
குறுந்தொகை
பாடல் 05-
நரிவெரூஉத் தலையார்
அதுகொல், தோழி! காம நோயே?-
வதிகுருகு உறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடுஒல், லாவே?
---------------------------------------------------------------------------------------------------------
குருகுகள் தூங்க நிழலுடைய புன்னை
கரைவந்து முட்டி உடைந்துபோகும் பாங்கின்
அலைகடல் கொண்ட நெய்தல் தலைவன்
கலையழகை விட்டுப் பிரிந்ததால் ஏங்கி
அலைகளும் நீர்தெளித்துக் கண்ணீர் தெளிக்க
அலைபாயும் தாமரைக் கண்களோ தூக்கம்
கலைத்தே கண்ணுறக்கம் இன்றித் தவிக்கும்
நிலைதானோ காமநோய்? சொல்.

0 Comments:
Post a Comment
<< Home