குறுந்தொகை 6
குறுந்தொகை
பாடல் 6 –
பதுமனார் துஞ்சாதேனே!
நள்ளென்ற றன்றே யாமம்; சொல்அவிந்து,
இனிதுஅடங் கினரே,மாக்கள்; முனிவுஇன்று;
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.
----------------------------------------------------------------------------------------------------------------
பிரிந்துசென்றான் என்தலவன்! தோழி! இருளில்
இரவு நடுயாமம் பேரமைதி கொள்ள
அரவமின்றி மக்கள் முடங்க,கோபச்
சுவடின்றி மண்ணகமே தூக்கத்தில் மூழ்க
தவிக்கின்றேன் தூக்கமின்றி நான்மட்டும் இங்கே!
பிரிவின் துயரப் பிடி.

0 Comments:
Post a Comment
<< Home