Saturday, October 18, 2008

சிறுவனின் ஏக்கம் !

குருவிகளே! குருவிகளே!
கூடுகட்டி வாழ்கின்ற
மரக்கிளையை நனைத்தேதான்
மழைக்கரங்கள் களிக்கிறதே!

பரபரப்பாய் எட்டித்தான்
பார்த்தேதான் கலங்குகின்றீர் !
அரவணைக்கும் தாய்க்குருவி
அணைக்கிறதே சிறகுகளால் !

ஓரமாகக் குடிசையிலே
ஒதுங்கித்தான் நின்றேதான்
பார்க்கின்றேன் தவிப்புடனே!
பையன்நான் சிறுவன்தான்!

உங்களைப்போல் நானுமிங்கே
ஒடுங்கித்தான் நிற்கின்றேன்!
உங்களுக்கோ தாயுண்டு!
உலகத்தில் எனக்கில்லை!
-----------------------------------
நன்றி:பாரதமணி அக்டோபர் 2008 இதழ்
------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home