மனமே காரணம் !
எவ்விதப் பிடிப்பும் இன்றி
இவ்வுலக வாழ்க்கை தன்னைக்
கவ்வியே வாழ்ந்து காட்டும்
கலையினை எங்கே கற்றார்?
வரும்படி ஏது மில்லை!
வழிவகை ஒன்று மில்லை!
தருபவர் யாரு மில்லை!
தலைநிமிர்ந் தேதான் வாழ்வார்!
உறங்குதல் கொஞ்ச நேரம்!
உண்பது கிடைத்த தைத்தான்!
வறட்சியே வாழ்க்கை! ஆனால்
வறட்சியோ மனத்தில் இல்லை!
இருப்பதில் திருப்தி காணும்
இயல்பினைப் பெற்று விட்டால்
உருக்கிடும் துயரம் கூட
உருகிடும் பனியாய் மாறும்!
0 Comments:
Post a Comment
<< Home