நிழலும் சாடும்
===================
எனக்கென எதுவும் இல்லை!
எனக்கென எவரும் இல்லை!
எனக்கெனத் துடிக்கும் உள்ளம்
எனக்கெனத் துடிக்க வில்லை!
அறுபதில் இறப்பு என்றால்
அனைவரும் வாழ்த்தக் கூடும்!
அறுபதைத் தாண்டி இந்த
அவனியில் வாழ்தல் பாவம்!
அறுபதைத் தாண்டி வாழ்ந்தால்
அனைவரும் வெறுத்துப் பார்ப்பார்!
நொறுங்கிடும் உள்ளம் நோக
நொந்துதான் வாழ்வோம்! வாழ்வோம்!
என்னதான் நியாயம் என்றே
எப்படிச் சொன்ன போதும்
நம்நிழல் கூட நம்மை
நகைத்துதான் சாடும்!சாடும்!
இறப்பதை வெறுக்க வில்லை!
இருப்பதை விரும்ப வில்லை!
இறப்பது என்றோ ? என்றோ?
எனெக்கெவர் சொல்வார் இங்கே?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home