பழமொழி!
வீட்டுக்குவீடு வாசப்படி!
வீட்டுக்கு வீடிங்கே வாசப் படிகள்தான்!
வீட்டில் மொசைக்கென்றால் வண்ணவண்ணச் சிக்கல்கள்!
வீட்டில் கருங்கல்! சொரசொரப்பாய் சிக்கல்கள்!
வீட்டிலே ரெட்ஆக்சைட்? ஊடலும் கூடலும்!
வீட்டில் பளிங்கா? நழுவலாகச் சிக்கல்கள்!
வீட்டுக்குள் ஆயிரம் சிக்கல்கள்! தோன்றினாலும்
வீட்டுக்குள் ஆடி அடங்கவேண்டும்! இல்லையேல்
நாட்டுக்குள் நாநடனம் செய்ய அனுமதித்தால்
வீட்டின் மதிப்பழியும் சொல்.
0 Comments:
Post a Comment
<< Home