Wednesday, September 09, 2020

கவிஞர் ஞானசேகரனுக்கு வாழ்த்து

 AACEG is inviting you to a scheduled Zoom meeting.

Topic: AACEG Zoom Meeting

Teachers Day Celebrations

Time: Sep 9, 2020 05:00 PM India

Join Zoom Meeting

Meeting ID: 813 3017 5185

Passcode: 068239


வாழ்த்துக்கவிதை 

கவிஞர் ஞானசேகரன்.


பன்முக ஆற்றல்கள் பன்முக ஆளுமைகள்

தன்னகத்தே கொண்டிருக்கும் ஆசான்கள் சான்றோர்கள்

தங்கள் அனுபவத்தை நன்கு பகிர்ந்தனர்!

தங்களை வாழ்விலே சாதனை யாளராய்த்

தன்னலம் இன்றி செதுக்கிய சிற்பிகளாம்

பொன்மன ஆசிரியரை எண்ணி வணங்கினர்!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


கவிஞர் ஞானசேகரன்:


உயரத்தில் வாழ்ந்தாலும் தன்னை உலகில்

உயர்த்திய ஆசானை வாழ்த்தி, கவிதை

வழங்கி வணங்கினார்  சேகரன்தான்! கேட்டோம்!

அருமைக் கவிதைக்கு வாழ்த்து.


கப்பல்கள் வந்துபோகும் துறைமுகம் அல்லநீங்கள்

கப்பல்  கரைசேர  காட்டும் விளக்கமென்றார்!

அற்புத மான கருத்தைக் கவிதையின்

முத்தாய்ப்பாய்த் தந்தமைக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home