காரக் குழம்பு
காரக்குழம்பு
கத்தரிக்காய் வெண்டைக்காய் பாகற்காய் சுண்டைக்காய்
மஞ்சள் நிறப்பூச(ணி) மற்றும் கருணையுடன்
இத்தகைய காய்களில் ஒன்றைப் பயன்படுத்தி
வைக்கலாம் காரக் குழம்பு.
செய்முறை
மண்சட்டிக் குள்ளே அளவுடன் நல்லெண்ணெய்
மற்றும் வடகமோ அல்லது வெந்தயம்
சீரகம் மற்றும் கடுகு பொறித்ததும்
வெங்காயம் பூண்டு கருவேப் பிலையுடன்
தக்காளி சேர்த்து வதக்கவும்! காய்போட்டு
மஞ்சள், புளி,குழம்பு மிளகாய்த்தூள் எல்லாம் கலந்தே அரைத்துவைத்த தேங்காயை
உள்ளிட்டால் உண்ணத் தயார்தான் இக்குழம்பு!
நல்ல சுவைதான் குழம்பு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home