Saturday, November 21, 2020

சாம்பார.

 சாம்பார் தயாரித்தல்!


வெங்காயம், பூசணிக்காய், நூல்கோல், அவரைக்காய்

முள்ளங்கி, கத்தரிக்காய், டர்னிப், உருளையுடன்

சௌசௌ, முருங்கையும், வெண்டைக்காய், பீன்ஸ்கேரட்

இவ்வளவு காய்களில் ஒன்றைப் பயன்படுத்தி

நல்ல சுவையுடன் சாம்பார்தான் வைப்பார்கள்

துள்ளிச் சுவைத்திருக்கும் நா.


செய்முறை


துவரம் பருப்புடன் சீரகம்  பூண்டு

அளவாக மஞ்சள்தூள் சொட்டிரண்டு எண்ணெய்

அளவாக தண்ணீருடன் வேகவைத்து காயும்

மிளகாயும் வெங்காயம் தக்காளி சேர்த்து

அளவாக சாம்பார் பொடியுடன உப்பும்

கலந்து கொதிக்கவைத்து கொஞ்சம் புளிநீர்

கலந்ததும்  சீரகம் வெந்தயம் மற்றும் கடுகு

வரமிளகாய் சேர்த்துப் பெருங்காயத் தூளைக்

கலந்தேதான் தாளி!  கருவேப் பிலையும்

அளவாக மல்லியும் தூவினால் சாம்பார்

பளபளப்பாய்த்  துள்ளுமே இங்கு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home