Saturday, December 19, 2020

29 கள்ளாமை


 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

29. கள்ளாமை

குறள் 281:

எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

முள்ளாய் உறுத்தும் இகழ்ச்சியின்றி வாழ்வதற்குக்

கொள்ளை,திருட்டைத் தவிர்.

குறள் 282:

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வே மெனல்.

கள்ள வழியில் கவர்வேன், எனமனத்தால்

உள்ளுவதுத் தீதே! உணர்.

குறள் 283:

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்

தாவது போலக் கெடும்.

களவால் பொருள்கள் பெருகுவதாய்த் தோன்றும்!

அழியும் அனைத்தும் விரைந்து.

குறள் 284:

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமந் தரும்.

களவாடும் ஆசை நிறைவேறும்!

ஆனால்

வளையவந்து தாக்கும் துயர்.

குறள் 285:

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

பொருளைத் திருடுகின்ற ஆசை

இருந்தால்

அருள்பண்பு போய்விடும் சொல்.

குறள் 286:

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

வரம்புக்குள் வாழாதோர் மாற்றார் பொருளைக்

களவாட நாடுவார் சாற்று.

குறள் 287:

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்க ணில்.

அளவறிந்து வாழ்வோ ரிடத்தில்  பொருளைக்

களவாடும் வஞ்சமிருக் காது.

குறள் 288:

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

களவுமனம் வஞ்சகத்தை நாடும்!  நேர்மை

உளமோ அறவழிக்கே தூது.

குறள் 289:

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.  

அளவைத் தவிர்ப்போர் வரம்பு கடப்பார்!

அழியும் அவர்வாழ்க்கை இங்கு.

குறள் 290:

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு.

களவாடி வாழ்வோரைத் தன்னுயிரே தூற்றும்!

தவிர்த்தால் புகழுலகம் உண்டு.

மதுரை பாபாராஜ்






























0 Comments:

Post a Comment

<< Home