Wednesday, January 06, 2021

62 ஆள்வினை உடைமை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

62 ஆள்வினை உடைமை

குறள் 611:

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.


முடியாதே என்றே நினைக்காதே!  நம்மால்

முடியுமென்ற ஆற்றலே வித்து.

குறள் 612:

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.


செய்யும் செயலை முழுவதும் செய்யவேண்டும்!

செய்யவில்லை என்றால் இழுக்கு.

குறள் 613:

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னுஞ் செருக்கு.


உதவிசெய்யும் பண்போ விடாமுயற்சி என்னும் 

கடமையில் உள்ளது சொல்.

குறள் 614:

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்.

களத்திலே கோழைகள் சுற்றுகின்ற  வாளும்

முயற்சியே இன்றி உதவிசெய்வேன் 

என்றே

உரைப்பதும்  எப்பயனும் இல்.

குறள் 615:

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.


தன்னலமின்றி செய்யும் செயல்வீரன் தன்சுற்றத்

துன்பத்தைத் தாங்குகின்ற தூண்.

குறள் 616:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.


முயற்சி வளங்களைச் சேர்க்கும் நிலையாய்!

முயலாமை  ஏழ்மை தரும்.

குறள் 617:

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்.


முயற்சியின்றி வாழ்வோரோ சோம்பேறி

ஆவார்!

முயற்சியோ  ஊக்கம் தரும்.


குறள் 618:

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்

தாள்வினை இன்மை பழி.


புலன்குறை என்றும் குறையல்ல! நாமோ

முயற்சியற்ற பண்பே குறை.


குறள் 619:

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.


இறைவனால் ஆகா தெனினும் முயற்சி

விதைத்தால் பயனுண்டு பார்.

குறள் 620:

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்.


முயற்சி இருந்தால் விதியையும் வென்று

தலைநிமிர்ந்து வாழலாம் செப்பு.































0 Comments:

Post a Comment

<< Home