Wednesday, January 06, 2021

ஆரியர் கயிறாடு பறை!பாலாவின் சங்கச்சுரங்கம்

 கவிஞர் பாலாவின் சங்கச்சுரங்கம்!

இணையப்பத்து -- மூன்றாம் பத்து

நான்காம். உரை!

தலைப்பு: ஆரியர் கயிறாடு பறை!


நாள்: 09.01.21 சனிக்கிழமை மாலை 6.30

ID 817 9565 5462

குறுந்தொகை

பாடல். 7-- பெரும்பதுமனார், 

வில்லோன் காலன கழலே, தொடியோள்

மெல்அடி மேலன சிலம்பே; நல்லோர் 

யார் கொல்? அளியர் தாமே- ஆரியர்

கயிறுஆடு பறையின்,கால்பொரக் கலங்கி,

வாகை வெண் நெற்று ஒலிக்கும்

வேய் பயில் அழுவம் முன்னி யோரே.

--------------------------------------------------------------------

குறுந்தொகை 

பாடல் 7

வில்லேந்தி,காலில் கழலணிந்து செல்கின்றான்!

மெல்லியலாள் கைவளையல் காற்சிலம்பும் பூண்டுள்ளாள்!

இவ்விருவர்  யாரோ? கயிற்றில் நடக்கின்ற 

துள்ளல்  கழைக்கூத்தில்  ஊக்கப் பறையடிப்பார்!

அவ்வொலிபோல் வாகை விதைக்கூடு காற்றிலே

துள்ளும் ஒலிகேட்கும் மூங்கில் நிறைந்திருக்கும்

பல்லச்சக் காட்டில் நடந்துவரும் இவ்விணையர்

எவ்வூரோ? யாரோதான்? சொல்.

மதுரை பாபாராஜ்

------------------------------------------------------------------

குறுந்தொகைப் பாடல். வரியெடுத்துப் பேசும்

நறுந்தமிழ்ப் பேச்சாளர் பாலாவை வாழ்த்து!

செறிவும் தெளிவும் கலந்த உரையின்

அறிவார்ந்த ஆற்றலை வாழ்த்து.

சங்கச் சுரங்கத்தில் ஒவ்வொரு வாரமும்

தங்கப் புதையலை விஞ்சும் கருத்துகள்

பங்கமின்றி பாலா தருகின்ற  விந்தைக்குப்

பஞ்சமில்லை கேட்போம் திரண்டு.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home