125 நெஞ்சொடு கிளத்தல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
125 நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1241:
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து.
நெஞ்சே! எனைப்படுத்தும் இந்தநோய் தீர்வதற்கு
நன்மருந்து சொல்லேன் எனக்கு.
குறள் 1242:
காத லவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழியென் நெஞ்சு.
அன்பர் வரவில்லை! நெஞ்சமே
நீவிரும்பிச்
சென்றால் அறியாமை தான்.
குறள் 1243:
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
அன்பர் பிரிவளித்தார்! நெஞ்சமே! நீயோ
இங்கிருந்து வாடுவதேன்? கூறு.
குறள் 1244:
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
நெஞ்சமே! அன்பரைக் காணநீ சென்றாலோ
கண்களையும் கூட்டிச்செல்! இல்லையென்றால் என்னையவை
தின்பது போல்வாட்டும் பார்.
குறள் 1245:
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
நம்மை விரும்பவில்லை நெஞ்சே! அதற்காக
நம்வெறுப்பைக் காட்டுவாயா நீ.
குறள் 1246:
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு
தையலிடம் ஊடிவிட்டுக் கூடவந்தால் சாடமாட்டாய்!
பொய்க்கோபம் இன்றுமட்டும் ஏன்?
குறள் 1247:
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேனிவ் விரண்டு.
நெஞ்சமே! காதலை அல்லது நாணத்தை
விட்டுவிடு! தாங்கேன் இரண்டு.
குறள் 1248:
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.
அன்பர் பிரிந்தாலும் பின்னால் அலைகின்ற
நெஞ்சமே பேதைதான் நீ.
குறள் 1249:
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
அவரெந்தன் உள்ளத்தில் இருக்கின்றார்! நெஞ்சே!
அலைந்தெவரைத் தேடுகின்றாய் நீ?
குறள் 1250:
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
பிரிந்தார் புறப்பொலிவு போச்சு! ஏங்கித்
திரிந்தேன் அகப்பொலிவும் போச்சு.
0 Comments:
Post a Comment
<< Home