126 நிறையழிதல்
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
126 நிறையழிதல்
குறள் 1251:
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
நாணமெனும் தாழ்ப்பாளால் மூடிய
பேரடக்கம்
பேணும் கதவையோ காதலன்புக் கோடரி
தூர்த்தே உடைக்கிற தே.
குறள் 1252:
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
காதல் இரக்கமின்றி என்னை நடுநிசியில்
ஆள்கிறதே தூக்கம் கலைத்து.
குறள் 1253:
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
மறைக்கின்றேன் காதலை! தும்மல்போல்
தோன்றி
வெளிவந்து காட்டிவிடும் சாற்று.
குறள் 1254:
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
மறையிறந்து மன்று படும்.
மனஅடக்கம் நம்பி மறைத்திருந்தேன்!
காதல்
கடந்துவந்து காட்டியதே ஊர்க்கு.
குறள் 1255:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று.
நம்மை வெறுத்தவர்பின் செல்லாது நிற்பது
நம்காதல் நோய்க்கில்லை சாற்று.
குறள் 1256:
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
பிரிந்தவர்பின் செல்வதற்குத் தூண்டுகின்ற காதல்
துடிக்கவைக்கும் துன்பம் கொடிது.
குறள் 1257:
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
காதலர் நாம்விரும்பும் ஒன்றினைச்
செய்தாலோ
நாணத்தை நாமறியோம் சாற்று.
குறள் 1258:
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
மனஅடக்கக் கோட்டையைத் தாக்கும் கருவி
மனக்கள்வன் சொல்கின்ற பாகுமொழிச் சொல்தான்!
அனலை அணைக்கும் புனல்.
குறள் 1259:
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
ஊடுவேன் என்றேதான் சென்றேன்! மனவேகம்
கூடலைத் தூண்டிவிட கூடினேன் அன்பருடன்!
ஊடலிலே தோற்றுவிட்டேன் வென்று.
குறள் 1260:
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
தீயில் கொழுப்பாய் உருகிவிடும் நெஞ்சுடையோர்
காதலர் கூடலில் ஊடலை ஏற்பாரோ?
சோதனயை ஏற்கமாட்டார் கூறு.
0 Comments:
Post a Comment
<< Home