Saturday, February 06, 2021

130 நெஞ்சொடு புலத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

130 நெஞ்சொடு புலத்தல்

குறள் 1291:

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீயெமக் காகா தது.


அவர்க்கே துணையாம் அவர்நெஞ்சம்! நீயும்

அவரிடம் செல்வதேன்? சொல்.

குறள் 1292:

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.


அன்பருக்கோ அன்பில்லை! கோபம் அடையமாட்டார்

என்றுநெஞ்சே செல்வதேன்? சொல்.

குறள் 1293:

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங் கவர்பின் செலல்.


கெட்டவர்க்கு நண்பரில்லை என்பதால்

அன்பரிடம்

நெஞ்சேநீ செல்கின்றா யோ?

குறள் 1294:

இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.


நெஞ்சமே! ஊடியபின் கூடுவதை எண்ணவில்லை!

உன்னிடம் யார்பேச? சொல்.

குறள் 1295:

பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.


அன்பர் பிரிந்துவிட்டால் அஞ்சுகின்ற நெஞ்சமோ

வந்தால் பிரிவாரோ என்றேதான் அஞ்சுதடி!

நெஞ்சே துயர்தான் உனக்கு.

குறள் 1296:

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.


அன்பர் பிரிவைத் தனிமையில் எண்ணினால்

நெஞ்சமென்னைத் தின்னும் உணர்வு.

குறள் 1297:

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்

மாணா மடநெஞ்சிற் பட்டு.


அன்பரை மறக்காத நெஞ்சுடன் சேர்ந்தேதான்

என்நாணம்  விட்டேன் மறந்து.

குறள் 1298:

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.


அவரை இகழ்தல் நமக்கிழிவென் றேதான்

அவர்பெருமை எண்ணுகின்றேன் நான்.

குறள் 1299:

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.


துன்பத்தில் நெஞ்சம் துணைவர வில்லையென்றால்

இங்கெவர் வந்திடுவார் கூறு.

குறள் 1300:

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.


நெஞ்சம் நமக்குறவில் லாதபோது மற்றவர்

அப்படி வாழ்தல் எளிது.
























0 Comments:

Post a Comment

<< Home