Friday, February 05, 2021

முனைவர் சங்கரசரவணன்

 வள்ளுவம் வகுத்த வாழ்க்கைப் பயணம்!

தமிழால் முடியும் 

முனைவர் சங்கர சரவணன்.வணக்கம்


திரு.இளங்கோ-- திரு.சி.ஆர் -- 

திரு சங்கர சரவணன்

முப்பால்கள் முக்கடலாய் ஆர்ப்பரிக்கும்

வள்ளுவத்தை

முக்கடல் சங்கமமாய் மூவரணி பேசியதை

அக்கறையாய்க் கேட்டேன்! மகிழ்ந்தேன்! 

திளைத்திருந்தேன்!

அத்தனையும் முத்துக்கள் தான்.

வலைத்தமிழ் இளங்கோ!

குறளோடு உறவாடு என்ற தலைப்பில் 

குறளறிந்த மாந்தரைப் பங்கெடுக்கச் செய்தே

அறப்பணி் யாற்றும் இளங்கோ எழுச்சி

அடக்கத்தை ஏந்தும் உயர்வு.

குறள்நெறிக் குரிசில் சி.ஆர்.

Evolutionary -- revolutionary!


அக்காலம் மட்டுமல்ல எக்காலும் நிற்கின்ற

முப்பால் கருத்துகள் இங்கே புரட்சிகர

நற்கருத்தை வள்ளுவம் ஏந்துவதைக்

கோடிட்டார்!

அற்புதம் ஆங்கிலச்சொல்! வாழ்த்து.


முனைவர் சங்கர சரவணன்


தமிழால் முடியும் தலைப்பிலே பேசி

தமிழ்நா டரசின் விருதுபெற்றே னென்று

தமிழால் உயர்ந்த நிகழ்வை உரைத்தார்!

தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

UPSC  தேர்வும் குறளும்

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் 

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயலென்றார் ஐயன்!

அரசுப் பணித்தேர்வுக் கேற்ப விளக்கம்

சரவணன் தந்ததை வாழ்த்து.


வள்ளுவத்தின் ஆர்வத்தை வாழ்க்கைப் பயணத்தில்

எப்படி எங்கிருந்து பெற்றேன் எனவிளக்கி

அற்புத மாக இயல்பாய் எடுத்துரைத்தார்!

நற்றமிழ் நாயகரை வாழ்த்து.



வள்ளுவரைப் பார்த்தால்  எப்படி? இப்படி?

சொல்லுகின்ற ஆற்றலைக் சொல்லி வியந்திடுவேன்!

பல்வேறு ஆற்றல் மிளிர்கின்ற சங்கரர்

பல்லாண்டு வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home