Tuesday, February 09, 2021

பாலாவின் சங்கச் சுரங்கம்

 சங்கச் சுரங்கம்

இணையவழிச் சொற்பொழிவுத் தொடர்

மூன்றாம் பத்து ஏழாம் உரை!


06.02.21

கவிஞர்.பாலாவுக்கு வாழ்த்து

தலைப்பு:

பெரும் கை யானை


சங்க இலக்கிய ஆழிக்குள் மூழ்கித்தான்

எங்கெங்கு யானைக் குறிப்பென்னும் முத்துக்கள்

கண்களுக் கெட்டியதோ அங்கெல்லாம் சென்றேதான்

கொண்டுவந்த பாலாவை வாழ்த்து.


புறத்தில் மிளிர்ந்த வரியைத் தலைப்பில்

சிறப்பாய் மகுடமாக்கி ஆர்வம் ததும்ப

சிறப்புகளை நேயர் அரங்கில் உலவ

நடத்திய பாங்கினை வாழ்த்து.


யானை உருவம் மலைக்கு நிகராக

யானை உடல்தோல் குடிசையின் கீற்றுக்கும்

யானையின் பாதம் உருளைக்கல் போலென்றும்

யானையின் தந்தமோ வாழைப் பழம்போல

தோன்றுவதைச் சொன்னார் ரசித்து.


கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது குறள்தன்னைக்

காணவைத்தார் காட்சியைச் சித்திரத்தால் கண்முன்னே!

தேனமுதம் பாலாவின் பேச்சு.


தரும் வளவன் பெருமையைக் கூறும்

வரிகளைக் காட்டி விளக்கிய ஆற்றல்

செழிப்பை உணர்ந்தோம் ஒவ்வொரு காட்சி

விழிகள் ரசித்தன பார்த்து.


யானை டாக்டர்!

களிறு எறிந்து பெயர்தல் கவிதை!


இந்த உரையிலே யானை மருத்துவர்

தொண்டை நினைவுறுத்திப் பேசினார்!

தன்விருப்பாய்

அன்பர் சுகுமாறன் நூலின் கவிதையை

நன்கு விளக்கினார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home