Monday, February 08, 2021

133 ஊடலுவகை

 இன்பத்துப்பால் நிறைவு

குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

133 ஊடலுவகை

குறள் 1321:

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கும் ஆறு.


அன்பர்மேல் தப்பில்லை!ஆனாலும் என்மேல்

அன்புகாட்ட ஊடல் கருவி.

குறள் 1322:

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும்.


ஊடல் அளிப்பது துன்பமே! அன்பரின்

காதலோ வாடினாலும் ஊடலால் அவ்வன்பின்

காதல் பெருமை பெறும்.

குறள் 1323:

புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து.


நிலத்துடன் நீர்கலந்தால்போன்றிருக்கும்  காதல்

உவந்தளிக்கும் அன்பருடன் ஊடுதல்போல் இன்ப

உலகந்தான் வேறுண்டோ? கூறு.

குறள் 1324:

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.


இன்பம் வளரத் துணைபுரியும் ஊடலுக்குள்

என்னுள்ள வன்மையைத் தாக்கும் படையுண்டு!

உண்மை நிலையிது தான்.

குறள் 1325:

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து.


அன்பர்மேல் தப்பில்லை! மென்தோள்

தவிர்ப்பதிலும் 

இன்பமுண்டே ஊடலில் சாற்று.

குறள் 1326:

உணலினும் உண்ட தறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.


உண்பதினும் சீரணித்தல் நல்லது! கூடலினும்

அன்பான ஊடல் இனிது.

குறள் 1327:

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும்.


ஊடலிலே தோற்றவரே வென்றவராம்!

வெற்றியைக்

கூடலின்பம் காட்டும் உணர்.

குறள் 1328:

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.


நெற்றி வியர்த்திடும் கூடலின் இன்பத்தை

மற்றும் ஒருமுறை ஊடிப் பெறுவேனா?

இப்படி நாடும் மனம்.

குறள் 1329:

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா.


ஏந்திழை ஊடட்டும்! நானிரந்து நிற்பதற்கு

நீளட்டும் இந்த இரவு.

குறள் 1330:

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.


காதலுக்கோ ஊடலின்பம்! ஊடல்

அளவறிந்தே

நீக்குதல் கூடலின்பம் கூறு.












































0 Comments:

Post a Comment

<< Home