Sunday, February 07, 2021

131 புலவி

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

131 புலவி

( அன்பால் ஊடிக் கொள்ளுதல்)

குறள் 1301:

புல்லா திராஅப் புலத்தை அவருறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது.


அன்பர் படும்துயரை  ஊடி ரசித்திருப்போம்!

நெஞ்சே தழுவாமல் ஊடு.

குறள் 1302:

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.


உணவிலே உப்பைப்போல் கொஞ்சநேர ஊடல்  

சுவைக்கும்! அதிகநேரம் என்றால் உணவில்

அதிகமான உப்புக்கே ஒப்பு.

குறள் 1303:

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல்.


ஊடலில் வாடியோரைக் கூடாமல் போவது

வாடியோரை வாட்டுதல் போல்.

குறள் 1304:

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று.


ஊடியோரை வாட்டுதல், வாடும் கொடிவேரைக்

கீழே அறுத்தழித்தல் போல்.

குறள் 1305:

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை

பூவன்ன கண்ணார் அகத்து.


மகளிரின் ஊடலே அன்பரின் பண்புக்

கழகுசேர்க்கும் தன்மையாம் சாற்று.

குறள் 1306:

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.


பெரும்பிணக் கில்லை, கனிந்தபழம் ஆகும்!

சிறுபிணக் கில்லையேல் பிஞ்சு.

குறள் 1307:

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொல் என்று.


கூடலின் காலமோ தாமத மாவதால் 

ஊடலிலும் துன்பமுண்டு சாற்று.

குறள் 1308:

நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்

காதலர் இல்லா வழி.


வருந்துகிறேன் என்றுணர காதலர் இல்லை!

வருந்துவதில் என்னபயன்? சொல்.

குறள் 1309:

நீரும் நிழல தினிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது.


நிழலருகில் நீரிருந்தால் இன்பம்! அன்பின்

நிழலிலே ஊடல் இனிது.

குறள் 1310:

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்

கூடுவேம் என்ப தவா.


ஊடலில் வாடவைத்த அன்பருடன் கூட

இசைவதே ஆசையினால் தான்.


























0 Comments:

Post a Comment

<< Home