Monday, February 08, 2021

132 புலவிநுணுக்கம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

132 புலவி்நுணுக்கம்

குறள் 1311:

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.


பெண்களின் கண்களோ உன்மார்பை மொய்த்தலால்

அன்பால் தழுவமாட்டேன் நான்.

குறள் 1312:

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.


ஊடி இருந்தபோது தும்மினார்! நீடுவாழ

வாழ்த்துவேன் என்றே நினைத்து.

குறள் 1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.


எனக்கு விருப்பமான மாலை அணிந்தேன்!

எவளுக்குக் காட்டவென்றாள் நொந்து.

குறள் 1314:

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.


யாரினும் நம்காதல் மேலென்றேன்! யாரைவிட?

யாரைவிட? என்றாள் துடித்து.

குறள் 1315:

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்.


இப்பிறவி வாழ்வில் பிரியமாட்டேன் என்றதும்

சட்டென் றழுதாள்! அடுத்த பிறவியில்

விட்டுப் பிரிவாயோ? என்று.

குறள் 1316:

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.


உன்னை நினைத்தேன்நான் என்றேன்!

மறந்ததேன்

என்னை? எனக்கலுழ்ந்தாள் கண்.

குறள் 1317:

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.


தும்மினேன்! வாழ்த்தினாள்! ஆனால்

யார்நினைக்கத்

தும்மினீர் என்றழுதாள் மாது.

குறள் 1318:

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.


தும்மலை நானோ அடக்க, உனைநினைக்கும்

அம்மகளை நானறியக் கூடா தெனமறைத்தீர்!

என்னவரே என்றழுதாள் பார்த்து.

குறள் 1319:

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.


ஊடலை நீக்கி நெருங்கினால், நீர்மற்ற

மாதுகளை இப்படித்தான் ஆள்வீரோ என்றேதான்

கோபத்தைக் கட்டவிழ்த்தா ளே.

குறள் 1320:

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.


காதலியின் கட்டழகைப் பார்த்திருந்தேன்! ஒப்பிட்டீர்

யாருடன் என்றாள் சினந்து.






























0 Comments:

Post a Comment

<< Home