இல்லத்தரசி வசந்தா பாபாராஜ் பிறந்த நாள்! நாள்: 17.10.1954--17.10.2021
இல்லத்தரசி வசந்தா பாபாராஜ் பிறந்த நாள்!
நாள்: 17.10.1954--17.10.2021
அகவை: 67/68
நேர்மறை எண்ணமே வாழ்வை உயர்த்துமென்று
நாள்தோறும் சொல்லிச் செயல்படும் உள்ளத்தால்
ஊக்கமும் உற்சாக உள்ளமும் கொண்டேதான்
ஏக்கமின்றி வாழ்கின்றாள் இங்கு.
குடும்பத்தார் சூழ குதூகல மாக
மிடுக்காக வாழ்க! மகிழ்ச்சியுடன் வாழ்க!
நறுந்தமிழ்போல் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வாழ்த்துகள் அளித்த இதயங்கள்
எங்களது வணங்கங்களும், இதயம் கனிந்த வாழ்த்துகளும்
மலர், சி. இரா குடும்பத்தினர்
வாழிய பல்லாண்டு
மனிதத் தேனீ
கவிஞர் பாபாவின்
வாழ்க்கைத் துணைநலமே!
இல்லறத்தை நல்லறமாய்
இயக்கும் இயக்குநரே!
பாடும் திறமையை
பாங்காய் கொண்டவரே!
அய்யா பாபாவின்
அன்பிற்கு மட்டுமல்ல!
ஆற்றலுக்கும் இணையான
இல்லத்து அரசியே!
இன்புற்று எந்நாளும்
இனிதே வாழ்ந்திட
இனிய நாளாம்
பிறந்தநாளில்
வாழ்க! வாழ்கவென்று
வாழ்த்தி மகிழ்கின்றேன்!
💐🙏🌷🙏🌺🙏🌹🙏🌸🙏
இமயவரம்பன்
🌷பிறந்தநாள் வாழ்த்து!
கவி பாபாவின் வசந்தா -பொலிவுடன் வாழ்க!🌷
புன்னகை குன்றாப் பொலிவுடன் மின்னிடும்
பொன்மனம் என்றும் பொலிந்திட - அன்பின்
உறவுகள் பேணியே உள்ளம் களித்தே
நிறைவுடன் வாழ்க நிலைத்து.
கவிஞர் மெய்ஞானி
அருமை ஐயா!
மகிழ்ந்தேன்!
அண்ணியாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
அன்னைத் தமிழ்போல வாழ்க பல்லாண்டு, வளமிகக் கொண்டாண்டு!
வணக்கம்!
இராமாநுசன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
சொ.இராம்குமார்
0 Comments:
Post a Comment
<< Home