Thursday, October 14, 2021

மாண்புமிகு APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!


மாண்புமிகு APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்!

நாள் 15.10.21

அப்துல் கலாமை வணங்குவோம்!

--------------------------------------------------------------

இராமேஸ் வரத் தீவினிலே

குழந்தை ஒன்று பிறந்தது!


அப்துல் கலாம் என்றேதான்

அதற்குப் பெயர் வைத்தனரே!


படிப்படி யாக வளர்ந்ததுவே

பக்குவ மாகப் படித்ததுவே!


தீவில் பிறந்த அப்துல்கலாம்

இந்திய தீப கற்பத்தின்


குடியரசுத் தலைவ ரானாராம்!

உழைப்பின் மூலம் உயர்ந்தாராம்!


அறிவியல் மேதை யாகத்தான்

அகிலம் போற்ற வாழ்ந்தாராம்!


குழந்தைகள் என்றால் குதூகலந்தான்!

குழந்தை யாக மாறிடுவார்!


இந்தியா இங்கே வல்லரசாய்

மாறும் என்றே எடுத்துரைத்தார்!


அந்தக்  கனவை நினைவாக்க

நாமெல் லோரும் உழைத்திடுவோம்!


வாழ்க வாழ்க அப்துல்கலாம்!

தமிழ்போல் வாழ்க பல்லாண்டு!


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home