Sunday, October 10, 2021

படித்ததில் பிடித்தது!


படித்ததில் பிடித்தது! 

யூ டியூப் கதைக்குக் கவிதை முயற்சி!


குருவியும் கிளியும்!


எதிர்மறை எண்ணத்தைக் கைவிட்டால் உயர்வு உண்டு.


மாந்தரிடம் உள்ள எதிர்மறைப் பண்புகளை

ஆசையுடன் பையில் குருவியோ சேகரித்து

சேகரிக்கும் பையை முதுகில் சுமந்தது!

சேகரித்த பையின் சுமை அதிகரிக்க

வான்குருவி தன்சிறகின் ஆற்றல் இழந்தது!

ஏனோ பறக்க முடியவில்லை அக்குருவி!

பார்த்தது நண்பன் கிளிதான்! குருவியிடம்

தூக்கி எறிந்துவிடு அப்பையை,! என்றது!

தூக்கி எறிந்த குருவி பறந்தது!

தேக்காதே என்றும் எதிர்மறை எண்ணத்தை!

தேக்கினால் நீயோ முடங்கிடுவாய்!என்றது!

நாமும் எதிர்மறை எண்ணத்தை தேக்காமல்

வாழ்ந்தால் உயர்வுண்டு சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home