நண்பர் கோவை பாலகிருஷ்ணன் காணொளிக்குக் கவிதை!
நண்பர் கோவை பாலகிருஷ்ணன் காணொளிக்குக் கவிதை!
விடுபடாத சிக்கல் விடுபடுமோ என்றே
நடுங்கித்தான் வாழாமல் நம்பிக்கை யோடு
தடைகளைச் சந்தித்தால் எங்கிருந்தோ வந்தே
விடுபடும் சிக்கல் விரைந்து.
மதுரை பாபாராஜ்
காட்டெருமைக் காலை முதலையோ கவ்விட
காலை விடுவிக்க் போராடும் காட்சிதான்!
காலை விடுவித்தே ஓட முயற்சியை
ஆர்வமுடன் காட்டெருமை மேற்கொள்ள அம்முதலை
தான்பிடித்த காலை விடாமல் இழுத்திருக்க
நீர்யானை எங்கிருந்தோ வந்தே விடுவிக்க
காட்டெருமை நம்பிக்கை வெற்றி அடைந்ததே!
வாழ்விலும் சோதனையை வெல்வதற்கு நம்பிக்கை
ஆழ்மனத்தில் வேண்டும்! உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home