Saturday, October 09, 2021

மதிப்பிற்குரிய திரு CN அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


மதிப்பிற்குரிய திரு CN அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


நாள் : 10.10.21


பென்னர் கணக்குத் துறையின் தலைவராக

எங்களுக்கு ஆசானாய் வேலை நுணுக்கத்தைக்

கற்றுக் கொடுத்தவர்! அன்பும் அரவணைப்பும்

பண்பாக வாழ்கின்ற பண்பாளர் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


இல்லத் தரசியின் வாழ்த்து மழைபொழிய

இல்லற முத்துக்கள் சூழ்ந்திருக்க வாழியவே!

நல்லறம் காத்துவாழும் சான்றோர் வளம்சூழ

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home