Tuesday, October 05, 2021

பெண்ணே பேராற்றல்!


பெண்ணே பேராற்றல்!


8. அம்புஜம்மாள்


1899--1981


புகழ்பெற்ற நல்ல குடும்பத்தில் தோன்றி

புகழுடன் வாழ்ந்தவர் அம்புஜம்மாள்! நாட்டின்

விடுதலைப் போராட்டந் தன்னில் கலந்து

சுடரொளி வீசினார் வாழ்த்து.


படிப்பிலே ஆர்வத்தைக் காட்டினார்! வீட்டில்

படிப்பினைக் கற்றுத் தருவதற்கு ஆசான்

வருகைதந்தார் அம்புஜம்மாள் கற்றார்!

தெளிந்தார்!

திருமண வாழ்வேற்றார் இங்கு.


குடும்பத்தின் துன்ப மயமான சூழல்

படுத்தியது!  காந்தியண்ணல் வந்தபோது இங்கே

இவர்வீட்டில் தங்கினார்! அண்ணல் எளிமை

இவரைக் கவர்ந்தது காண்.


அன்னிபெசன்ட் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்

பங்கேற்ற காரணத்தால் ஏற்றார் சிறைவாசம்!

அங்கங்கே போராட்டம், பங்கெடுத்துத் தொண்டுகள்

செய்தவரை வார்தா ஆசிரமத் திற்கழைத்தார்

அண்ணல்! அழைப்பினை ஏற்றேதான் சென்றுவிட்டார்!

அண்ணல் அளித்த மொழிபெயர்ப்பு வேலையைத்

தன்னால் இயன்றவரை செய்தார்!

சென்னைவந்தார்!

தன்னலமற்ற தொண்டினைப் போற்று.


அண்ணல் விரும்பிய வண்ணமே சென்னையில்

பெண்கள் படிக்க நிலையம் அமைத்துவிட்டார்!

சென்னையில் சீனிவாச காந்தி நிலையத்தை

அன்பாய் அமைத்தவரைப் போற்று.


தன்னலமின்றித் தொண்டாற்றி வாழ்ந்தவர்  அம்புஜம்மாள்!

எண்பத் திரண்டாம் வயதிலே காலமானார்!

பொன்னெழுத்தால் வாழ்க்கை மிளிரும் வரலாறு

என்றும் நிலைக்குமென்று வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home