Saturday, October 16, 2021

அம்மா! அம்மா!

 அம்மா! அம்மா!


எந்தநேரம் பிறந்தேனோ அம்மா அம்மா

எதற்காகப் பிறந்தேனோ அம்மா அம்மா


நொந்துபோன வாழ்வேனோ அம்மா அம்மா

எத்தனையோ சிக்கல்கள் அம்மா அம்மா

என்னைத்தான் வாட்டுவதேன் அம்மா அம்மா


ஒவ்வொரு நாளுமோ அம்மா அம்மா

ஏங்குவதும் ஏனோதான் அம்மா அம்மா

தூக்கமிங்கே வரவில்லை அம்மா அம்மா

துடிதுடித்தே வாழ்கிறேனே அம்மா அம்மா


நிம்மதிக்கு வழியுண்டோ அம்மா அம்மா

நிமிர்ந்தாலே தெத்தியடி அம்மா அம்மா

எத்தனைநாள் வேதனைகள் அம்மா அம்மா

இத்தகைய சோதனைகள் ஏனோதான் அம்மா!


மதுரை பாபாராஜ்

11.10.21-

இரவு மணி 10.00

0 Comments:

Post a Comment

<< Home