Thursday, March 26, 2026

நன்றியில் செல்வம் -- 101

 திருக்குறள் குழந்தைப் பாடல்

----------------------------------------------------------------

நன்றியில் செல்வம் -- 101

----------------------------------------------------------------

நன்மை தராத செல்வம்!

----------------------------------------------------------------

செல்வம் இருந்தும் கஞ்சனாக

பயன்படுத் தாமல் இருப்பவனோ

உயிருடன் இருந்தும் இறந்தவன்தான்!


பொருளைக் கொண்டே அனைத்தையுமே

சாதிக் கத்தான் முடியுமென்று

பிறருக் குதவி செய்யாமல்

வழ்பவன் பிறவி முழுமையில்லை!


பொருளைச் சேர்ப்பதே வாழ்வென்று

புகழைக் கூட விரும்பாமல்

வழ்பவன் உலகின் சுமையாவான்!


பிறருக் குதவி செய்யாமல்

வெறுப்பிற் கேதான் ஆளாவான்!

இறந்த பின்பு மிஞ்சுவது

இதுவென் றெண்ண முடியாது!


மனதால் மகிழ்ந்து கொடுக்காமல்

தனக்கும் இங்கே பயன்படாமல்

செல்வம் சேர்த்தால் பயனில்லை!


அப்படிச் சேர்த்த செல்வங்கள்

துடிக்க வைக்கும் நோயாகும்!


கொடுத்துத  வாத செல்வமோ

திருமணம் முடியா பேரிளம்பெண்

போல வாழ்வில் சருகாகும்!


எவர்க்கும் உதவாத செல்வங்கள்

ஊரின் நடுவே நச்சுமரம்

பழுத்தும் பயன்தரா நிலைகாணும்!


ஈவதும் இல்லை, அன்புமில்லை

அனுபவிக் காமல் வருத்தியும்

அறத்தை வெறுத்தும் வாழ்பவனின்

பொருளை மற்றவர் அனுபவிப்பார்!


செல்வந் தர்கள் சிலகாலம்

வறுமை நிலையில் வாழ்வதுவோ

மழையைப் பெய்யும் மேகமே

பொய்த்துப் போனது போலாகும்!


மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home