நல்குரவு -- 105
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
நல்குரவு -- 105
----------------------------------------------------------------
வறுமை தருகின்ற துன்பங்கள்
----------------------------------------------------------------
வறுமை போன்ற துன்பமெது?
வறுமை தவிர வேறில்லை!
வறுமைக் கொடுமை வந்துவிட்டால்
எந்தப் பிறவியும் துன்பந்தான்!
குடும்பப் பெருமை, புகழ்தன்னை
அழித்தே கெடுக்கும் இல்லாமை!
உயர்ந்த குடியில் பிறந்தவரும்
வறுமை வந்தால் கடுஞ்சொல்லைப்
பேச வைக்கும் சூழ்நிலைகள்!
வறுமைத் துன்பம் வந்துவிட்டால்
அடங்கும் அதற்குள் பிறதுன்பம்!
உயர்ந்த கருத்தைச் சொல்பவனோ
ஏழையாய் இருந்தால் செல்லாது!
அறநெறி மறந்து வறுமையிலே
துடிக்கும் ஒருவனை இவ்வுலகில்
பெற்ற தாயும் அயலான்போல்
கருதிப் பார்க்கும் நிலைவருமே!
நேற்று வதைத்தச் சுடுவறுமை
இன்றும் வந்தெனைக் கொன்றிடுமோ?
நெருப்புப் படுக்கையில் தூங்கிடலாம்!
வறுமையில் இல்லை கண்ணுறக்கம்!
உணவே இன்றி வாடுவோர்கள்
வாழ்வைத் துறக்க எண்ணாமல்
வாழ்வது உப்பு, கஞ்சிக்கு
கேடாய் மாறும் நிலையாகும்!
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home