Thursday, March 26, 2026

பெரியாரைப் பிழையாமை--90


திருக்குறள் குழந்தைப் பாடல்

------------------------;----------------------------------

பெரியாரைப் பிழையாமை--90

-----------------------------------------------------------

பெரியாரைத் துணைகொள் ; பெருவாழ்வு கிட்டும்!

-------------------------------------------------------

செயலை முடிக்கும் ஆற்றலுள்ள

ஏந்தலை இகழ்ந்து பேசாமல்

இருப்பதே தனக்குப் பாதுகாப்பாம்!


ஆற்றல் மிகுந்த பெரியாரை

மதிக்கா விட்டால் அதனால்தான்

வாழ்வில் துன்பம் வந்தடையும்!


பெரியார் சொல்லைக் கேட்காமல்

செயலைச் செய்தால்  தோல்விதான்!


அவரைத் தாக்கிப் பேசுவதோ

தானே வாழ்வில் அழிவதற்கே!


பெரியா ருக்குத் தீங்கிழைத்தல்

எமனை வலிந்தே அழைப்பதாகும்!


கொடியோர் சினத்தில் சிக்கியவர்

வாழ்வில் நிம்மதி இழந்திடுவார்!


நெருப்பில் விழுந்தவன் பிழைத்திடலாம்!

சான்றோர் நோகச் சீண்டியவன்

பிழைப்ப திங்கே அரிதாகும்!


சன்றோர் சினத்துக் காளானால்

செல்வம் எல்லாம் அழிந்துவிடும்!


மலைபோல் உயர்ந்தே வாழ்கின்ற

அற்புத ஆற்றல் படைத்தவரை

அற்ப மாக மதிப்பவர்கள்

தன்குடி அழியத் தாழ்ந்திடுவார்!


கொள்கை மிளிரும் பெரியோரோ

சினந்தால் அரசும் அழிந்துவிடும்!


பெரியார் சினத்தில் சிக்கிவிட்டால்

எத்தனை வலிமை இருந்தாலும்

தப்பிப் பிழைக்க முடியாது!

0 Comments:

Post a Comment

<< Home