மருமகள் மருத்துவர் திருமதி.சத்யப்பிரேமா கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் வாழ்த்து!
17.03.2020
கோலாரின் தங்கமகள் மாமதுரைத் தங்கத்தை
காலமெலாம் இல்லறத்தில் ஏற்கப் பிறந்தவர்!
பாலம்போல் இந்த உறவுகளை நன்கிணைத்தே
நாள்தோறும் வாழ்வதை வாழ்த்து.
கணவனின் முன்னேற்றப் பாதையில் சேர்ந்தே
மனமொத்து வாழ்வில் பயணித்து வெற்றிக்
கனிபறித்துச் சாதனை நாயகனாய் மாற
துணிவைத் தருபவளை வாழ்த்து.
சொல்லடுக்கைப் பேசுகின்ற பல்லடுக்கைக் காப்பாற்றும்
நல்ல மருத்துவராய்த்
தொண்டாற்றும் பண்பிலே
வல்லமை கொண்டே திகழ்கின்றாய்
நாள்தோறும்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
பெற்றோரின் மாமனார் மாமியார் ஆசியுடன்
உற்றார் உறவினர் சூழ்ந்திருக்க இன்பமுடன்
என்றும் வளம்பல பெற்றேதான் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்க சிறந்து.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா மற்றும்
குடும்பத்தார்
17.03.2020
கோலாரின் தங்கமகள் மாமதுரைத் தங்கத்தை
காலமெலாம் இல்லறத்தில் ஏற்கப் பிறந்தவர்!
பாலம்போல் இந்த உறவுகளை நன்கிணைத்தே
நாள்தோறும் வாழ்வதை வாழ்த்து.
கணவனின் முன்னேற்றப் பாதையில் சேர்ந்தே
மனமொத்து வாழ்வில் பயணித்து வெற்றிக்
கனிபறித்துச் சாதனை நாயகனாய் மாற
துணிவைத் தருபவளை வாழ்த்து.
சொல்லடுக்கைப் பேசுகின்ற பல்லடுக்கைக் காப்பாற்றும்
நல்ல மருத்துவராய்த்
தொண்டாற்றும் பண்பிலே
வல்லமை கொண்டே திகழ்கின்றாய்
நாள்தோறும்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
பெற்றோரின் மாமனார் மாமியார் ஆசியுடன்
உற்றார் உறவினர் சூழ்ந்திருக்க இன்பமுடன்
என்றும் வளம்பல பெற்றேதான் வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்க சிறந்து.
வாழ்த்தும் இதயங்கள்
மதுரை பாபாராஜ்
வசந்தா மற்றும்
குடும்பத்தார்
Labels: கார்த்திக்
0 Comments:
Post a Comment
<< Home