Sunday, September 10, 2023

ஜிகர்தண்டா 2 முன்னோட்டம் வாழ்த்து



ஜிகர்தண்டா 2


முன்னோட்டம் வாழ்த்துகள்!


JIGARTHANDA 2 TRAILER!


11.09.23


ஜிகர்தண்டா முன்னோட்டம் கண்டு ரசித்தே

அகங்குளிர வாழ்த்துங்கள்! அந்தப் படமோ

மகத்தாக வெற்றிபெற வாழ்த்துவோம்! கார்த்திக்

இயக்கத்தில் ஆற்றல் வெளிப்பட வெள்ளித்

திரையில் வருகிறது வாழ்த்து! குழுவின்

உழைப்பினை வாழ்த்துவோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Friday, August 25, 2023

அப்பாவும் மகனும் வியப்பில்



அப்பாவும் மகனும் மனக்குரலில் வியப்பு!


MIND VOICE OF FATHER AND SON


அப்பா கெஜராஜ்


உன்னையே பார்த்துப் பெருமைப் படுகின்றேன்!

என்மகனே! அன்று கலைஞர்  தொலைக்காட்சி

தந்தனர் வாய்ப்பை! குறும்படப் போட்டியில்

வென்றுவிட்டாய்! ! இன்று கலைத்துறையில் முன்னேறி

பன்முக ஆற்றல் இயக்குநராய் மாறிவிட்டாய்!

பெற்றோரின் ஆசிகள் உண்டு.


மகன் கார்த்திக் சுப்பாராஜ் 


மருந்துத் துறையிலே வாழ்வைத் தொடங்கி

மருத்துவரைப் பார்த்து தொழில்செய்த

தந்தை

திரைத்துறையில் நாளும் நடிகராய் இன்று

பலரும் புகழ கலைத்துறை தன்னில்

நிலைப்பது விந்தைதான் இங்கு.


மதுரை பாபாராஜ்



 

Labels:

தம்பியும் தம்பி மகனும்


அப்பாவும் மகனும் மனக்குரலில் பரிமாற்றம்!

MIND VOICE OF FATHER AND SON

அப்பா கெஜராஜ்

உன்னை வளர்த்தேதான் ஆளாக்கிப் பார்க்கின்றேன்!

வந்த அருமைமிகு வாய்ப்பைப் பயன்படுத்தி

உந்தன் திறமையால் முன்னேறி பெற்றோர்க்கு

நற்பெயர் தந்துவிட்டாய் நீ.


மகன் கார்த்திக் சுப்பாராஜ்

உங்கள் கடமைகளைச் செவ்வனே செய்ததனால்

என்கடமை உங்களுக்கு நாளும் பெருமையை

இங்கே வழங்குதல் தான்.

மதுரை பாபாராஜ்

 

Labels:

Monday, July 31, 2023

SBOA SCHOOLS ANNUAL DAY


SBOA SCHOOLS 


44 the Annual day celebration!


வாழ்த்துகள் கார்த்திக்!


மதுரை 04.08.23


தான்படித்த பள்ளியின் ஆண்டுவிழா நாளிலே

தானே தலைமை விருந்தினராய் கார்த்திக்தான்

ஆர்வமுடன் இங்கே கலந்துகொள்ளும் வாய்ப்பேற்றார்!

பார்போற்ற வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Friday, May 05, 2023

ஏசியா நெட் பேட்டி


Mr.Rajkumar( jothi husband)

Good morning Sir. I saw your video just now. It was very interesting and informative. I was very happy to hear the sharings of you and aunty. Only after seeing your video did to come to know about this news channel of Asianet. 👍👍👍

நண்பர்களின் கருத்து:

FENBOSE

இன்று தான் உங்கள் நேர்காணலை கேட்டு மகிழ்ந்தேன். உங்கள் கவிதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பி்ல் வெளியான படத்தில் இடம் பெற்றது மிக்க மகிழ்ச்சி. எனது வாழ்த்துக்கள். 
உங்கள் நேர்காணலும் சிறப்பாக இருந்தது.

06.05.23

VOV C.ANBU: 

பாட்டனி படித்துவிட்டு,

பாட்டு ,எழுதவந்தேன். அருமையான நேர்காணல் 👌👌👌🙏


Vovbalunatarajan New: 

பாட்டு நீ

என்றதோ

பாட்டனி?

🤔

தேய்பிறையை

பெத்தெடுத்தேன்..."

நெஞ்சை பிழியும் வார்த்தைகள்...

நெஞ்சில் சம்மட்டி அடி...😔

VOV C.ANBU: 

விதியை வெல்லும்

மதியும் ,

மன உறுதியும், இருக்கும்போது இறுதி கவிதைக்கு வேலை இல்லை !

 நீங்கள் சிரிக்கும், சிரிப்பில், இன்பமான கடந்த பாதை தெரிகிறது!

அதை நினைத்து பார்த்து ரசிக்கும் சுகம்,

எங்களுக்கும் புரிகின்றது!

நேருக்கு நேர் கருத்து பறிமாறிக் கொள்வதில் உங்கள் புனிதமான பந்தம் தெரிகின்றது !

 VovMogaleeswarannew: 👏👏👏💐💐

தாவரவியல் படித்தாலும் தாய்த் தமிழின் மீது தனியாக காதலால்

தொடர்ப் பணி

 தமிழ் பணி.

பெருமிதம் கொள்கிறோம் ஐயா.🙏


கவிஞர் பாபாவின் நேர்காணல்!


கார்கால மழைபோல

        நேர்மையான நேர்காணல்!மடைதிறந்த வெள்ளம்போல்

       இடைவெளி ஏதுமின்றி

இனிய நினைவுகளை

       இறுதி ஆசைகளை

இணையருடன் இணைந்து

       இயம்பிட்டார் பொறுப்பாக!

கவிபாட ஊக்குவிக்கும்

       கவிராயர் பன்முகத்தோன்!

அவரிணையர் வசந்தாவோ

       கவிபாடி  பாட்டிசைப்போர்!

மதுரகவி அய்யாபாபாவை

       மதுரமொழி அம்மாவசந்தாவை

நெஞ்சார வாழ்த்துகிறேன்!

       நெஞ்சினிக்க வாழ்த்துகிறேன்!

வாழிய வாழியவே!

       வாழ்க பல்லாண்டு!


கோ.இமயவரம்பன்.

03.05.2023

👏👏 அருமை ஐயா 👌👍. மன நெகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் இதுபோல் நிறைய காணொளிகள் காண விரும்புகிறேன். 🤝வாழ்த்துக்கள் 🙏

Skycleaning Thiru

 

Labels:

Thursday, May 04, 2023

பொம்மி பேட்டியைக் கேள்



 பேட்டியைக் கேள்!


கார்த்திக் மனைவியோ பேட்டியைக் கேட்டுவிட்டார்!

கார்த்திகேயன் இல்லக் கிழத்தியோ கேட்கவில்லை!

நேரம் ஒதுக்கியே கேட்கவேண்டும் என்றேதான்

ஆர்வமுடன் கேட்கிறேன் நான்.


பாபா நைனா

வசந்தா அம்மா

Labels:

Wednesday, February 23, 2022

அது ஒரு பொற்காலம்


அது ஒரு பொற்காலம்! 


1976 முதல் 2012 முடிய


நாங்கள் பழைய திரைப்படப் பாடல்கள்  பாடித் தூங்கவைத்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது.நாங்கள் பாடித் தூங்கவைத்த பாடல்கள்:


1. சின்னஞ்சிறு கண்மலர்

2. பூஞ்சிட்டுக் கன்னங்கள்

3. நீலவண்ணக்கண்ணா வாடா

4. என்ன நினைத்து என்னை அழைத்தாயோ

5. எங்கிருந்தாலும் வாழ்க

6. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

7. காதலிலே தோல்வியுற்றாள்

8. உன்னைக் காணாத கண்ணும்

9. என்னை யாரென்று எண்ணியெண்ணி

10. நான் பேச நினைப்பதெல்லாம.

11. கண்ணும் கண்ணும் பேசியதும்

12.துள்ளாத மனமும் துள்ளும்

13.தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

14.சின்னச்சின்ன நடை நடந்து

15. எங்கிருந்த போதும் உன்னை

16. சொன்னது நீதானா

17.உள்ளம் என்பது ஆமை

18. சின்னபாப்பா எங்க செல்லபாப்பா

19.சின்னப் பயலே

20.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு

21.அவளுக்கென்ன தூங்கிவிட்டாள்

22.அண்ணன் காட்டிய வழியம்மா

23.மலர்ந்தும் மலராத


எங்கள் பாடலைக் கேட்டுத் தூங்கிய குழந்தைகள்:


1.ராஜ்குமார்

2.சுபா

3.எழில்

4.பொம்மி

5. கார்த்திக்

6. சேனா

7.பெனிட்டா

8.ஹரி

9.சுசாந்த்

10. நிக்கில்

11. வருண்

ஒருமுறை நீலவண்ணக் கண்ணா பாடிய போது தொட்டிலுக்குள் இருந்து அதே பாடலை எங்களுடன் நிக்கிலும் பாடியது இன்றும்நினைவில் உள்ளது.


தம்பி கெஜாவின் நண்பர் செல்வா மதுரையில் வீட்டிற்கு வருவார். பாடத்தொடங்கியதும் "அண்ணனும் அண்ணியும் பாட்டுக்கச்சேரி ஆரம்பிச்சாச்சு என்று சொல்வார்.


அக்கா மகன் பாலு கூறியது:

மலர்ந்தும் மலராத பாட ஆரம்பிச்சாச்சு. 

இத்துடன் பாட்டுக் கச்சேரி முடிஞ்சுச்சு

என்பார்.


அது ஒரு பொற்காலம்!


 

Labels:

Tuesday, December 21, 2021

தம்பி கெஜராஜ்


நினைத்தேன் எழுதினேன்!


என் தம்பி கெஜராஜ் அவர்களுக்கு வாழ்த்து!


இல்லற முத்துக்கள்:


மனைவி: மல்லிகா


மகன்- மருமகள்: 

திரைப்பட இயக்குநர்  

G.கார்த்திக் சுப்பாராஜ் - 

மருத்துவர் K.சத்யப்பிரேமா


மகள்-- மருமகன்:

K.தேவிகாராணி-- S.கார்த்திகேயன்

பேரன்: சஞ்சய் சாய்


மருந்துத் துறை முதல் கலைத்துறை வளர்ச்சி தொடரும்:


பிரிட்டோவில், தூய மரியன்னைப் பள்ளி்

படிப்பிற்கு அடுத்து அமெரிக்கன் காலேஜ்

படிப்பை நிறைவுசெய்து வேலைக் களத்தில்

துடிப்பாய்ச் சேர்ந்தார் விழைந்து.


மருந்துத் துறையில் பிரதிநிதி வேலை!

அரும்பாடு பட்டே அலைந்தே உழைத்தார்!

திருமணம்  இல்லாளாய் மல்லிகாவை ஏற்றே

கருத்துடன் வாழ்கின்றார் இங்கு.


மருந்து நிறுவனத்தில் ஊழியர் ஆகி

கருத்துடன் நாளும் உழைத்தார்! வயதோ

அறுபதில் வாய்ப்பு திரைப்படத்தில் பெற்றார்!

விறுவிறு ஏற்றந்தான் பார்.


பல்வேறு கோணத்தில் பல்வேறு வேடங்கள்!

உள்வாங்கி ஆற்றல் மிளிர நடிக்கின்றார்!

எல்லோரும் வாழ்த்துகின்றார் போற்றுகின்றார் சூழ்ந்தேதான்!

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


தம்பி இருக்குமிடம் எல்லாம் கலகலப்பு!

எங்கு வருவாரோ அங்கெல்லாம் நாயகன்தான்!

சின்னக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்

எல்லோரும் பேசுவார் வந்து.


நடித்த படங்கள் அறுபதுக்கும் மேலே!

துடிப்புடன் ஒன்றி நடிப்பதில் ஆற்றல்!

விதவித மாக குணச்சித்ர வேடம்!

சிறப்பான சாதனையைப் போற்று.


எங்கள் குடும்பக் கடைக்குட்டி தம்பிதான்!

அன்பு மனைவி குடும்பத்தார் சூழ்ந்திருக்க

நண்பர்கள் சுற்றம் உறவினர்கள் சூழ்ந்திருக்க

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

Labels:

Monday, December 20, 2021

திரைப்பட இயக்குநர் கெ.கார்த்திக் சுப்பாராஜ் அவர்களுக்கு வாழ்த்து:


திரைப்பட இயக்குநர் 

கெ.கார்த்திக் சுப்பாராஜ் அவர்களுக்கு வாழ்த்து:


குடும்ப முத்துக்கள்:


பெற்றோர்:

அப்பா:S.P. கெஜராஜ்

அம்மா: திருமதி.கெ.மல்லிகா


மனைவி: மருத்துவர் சத்யப்பிரேமா


மைத்துனர்: S. கார்த்திகேயன்

தங்கை: திருமதி.K.தேவிகாராணி

&

செல்வன் சஞ்சய் சாய்



மதுரைத் தென்றல் கார்த்திக்தான்!

மனதைக் கவரும் கார்த்திக்தான்!


தம்பி கெஜராஜ் மல்லிகா

மகனாய்ப் பிறந்தார் கார்த்திக்தான்!


மாநில வங்கிப் பள்ளியிலே

பள்ளிப் படிப்பை முடித்தவராம்!


தியாக ராசர் பொறியியல்

கல்லூரி வாழ்வை நிறைவுசெய்தார்!


நாடகம் எழுதி நடித்தவராம்!

கவிஞ ராக மிளிர்ந்தவராம்!


கணினித் துறையில் பணிசெய்தார்!

வெளிநா டுகளும் சென்றவராம்!


பிரான்சு நாட்டில் இருந்தபோது

நாளைய இயக்குநர் நிகழ்வினிலே


கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பளித்தார்!

கலந்து கொண்டு விருதுபெற்றார்!


குறும்பட இயக்குந ரானவரோ

திரைப்படம் இயக்க முயற்சித்தார்!


பலபடம் எடுத்தார் ஆற்றலுடன்!

வெற்றிப் படங்களாய் மாறியதே!


இன்னும் தொடர்ந்து திரைத்துறையில்

படங்கள் இயக்கி வருகின்றார்!


திருப்பு முனைகள் படங்களுக்கே

உயிரோட் டங்கள் ஆனதுபார்!


முயற்சி ஆர்வம் ஈடுபாடு

மூன்றும் மிளிரும் உழைப்பினிலே!


உழைப்பால் உயர்பவர்  கார்த்திக்தான்!

அடக்கம் பணிவும் கார்த்திக்தான்!


எங்கள் குடும்பப் பெருமைக்கு

எடுத்துக் காட்டே கார்த்திக்தான்!


முன்னணிச் சாதனை பின்னணியே

ஊக்கம் கொடுக்கும் இல்லாள்தான்!


வாழ்க வாழ்க வளமுடனே!

வாழ்வாங்கு வாழ்க பல்லாண்டு!


பெற்றோர் மற்றும் குடும்பத்தார்

வாழ்த்து கின்றோம் சூழ்ந்தேதான்!


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.

 

Labels:

Sunday, December 12, 2021

ஜெகமே தந்திரம் படத்தில் எனது பாடலைப் பாடிய பின்னணிப் பாடகர் திருமதி மீனாட்சி

ஜெகமே தந்திரம் படத்தில் எனது பாடலைப் பாடிய

பின்னணிப் பாடகர் திருமதி மீனாட்சி இளையராஜா இணையரும் மகன் பரத்ராமும் எங்கள் வீட்டுக்கு வருகைதந்த தருணம்.

மகிழ்ந்தோம். 12.12.21

நன்றியும் வாழ்த்தும்:


படம்: ஜெகமே தந்திரம்


தேய்பிறைய பெத்தெடுத்தே பாடல் எழுதிட

வாய்ப்பளித்த கார்த்திக்சுப் பாராஜ் இயக்குநர்,

தேர்ந்த இசையருவி சந்தோஷ்நா ராயணன்,

ஆர்வமுடன் பாடிய மீனாட்சி இளையராஜா

மூவருக்கும் நன்றி நவில்கின்றேன் வாழ்த்துகின்றேன்!

பாத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Friday, November 05, 2021

ஜெகமே தந்திரம் படத்தில் ஒரு வசனம்!


கவிதைக்குக் கரு:

ஜெகமே தந்திரம் படத்தில் ஒரு வசனம்!

வசனம்: கார்த்திக் சுப்பாராஜ்

தாய் மகனுக்குச் சொல்வது:

அநியாயம் செய்தாலும்  சூழ்நிலை என்றே

தனிக்கருத்துக் கூறலாம், ஆனால் துரோகம்

துளியெனினும் கேவலம்தான்! அக்களங்கம் நீக்கி

எழுச்சியுடன்  தாயென் றழைத்தால் மகிழ்வேன்!

உரைத்த வசனம் உரம்


மதுரை பாபாராஜ்





 

Labels:

Friday, October 29, 2021

தம்பி மகன் இன்றைய திரை இயக்குனர் கார்த்திக் படித்த மழலையர் பள்ளி!


மதுரை நினைவுகள்


தம்பி மகன் இன்றைய திரை இயக்குனர்

கார்த்திக் படித்த மழலையர்  பள்ளி!


மெய்யப்பன் 2வது தெரு--1985-86


வீட்டுக்குச் சற்றே எதிரிலே பள்ளிஉண்டு!

கார்த்திக் படித்தான்! பெரியம்மா அப்பக்கம்

காய்வாங்கப் போவார்கள்! கார்த்திக்கோ பள்ளியின்

வாயில் கதவருகில் எட்டியெட்டிப் பார்த்திருப்பான்!

பார்த்ததும் அங்கே "வசந்தாம்மா" என்றழைப்பான்!

பாசத்தின் உச்சம் அது.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Saturday, October 16, 2021

கார்த்திக் சத்ய பிரேமா இணையர் வீட்டுக் கொலு!


கார்த்திக் சத்ய பிரேமா இணையர் வீட்டுக் கொலு!


வாழை மரக்கன்(று) இருபக்கம் காண்போரை 

வாழ்த்தி வரவேற்க வண்ணவண்ண

பொம்மைகள்  

காட்சிப் பொருளாய்ப் படிகளில் பேரழகு

கூட்டிநிற்க பொம்மை அணிவகுப்போ அற்புதம்!

பாட்டில் மகிழ்வுடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா


Labels:

Friday, September 24, 2021

மகானுக்கு வாழ்த்துகள்


மகானுக்கு வாழ்த்துகள்


பண்பட்ட ஆற்றல் நடிகராம் விக்ரமுடன்

அன்பு மகனாம் துருவும் மகான்படத்தில்

நன்றாய் நடித்துள்ளப் பாங்கினைக் கார்த்திக்தான்

உண்மைத் தெளிவுடன் சொல்லி இருக்கின்றார்!

இந்தப் படத்தினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Friday, August 20, 2021

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரும் மகான் வெல்க!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 

வெளிவரும் மகான் வெல்க!

பதினாறு கைகளைக் கொண்ட மகானோ

புதுமைக்குத் தெம்பூட்டி 

புத்தொளி வீசி

எடுப்பான தோற்றமுடன்

விக்ரம் நடிக்க

வருகிறது இங்கே விரைவில் ரசிக்க!

குழுவினரை வாழ்த்துவோம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

Labels:

Friday, July 09, 2021

நவரசா-- குறும்படங்கள் வெற்றிபெற வாழ்த்து!

 நவரசா-- குறும்படங்கள் வெற்றிபெற வாழ்த்து!


பற்றிப் படரும் சுவைகளாம் ஒன்பதை

வெற்றிக் குறும்பட மாக வழங்குகின்றார்!

பக்குவப் பட்ட இயக்குநர்கள் வாழ்கவே!

வெற்றி நடைபோட வாழ்த்து.


அமைதியான தோற்றம், செயல்பாடு கொண்ட

அமைதி இயக்குநர் கார்த்திக் திரையில்

தடம்பதித்துச் சாதனைகள் செய்தார் உழைத்து!

தொடரட்டும் தொண்டுகள் 

நீடு.


மதுரை பாபாராஜ்

Labels:

Tuesday, March 16, 2021

சத்யப்பிரேமா-- கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து


 மருமகள் மருத்துவர்  சத்யப் பிரேமா-- 

நாள் 17.03.21

மகன் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்

நாள் 19.03.21

இணையருக்குப் பிறந்தநாள் வாழ்த்து.


உடலின் இயக்க இயக்குந ராக

கடமைகள் செய்யும் மருத்துவர் சத்யா

அகங்குளிர வாழ்க மகிழ்ச்சியுடன் வாழ்க!

மகத்தாக வாழ்கபல் லாண்டு.


வெற்றிப் படமியக்கும் ஆற்றல் இயக்குநராம்

அற்புத கார்த்திக் வளம்பல பெற்றேதான்

பெற்றோர் குடும்பத்தார் வாழ்த்திசைக்க 

வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்-- வசந்தா

குடும்பத்தார்.

Labels:

Saturday, November 14, 2020

சத்யப்பிரேமா கலைத்திறன் வாழ்க

 சத்யப் பிரேமா கார்த்திக் கலைத்திறன் வாழ்க.


பக்தி மணங்கமழ அம்மன் அழகாக

அக்கறை கொண்டேதான் சத்யா கலைத்திறனை

கச்சிதமாய்க் கையாண்ட பான்மை மிளிர்கிறது!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா


Labels:

Monday, October 26, 2020

கார்த்திக் சுப்பாராஜ்-- சத்ய பிரேமா திருமணநாள்

 திருமணநாள் வாழ்த்துப்பா!


இயக்குநர்-- மருத்துவர் இணையர்

கெ.கார்த்திக் சுப்பாராஜ்-- சத்ய பிரேமா


நாள்: 27.10.20


வெற்றி இயக்குநர் வெற்றி மருத்துவர்

முத்திரைச் சாதனை வாழ்வில் படைத்தேதான்

பத்தாண்டு காணுகின்றீர்! பெற்றோர் ஆசிகளும்

உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகளும்

எப்போதும் சூழ்ந்திருக்க வாழ்வாங்கு வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


ஆற்றல் மிளிர்ந்திட வெற்றிப் படங்களை

நாட்டிலே மக்களுக்குத் தந்தேதான் வாழ்கவே!

போற்றும் மருத்துவராய்த் தொண்டுகள் செய்தேதான்

ஏற்றங்கள் பெற்றே புகழுடன் வாழியவே!

கூட்டணி வெற்றிபெற வாழ்த்து.


வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


Labels:

Wednesday, March 18, 2020


அன்பு மகன் திரைப்பட  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குப்
         பிறந்தநாள் வாழ்த்து!
--------------------------------------------------------------------
     19.03.2020
-------------------------------------------------------------------
குறும்பட வாய்ப்புகளைச் செம்மையாய் ஏற்றாய்!
எடுத்தாய் பெரும்படம் ஆற்றலைக் காட்டி
எடுப்பாக நிற்கின்றாய்! மேலும் வளர்ந்து
தொடுக்கவேண்டும்  வெற்றிகளை நீ.

பீட்சா! முதல்படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும்
பாட்சா விறுவிறுப்பை உள்ளம் உணர்த்தியதால்
போற்றினார் உன்னை! உலகப் புகழ்பெற்றாய்!
ஏற்றத்தின் ஏணி அது.

ஜிகர்தண்டா! மாமதுரை பானப் பெயரை
அகங்குளிர வைத்தாய்! திருப்புமுனை கண்டே
அகவாழ்த்தை மக்கள் அளித்தார்! குவித்தார்!
படத்துறை பார்த்தார் வியந்து.

இறைவி! புதுமைக் காவிய மாக
படைத்ததைப் பாராட்டி ஏடுகள் எல்லாம்
நிறைவுடன் வாழ்த்த கலைத்துறைப் போக்கில்
முறைகளை மாற்றினாய் நீ.

மெர்குரி! வேதியல் பாதிப்பு மக்களைக்
கவ்வித்தான் ஏற்படுத்தும் கோலத்தைக் காட்டினாய்!
உள்ளம் உருகிடும்  காட்சி படைத்தளித்தாய்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

பேட்ட பராக்கென்ற ஓசை அதிர்வுகள்
நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திச் சாதனையைக்
காட்டியதோ உன்திறமை என்றே புகழ்ந்தனர்!
நாட்டிவிட்டாய் வெற்றிக் கொடி.

அடுத்த படமும் உனது குழுவின்
பொறுப்பு,கடமை உணர்வு,திறமை
தொடுக்கும் முயற்சியால் வெற்றிக் கனியைக்
கொடுப்பதற்கு வாழ்த்துகிறேன் இங்கு.

இல்லறத்தின் தென்றலே! அன்பகமே! ஆற்றலேறே!
முல்லைக் குறுநகை ஏந்தும் முகஅழகே!
தெள்ளுதமிழ் போல்வாழ்க பல்லாண்டு! பல்லாண்டு!
உள்ளத்தால் வாழ்த்துகின்றோம் சூழ்ந்து.

 பெரியப்பா          பெரியம்மா
மதுரை பாபாராஜ்-- வசந்தா
மற்றும் குடும்பத்தார்.




Labels: