Monday, May 31, 2021

Elusive

 Peace is elusive!


Oh my peace!

Why are you so elusive?

Birds fly wherever they like!

Cattle wander here and there!

Breeze enters and glides through exit

Rain water travel far and wide

And jump over mountains

And fall as enchanting falls

Flowers bloom with ease everyday!

Peace exists all over Nature!

Except me! Yearning for peace !

With staggering walks like blind and deaf!

Oh my peace! Where are you?

Why are you so elusive?


Baba

Sunday, May 30, 2021

நண்பர் பென்னர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!

 நண்பர் பென்னர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!



திறந்த மனதுடன் வாழவில்லை என்றால்

நிறைய கதவுகள் மூடிநின்றே நாளும்

வரவேற்கும்! உன்னை வழிமறிக்கும்! பாராய்!

திறந்தமனம் என்றும் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அன்றாடம் சாதனை முத்துக்கள்!

 மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அன்றாடம் சாதனை முத்துக்கள்!



எண்ணற்ற சாதனை முத்துக்கள் ஸ்டாலினின்

பண்பட்ட ஆட்சி மகுடத்தில் நாள்தோறும்

இங்கே ஒளிர்கிறது, சேர்கிறது காண்கிறோம்!

வண்டமிழ்போல் வாழ்க தொடர்ந்து.


பம்பரத்தின் வேகத்தை நாணவைக்கும் வேகத்தில்

அன்றாடம் சுற்றிச் சுழன்றாடும் பேருழைப்பு!

சென்னை முதலாக கன்யா குமரிவரை

கண்கூடாய்க் காண்கிறோம் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Saturday, May 29, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

 நண்பர் IG சேகர் அனுப்பிய படம்



தணியத் தொடங்கியது நாளும் கொரோனா!

கனியத் தொடங்கியது வாழ்வின் இயல்பு!

பணிவுடன் ஏற்று மதிப்போம் விதியை!

நெருங்கிடும் வெற்றி நமக்கு.


மதுரை பாபாராஜ்

Thursday, May 27, 2021

நண்பர் IG சேகர் அனுப்பிய காணொளி

 நண்பர் IG சேகர் அனுப்பிய காணொளி


கொக்கரக்கோ


விதவிதமாய்க் கொக்கரக்கோ என்றுதான் கூவி

விடிந்ததைச் சொல்லி எழுப்பும் உலகை!

நிறங்களோ மாறுபட்ட போதும் கூவும்

அழைப்பு மொழியிங்கே ஒன்று.


மதுரை பாபாராஜ்

நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியம் தமிழாக்கம்

 நண்பர் இசக்கிராஜன் அனுப்பிய சொல்லோவியம் தமிழாக்கம்



_Thought is the blossom;_

_language the bud;_

_action the fruit behind it._


_-Ralph Waldo Emerson_


_*Good morning*_

*_0527*_


எண்ணங்கள் போதாகும்! எண்ணும்

மொழியமைப்பே

வண்ண அரும்பாகும்! அந்தச் செயல்களின்

பின்னே விளையும் அருமைக் கனியாகும்!

எண்ணங்கள் போலவே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

Tuesday, May 25, 2021

இடி- புயல்- எரிமலை- முட்கள் கொரோனா

 இடி- புயல்- எரிமலை- முட்கள்

கொரோனா பாதிப்பு

இடியும் புயலும் தொடர்கதை யானால்

எரிமலைச் சீற்றம் அடிக்கடி என்றால்

தடுமாறித் தத்தளிக்கும் உள்ளம் கலங்கி

நடுங்குதே நாளும் மலைத்து.


முட்கள் உரசி உரசி இதயத்தைக்

குத்திக் கிழிக்கும் நிலையில் நிகழ்வுகள்

பற்றிப் படருமென்றால் நிம்மதி எங்குவரும்

எப்படி வாழ்வில் வரும்?


மதுரை பாபாராஜ்

கொடுமையின் உச்சம் கொரோனா

 கொடுமையின் உச்சம்!


படுக்கையில் முள்ளா? எடுத்தெறிந்து வாழ்வோம்!

படுக்கையே முள்ளா?உறக்கந்தான் ஏது?

உறுத்தல் பொறுக்காமல் தத்தளிப்போம்  நாளும்!

கொடுமையின் உச்சம் இது.


மதுரை பாபாராஜ்




வயதான காலம் கொரோனா தாக்கம்

 வயதான காலம்!

வயதான காலத்தில் நிம்மதி வேண்டும்!

பயமும் நடுக்கமில்லா வாழ்க்கைதான் வேண்டும்!

இயல்பான சூழல் சுமையற்ற உள்ளம்

அமைந்தாலே 

வயதான வாழ்க்கை நலம்.


மதுரை பாபாராஜ்


Monday, May 24, 2021

நண்பர் BSNL இராமசாமி நட்புடன் அனுப்பிய படம்

 நண்பர் BSNL இராமசாமி நட்புடன் அனுப்பிய படம்


அழகான காலை வணக்கத்தை ஆகா!

அழகான பூக்களால் கொண்டுவந்து நட்பில்

வழங்கிய பண்பே அழகாகும்! நண்பர்

வழங்கியதை வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

Sunday, May 23, 2021

கொரோனா காலத் தேவை! அகரவரிசையில்!

கொரோனா காலத் தேவை!

அகரவரிசையில்!

அன்புவேண்டும்! ஆறுதல் வேண்டும்! உளம்நாடும்

இன்சொற்கள் வேண்டும்! மனிதநேய

ஈகையை

உற்ற துணையை ஊக்கத்தை எச்சரிக்கை

ஏற்பதற்குச் சொல்லும்  விதிகளைப் பின்பற்றி

ஐந்தடி தூரம் விலகும் ஒழுக்கத்தை

ஓம்பினால் இந்தக் கொரோனாவை வெல்லலாம்!

ஔடதம்போல் நற்பயன் உண்டு.


மதுரை பாபாராஜ்


புதிர்

 புதிர்!

வாழ்க்கை நகர்ந்திருக்கும்! நாமிங்கே

ஓடுவோம்!

வாழ்க்கையோ ஓடும்! பறந்திருப்போம் நாமிங்கே!

வாழ்க்கை பறக்கும்! நகர்ந்திருப்போம் நாமிங்கே!

வாழ்க்கை புரியாப் புதிர்.


மதுரை பாபாராஜ்

Friday, May 21, 2021

அம்மா நிலமங்கை துரைசாமி அவர்களுக்கு வாழ்த்து

 ஓவியர் அம்மாவுக்கு வாழ்த்து


நன்றி மறவாதே மானிடனே என்றுதான்

நன்றி உணர்வை நினைவுறுத்தும் நாயிங்கே!

அந்தப் படத்தை வரைந்த திறனுக்கு

வண்டமிழ் வாழ்த்தை வழங்கு.


மதுரை பாபாராஜ்


Tuesday, May 18, 2021

சரவணப் பெருமாள் -- சித்ரா இணையர் வெள்ளிவிழா திருமண ஆண்டு!


 சரவணப் பெருமாள் -- சித்ரா இணையர்

வெள்ளிவிழா திருமண ஆண்டு!


மணநாள் :19.05.2021

24/25 ஆண்டுகள்

இருபத்து நான்கை நிறைவுசெய்தே இன்று

இருபத்தைந் தாவது ஆண்டினைக் காணும்

சரவணன் சித்ரா இணையர் வளமும்

நலமும் நனிசூழ வாழ்த்து.

பெற்றோரின் ஆசிகளுடன் உற்றார் உறவினரின்

முத்தான வாழ்த்துடன் பல்வளங்கள் இல்லறத்தில்

எப்போதும் சூழ்ந்திருக்க வாழ்வாங்கு வாழியவே!

வள்ளுவம்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்.

Monday, May 17, 2021

நண்பர் BSNL இராமசாமி அனுப்பியது

 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியது



வண்ண வண்ணக் கோப்பைகள்

அழகான கோப்பைகள்!

கண்கவரும் கோப்பைகள்!

காலைவணக்கம் கூறியே

கவிதைபாடும் கோப்பைகள்!

நண்பர் இராமசாமி

அனுப்பிவைத்த கோப்பைகள்!

நட்பைக் கூறும் கோப்பைகள்!


மதுரை பாபாராஜ்


மதுரை பாராஜ்

Saturday, May 15, 2021

நண்பர் கவிஞர் இராஜேந்திர பாபு அனுப்பிய படம்.

 நண்பர் கவிஞர்  இராஜேந்திர பாபு அனுப்பிய படம்.



கடலில் மிதக்கும் படகுவீடு! தென்னை

மரம்சூழ்ந்த சூழலுடன் நீலவானம் ஆகா!

இயற்கை பொழியும் அமைதி அருமை!

கரங்கொட்டி வாழ்த்தி வணங்கு.


மதுரை பாபாராஜ்

Thursday, May 13, 2021

நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படம்

 நண்பர் BSNL இராமசாமி அனுப்பிய படம்


வெள்ளை மலர்க்குவளை காலை வணக்கத்தை

வெள்ளை எழுத்துகளால் ஏந்தி உரைத்திருக்க

வெள்ளை மலர்க்கொத்து அன்பைத் தெரிவிக்க

நட்பில் திளைத்தேன் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

Sunday, May 09, 2021

மில்டனைக் காண்போமா?

 மில்டனைக் காண்போமா?


மில்டனும் நானும் பென்னர் நிறுவனத்தில்

ஒன்றாய்ப் பணிபுரிந்தோம்! தம்பி கஜராஜின்

நண்பராகி எங்கள் குடும்பத்தின் நண்பராக

அன்றிருந்து இன்றுவரை இன்பதுன்பத்தில் பங்கெடுத்து

நட்பின் இலக்கணமாய் மில்டன் பழகிவந்தார்!

என்னண்ணே! என்றழைக்கும் பாசக் குரலெங்கே?

புன்னகை பூத்துவரும் அந்த முகமெங்கே?

எங்கள் குழந்தைகள்  மாமா எனஅழைக்கும்

அந்தமாமா என்று வருவாரோ? காண்போமோ?

இந்தக் கொரொனாதான் பற்றிப் படர்ந்தேதான்

நண்பராம் மில்டனை கர்த்தருக்குள் நித்திரை

கொள்ளவைத்துப்  பார்க்கிறதே! தாங்கு.


கஜராஜ்

பாபாராஜ்

குடும்பத்தார்



Tuesday, May 04, 2021

நடைப்பிணமாக கொரோனா மாற்றியது

 நடைப்பிணம்!


நடைப்பிணமா? எப்படி கேலிசெய்தேன் அன்று!

நடைப்பிணமாய் மாறி நடக்கின்றேன் இன்று!

குடைந்தெடுக்கும் துன்பக் கவலைகள் வந்தால்

நடைப்பிணமாய் மாறிடுவோம் செப்பு.


மதுரை பாபாராஜ்

கொரோனாவே வா! வந்தால்!

 இனிமைப் பயணமே வா!

கொரோனா கிருமியை என்மேல் தெளித்தால்

அருமையாய் நிம்மதியாய் மீளாத் துயிலை

அரவணைத்தே மெய்மறந்தே ஆழ்ந்து விடுவேன்!

தரணியின் தொல்லைகள் நீங்கும்! தனிமைப்

பயணம் இனிமை எனக்கு.


மதுரை பாபாராஜ்