Sunday, December 31, 2023

பாம்புகளும் ஏணிகளும்


 

மரவட்டை


 மரவட்டை!


மரவட்டை போல சுருண்டு் சுருண்டு

மிரண்டு படுத்தாலும் உள்ளம் உளைச்சல்

நெருப்பின் அனலில் துவண்டேதான் போக

விரக்திப் பிடியிலே நான்.


மதுரை பாபாராஜ்


மகிழ்ச்சியா புத்தாண்டு?

 மகிழ்ச்சியா புத்தாண்டு?


கடலரிப்பு நாட்டுக்கு நல்லதல்ல கண்ணே!

மலையரிப்பு பாதைக்கு நல்லதல்ல கண்ணே!

உடலரிப்பு  தூக்கத்தைப் பாதிக்கும் கண்ணே!

அகத்தில் கவலை அரி்ப்பு படர்ந்தால்

மகிழ்ச்சியா புத்தாண்டு சொல்.


மதுரை பாபாராஜ்


Saturday, December 30, 2023

எத்திசைச் செலினும் நெருப்பு!


 எத்திசைச் செலினும் நெருப்பு!

பற்றிச் சுழன்றெரியும் காட்டுத்தீ மத்தியிலே

சுற்றி மருண்டோடும் மானாக ஓடுகின்றேன்!

எத்திசைச் சென்றாலும் தீபோன்ற

சூழ்நிலைகள்!

அப்பப்பா! மாறுமோ? கூறு.

மதுரை பாபாராஜ்



நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் செயலுக்கும் மற்றும் மகிழ்ச்சிக்கும்
என்றும் பொறுப்பெல்லாம் நீங்கள்தான் என்பதை
முன்வந்தே ஏற்று இலக்கை அடைவதற்கு
நன்னெறியை ஏற்பதே நன்று.

மதுரை பாபாராஜ்

Friday, December 29, 2023

திண்டாடிப் பார்த்திருக்கும் வாழ்வு


 

Thursday, December 28, 2023

இப்படியும் அப்படியும் மக்கள்!


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


வழிகளைத் தேர்ந்தெடுத்து சிந்தித்தால் எண்ணம்
தெளிவாய் இருக்கவேண்டும் பின்னோக்கிச் செல்தல்
தெரியாமல் விட்டுவிடல்
என்பவை வேண்டாம்!
துணிந்தேதான் முன்னேறிச் செல்லவேண்டும் இங்கு!
துணிந்தபின் எண்ணுதல் தீது.

மதுரை பாபாராஜ்

வாழ்க்கையின் கோலங்கள்


 

கொரோனா வருமுன் காப்போம்

 கொரோனா வருமுன் காப்போம்!

25.12.23

முகக்கவசம் போடுங்கள்! கூட்டத்தில் நின்றால்

இடைவெளி விட்டேதான் நில்லுங்கள்! காக்கும்

நடவடிக்கை என்றுமே நன்று.


மதுரை பாபாராஜ்


பொம்மி


 திருமதி தேவிகாராணி

(பொம்மி) கார்த்திகேயனுக்கு வாழ்த்து!


மாநில வங்கியின் பள்ளி மதுரையில்

மாணவி யாகத்தான் கற்றறிந்த பொம்மியா!

நாகரீக ஆடையில் சென்னை நகர்மங்கை

யாகத்தான் நிற்கின்றாள் இங்கு.


மதுரை பாபாராஜ்

Wednesday, December 27, 2023

ஐயா துரைசாமி திருவாசகம்


ஐயா திரு துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


 மாடிமேல மாடிகட்டு! அங்கே செடியநட்டு

வேடிக்கை வாழ்க்கை வாழும் மனிதனே!

ஈடில்லா ஆற்றல் உனக்கு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மகிழ்ச்சியும் அச்சமும் நம்செயல் பாட்டை
துளியளவும் பாதிக்கக் கூடாது! ஆனால்
வலிமையாய் மாறி கடினமான காலச்
செயல்களைத் தாங்கவைத்து முன்னேற்ற வேண்டும்!
இடையூறைத் தாண்டவேண்டும் நாம்.

மதுரை பாபாராஜ்

Tuesday, December 26, 2023

நிலையாமை


 

மதிப்பிற்குரிய துரைசாமி திருவாசகம்


 மதிப்பிற்குரிய துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

கதிரொளி போலவே தோன்றுகின்ற வாழ்க்கை

புதிராய்ப் பலருக்கோ பட்டமரம் இங்கே!

அகிலமே மாயந்தான் சொல்.

மதுரை பாபாராஜ்

மனிதத்தேனீ


  பண்பாளர் மனிதத் தேனீ சொக்கலிங்கம்  அவர்களுக்கு நன்றி!


வண்ண விசிறியும் மஞ்சள்பை நாட்காட்டி

கண்கவரும் சாவிக்கொத் தும்தந்து

கைக்குட்டை

தந்தைக்கு நன்றி மறவாமல் ஆண்டுதோறும்

எண்ணமலர் நூலுடன் ஆறுபொருள் தந்தவரே

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

26.12.23

விஜயா பிரிண்டர்ஸ் 77 ஆண்டு சாதனைக்கு வாழ்த்து!


பண்பாளர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி!

மூன்று குறள்களின் கருத்துக்கு உகந்தவாறு

வாழ்கின்ற பண்பாளர் சொக்கலிங்கம் 

வண்டமிழ்போல்

வாழ்கபல் லாண்டு வளர்ந்து.

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

Parents duty is to provide  to their children  to occupy frontal position among wise.

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

A mother is more happy when others prsise her children than she thrilled when she begot them.

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.

Duty of the child to his/ her parents is making the world to say that what penance their parents did to have such a wonderful children.

அச்சகத் தொண்டில் எழுபத்து ஏழாண்டு

உற்சாகம் நம்பிக்கை நாணயத்தால் தொய்வின்றி

அற்புதமாக ஈடுபட்டு சாதனை முத்திரை

நற்றமிழ் மாமதுரை போற்றவே பாடுபடும்

அச்சகத்தார் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

Monday, December 25, 2023

நண்பர் காலிட் ஆசிரியர் வேட்டை இதழ்

 மலேசிய இதழ் வேட்டையின் ஆசிரியர் நண்பர் காலிட் அவர்களுக்கு:

நமது நட்புக்குரிய குறள்:

குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

Madurai Babaraj:

Friendship is not necessarily of mingling and meeting, but it is the same inner feelings reflected by the minds even without meeting.

வெண்பா:

நட்பின் இழைபின்ன நேரில் உறவாடும்

முத்திரை வேண்டாம்! உள்ளத்தால்--

தொட்டுற

வாடினாலே போதும்! பிசிராந்தை யார்சோழன்

ஈடற்றே நட்பொன்றே நட்பு.


மதுரை பாபாராஜ்

தண்ணீர் தண்ணீர்

 தண்ணீர் தண்ணீர்!

அன்றும் இன்றும்!

முன்பெல்லாம் எங்குசென்ற போதும் குடிநீரோ

அங்கங்கே உண்டாம் இலவசமாய்! இன்றிங்கே

எங்குசென்ற போதும் நமக்குத் தனித்தனியாய்த்

தண்ணீரைக் காசுக்கு வாங்கித்தான் கொண்டுசென்று

நம்தாகம் தீர்க்கவேண்டும் செப்பு.


மதுரை பாபாராஜ்


Sunday, December 24, 2023

கெடுவான் கேடு நினைப்பான்.


 

வசந்தா

 வசந்தாவால் இயலவில்லை!


ஏகாதசி-- துவாதசி இல்லை!

24.12.23


ஏகா தசியென்றால் நாள்முழுதும் சிற்றுண்டி!

ஆகா! துவாதசியா? நாள்முழுதும்  சாப்பாடு! 

வாகாய்ப் பதினேழு காய்வகைகள் கொண்டேதான்

வாய்ருசிக்க அக்குழம்பும் உண்டு! வசந்தாவின்

நோய்நொடித் தாக்கத்தால் ஏகா தசியில்லை!

வாய்மணக்க இன்று துவாதசிச் சாப்பாடு

பார்க்கவில்லை! ஏக்கமே வாழ்வு.


மதுரை பாபாராஜ்


Saturday, December 23, 2023

வாழ்க்கை வாழ்வதற்கே


 நாளும் கோளும் என் செய்யும் என்று அருணகிரி நாதரும் ஆளுடையபிள்ளையும் அன்றே பாடிவைத்துள்ளனர்!இக்காலத்தவரும் அதன் பின் போவதேன்? அதிலிருந்து மீள வழிகாட்டியுள்ளீர்கள்!


நண்பர் தீத்தாரப்பன் தென்காசி

பேத்தி தேஜூவுக்கு வாழ்த்து


 பேத்தி செல்வி ச.ஜெ. தேஜஸ்வினிக்கு வாழ்த்துகள்!

CONGRATS GRAND DAUGHTER :

SELVI. S.J. THEJHASWINIY

23.12.23

பெற்றோர்:

M.சரவணப் பெருமாள்--S. ஜெயசித்ரா

பெற்றோர் மனம்மகிழ பட்டத்தைப் பெற்றுவிட்டாய்!

கற்றதற்  கேற்ப பணிக்களம் செல்கின்றாய்!

அற்புதமாய் ஆற்றலால் முன்னேறி வாழியவே!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

குறள்களின் வாழ்த்து!

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

Parents duty is to provide  to their children  to occupy frontal position among wise.

Madurai Babraj

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

A mother is more happy when others prsise her children than she thrilled when she begot them.

Madurai Babaraj

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.

Duty of the child to his/ her parents is making the world to say that what penance their parents did to have such a wonderful children.

Madurai Babaraj

பலூன்


 காற்றிறங்கிய பலூன்!


தூக்கம் வரவில்லை! தூங்கப் பிடிக்கவில்லை!

ஊக்கம் இழந்துவிட்டேன்! உற்சாகம் காணவில்லை!

காற்றிறங்கி விட்ட பலூனாக மாறிவிட்டேன்!

வாழ்வில் உளைச்சலுடன் நான்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செயல்களைத் திட்டமிடும் நேரத்தில்  மட்டும்
பயந்தன்னை உள்ளீடாய்க் காணவேண்டும்! அச்சம்
இதைத்தாண்டித் தங்க அனுமதிக்க வேண்டாம்!
செயல்களைச் செய்வதற்கு முன்னாலே அந்தப்
பயமே குழப்பிவிடும் கூறு.

மதுரை பாபாராஜ்

கற்போம்


 

Friday, December 22, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எப்போதும் உங்களை நீங்கள் அழுத்தத்தில்
வைத்திருக்க வேண்டிய தில்லை !சிறிதளவு
திட்டமும் அந்தச் செயலை முடிப்பதற்கு
உள்ள நடவடிக்கை கொண்டால்  உதவிடும்!
உங்கள் இலக்கே குறி.

மதுரை பாபாராஜ்

Thursday, December 21, 2023

மாற்றம் மணித்துளிதான்!

 மணித்துளியில் மாறிய சூழ்நிலை!


நிலையாமை!


மேசையில் உட்கார்ந்து கால்மேலே கால்போட்டே

ஆசையாய்ச் சாப்பிட்ட நாள்கள் மழைவெள்ளம்

சூழ்ந்ததால் மாறி படகிலே சென்றேதான்

வாங்கியே சாப்பிடும் கோலத்தை் தந்ததே!

வாழ்க்கை வசதிகள் மாறியதே இப்புயலால்!

மாற்றம் மணித்துளிதான் சொல்.


மதுரை பாபாராஜ்


காடு வா! வா!

 காடு வா!வா! வீடு போ!போ!


காடென்னை வாவென்றும் வீடென்னைப்  போவென்றும்

கோடுபோட்டுக் கூறும் முதுமைப் பருவத்தில்

பாடாய்ப் படுத்துகின்ற சூழ்நிலைகள் தாக்கித்தான்

வாடவைத்துப் பார்ப்பதேன்? கூறு.


மதுரை பாபாராஜ்

கறிவேப்பிலை


 

Wednesday, December 20, 2023

சீற்றத்தின் பிடியில்


 

நண்பர் எழில்புத்தன்

 

நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!

பலவகைப் பாடத்தை வாழ்க்கை உணர்த்தும்!
கவனங்கள் அந்தந்த பாடத்தைக் கற்றே
சிறப்பாக நாளும் செயல்பட்டு
வாழும்
நடைமுறையைக் காட்டும் வழியை உணர்ந்தே
செயல்புரிய வேண்டும் புரிந்து.

மதுரை பாபாராஜ்

சங்கத்தமிழ்க் கவிதைப் போட்டி


 சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா!


கவிதைப்போட்டி! 20.12.23


நாவினால் சுட்ட வடு!


பண்படுத்தும் சொற்களை விட்டுவிட்டு

உள்ளத்தைப்

புண்படுத்தும் சொற்களைக் கட்டவிழ்க்கும் வக்கிரம்

என்றும் வடுவாக மாறிவிடும் ஆறாது!

பண்படுத்தும் சொற்களைப் பேசு.


கனிவான சொற்களைக் கையாள வேண்டும்!

பணிவாகப் பேசிப் பழகத்தான் வேண்டும்!

மனதை ரணப்படுத்தும் போக்கினை விட்டே

தினமும் நளினமாகப் பேசு.


சொல்லுக்குச் சொல்லிங்கே வம்புகளைப் பேசுகின்ற

எல்லைகள் தாண்டுகின்ற தீவிர வாதத்தால்

தொல்லைகள் உண்டாகும்! உள்ளம் உளைச்சலென்னும்

அல்லலுக்கே ஆளாகும் செப்பு.


குறள்கூறும் நல்ல அறிவுரையைப் போற்றிச்

சிறப்பாக வாழ்ந்திருந்தால் புண்பட்டு வாழும்

குறையின்றி வாழலாம் கூறு.


மதுரை பாபாராஜ்


உயிரில் கலந்த மதுரை

 உயிரில் கலந்த மதுரை


நற்றமிழ் வளர்த்த மதுரையிலே

நாற்பத் தெட்டாம் ஆண்டினிலே

பெற்றோர் தேவகி, முத்துசுப்பு

பெருமிதம் அடைய நான்பிறந்தேன்!


கற்றதும் அருமை மதுரையிலே

கவிஞன் ஆனதும் மதுரையிலே

சுற்றம் சிறந்ததும்  மதுரையிலே

சுற்றித் திரிந்ததும்  மதுரையிலே


பணிக்களம் பென்னர் மதுரையிலே

பக்குவம் பெற்றதும் மதுரையிலே

செதுக்கிய சிற்பி மதுரைதான்

பண்புகள் தந்ததும் மதுரைதான்


இல்லறம் தந்தது மதுரைதான்

இலக்கியம் தந்தது மதுரைதான்

நல்லவர் அறிஞர் தொடர்புகளால்

நாளும் கவித்திறன் வளர்ந்ததுவே


மதுரை எனது உயிர்மூச்சு

மறப்பது என்பது வெறும்பேச்சு

மதுரையை என்றும் வணங்கிடுவேன்

மனதில் நினைத்தே மகிழ்ந்திடுவேன்


மதுரை பாபாராஜ்

Tuesday, December 19, 2023

உதை

 நெஞ்சிலே உதை!

மழலையின் கால்களோ நெஞ்சில் உதைத்தால்

முகத்தில் மகிழ்ச்சி சிரிப்பாய் மலரும்!

வளர்ந்தபின் வாழ்வில் செயலால் உதைத்தால்

வலிக்கும் முகஞ்சுழிக்கும் சொல்.

மதுரை பாபாராஜ்


வரலாறாய் மாற்று!

 வரலாறாய் மாற்று!

அவமானந் தன்னை வெகுமான மாக்கி

வரலாறாய் மாற்றி உலகம் புகழ

வரலாறாய் வாழும் தலைவர்கள் உண்டு!

வரலாறாய் மாற்றித்தான் காட்டு.

மதுரை பாபாராஜ்


பிள்ளைகளஇன் ஏக்கம்

 பிள்ளைகள் உள்ளம்!

மணித்துளியில் வெள்ளத்தால் வீடிழந்தார்! உண்ண

உணவிழந்தார்! ஆடை இழந்தார்! எல்லாம்

இழந்தே நடுத்தெரு வாழ்க்கைக்கே வந்தார்!

புயலின் நிலைமாற்றம் காண்.


இப்படி வாழ்க்கை நிலைமாறும் போக்கிலே

எல்லாம் இருந்தபோதும் வீட்டில் இணையருக்குள் 

எப்போதும் சண்டையும் சச்சரவும்

வாழ்வானால்

பிள்ளைகள் ஏங்குகின்றார் பார்.


மதுரை பாபாராஜ்

வாட்டத்தில் நான்

 வாட்டத்தில் நான்.

கேட்க மறுக்கின்றார்! பார்க்கத்  தவிர்க்கின்றார்!

ஆட்டிப் படைக்கிறதே காலம்! மனங்குமுறி

ஏட்டிக்குப் போட்டியாக வாழ்வதால் என்னபயன்?

வாட்டமுடன் வாழ்கின்றேன் நான்.


மதுரை பாபாராஜ்


உள்ளவாறு சொல்


 

Monday, December 18, 2023

குறள் 70

 குறள் 70


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 

என்நோற்றான் கொல்எனும் சொல்.


Duty of the son to his parents is making the world to 

say that what penance their parents did to have such a

 wonderful son.

என்ன தவம் செய்தாரோ!

பெற்றோரை வாடவைத்துப் பார்க்கின்ற பிள்ளையைப்

பெற்றெடுக்க பெற்றோர் தவமென்ன செய்தாரோ?

பெற்றோர் உளைச்சலில் தான்.


மதுரை பாபாராஜ்


திரு துரைசாமி திருவாசகம்

 The greatest gift you can give someone is your time. Because when you give your time, you are giving a portion of your life you will never get back. 


Good morning. Have a successful week ahead 🍁🪅💐


மதிப்பிற்குரிய துரைசாமி திருவாசகம் ஐயா அனுப்பியதற்குக் கவிதை:


உன்னுடைய நேரத்தை மற்றவர்க் காகநீ

தந்து செலவழித்தல் இங்கே மகத்தான

அன்பளிப் பாகுமாம்! ஏனென்றால் உன்னுடைய

மண்ணக  வாழ்வின் பகுதியைத் தந்துவிட்டாய்!

என்றும் கிடைக்காது சொல்.


மதுரை பாபாராஜ்

Sunday, December 17, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிக்கலில்லை என்றுநீங்கள் எண்ணினால் சிக்கலில்லை!
சிக்கலென்று நீங்கள் நினைத்துவிட்டால் சிக்கல்தான்!
உங்களைத் தேடிவரும் சிக்கலைக் காட்டிலும்
உங்களது ஆற்றல் வலிமைதான் என்றெண்ணிச்
சிக்கலைத் தீர்க்கவேண்டும் சொல்.

மதுரை பாபாராஜ்

நெல்லைமாவட்டம் கனமழை


 நெல்லை மாவட்டம் கனமழை!

17.12.23

நெல்லைமா வட்டத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து
நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் நீர்புகுந்தே
தொல்லைக்குள் ளாக்கிய காட்சியைக் கண்டபோது
உள்ளம் துடிக்கிறது காண்.

கனமழை ஓயாமல் பெய்கின்ற கோலம்!
அனைத்துமக்கள் வாழ்விலும் பாதிப்பின் காட்சி!
அணைகள் நிரம்புகின்ற வேகத்தில் அச்சம்!
விரைவிலே நிற்கும் மழை.

மதுரை பாபாராஜ்

Saturday, December 16, 2023

Sushant birthday


 செல்லப் பேரன் R.S. சுசாந்த் சிரிராம் பிறந்தநாள் கொண்டாட்டம்!

அகவைத் திருநாள்:15.12.2023.

             அகவை             22

PLACE: NANDHANA PALACE - VELACHERY

உறவினர்கள் நண்பர்கள் சுற்றத்தார் வாழ்த்த

பிறந்தநாள் கொண்டாட்டம் ஆகா! அருமை!

இரவு உணவு வகைகளோ நாவில்

சுவைகூட்ட உண்டோம் ரசித்து.


வந்து கலந்துகொண்ட எல்லோர்க்கும் நன்றி!

அன்புடன் தந்தோம் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 



குறளடியான்


 தமிழறிஞர் குறளடியான் வாழ்க!


அகவைத் திருநாள்: 28.12.23


அகவை: 74/75


அகவை முதிர்ந்த தமிழறிஞர் 

வாழ்க!

குறள்களைப் போற்றும் குறளடியான் வாழ்க!

சிறப்புடன் வாழ்க! நலமுடன் 

வாழ்க!

நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி


 மருமகன் ரவியிடம் கண்டோம்!


சிரிப்பு, பொறுமை, அமைதி,  கடமை

பெரியோர் தொடங்கி சிறியோர் வரைக்கும்

தெளிவாய்ச் செயல்படும் பண்புகள் தம்மை

ரவியிடம் கண்டோம் மகிழ்ந்து.


அனுசரித்துச் செல்லும் அணுகுமுறை ஒன்றே

மனதின் பெருந்தன்மைப் பண்பாகும்! அந்த

மகத்தான பண்புதனைக் கொண்டவரை நாங்கள்

அகங்குளிர வாழ்த்துகிறோம் பார்த்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

தண்ணியிலே கண்டம்


 

கொழுக்கட்டை


 மகள் பிருந்தா கொண்டுவந்த கொழுக்கட்டை அருமை!


பூரணம் வைத்த கொழுக்கட்டை அன்புமகள்

ஆவலுடன் கொண்டுவந்த காரணத்தால் நன்றாக 

நாருசிக்கச் சாப்பிட்டோம்! நன்றி நவில்கின்றோம்!

வாழ்க பிருந்தா மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:

செய்தாக வேண்டுமென்ற பட்டியலில் நம்பணிகள்
தம்மையும் சேர்ப்பது நல்லதே! ஏனென்றால்
அந்தச் செயல்கள் விடுபட்டுப் போதலே
இன்றி முடிக்கலாம் நாம்.

மதுரை பாபாராஜ்

Friday, December 15, 2023

குறளும் நடைமுறையும்


 

புறக்கணி


 

திருமண வாழ்த்துப்பா


 திருமண வாழ்த்துப்பா!

திருமணநாள்: 15.12.2023

மணமக்கள்:

MEGHNA-- RISHIKESH

மேக்னா -- ரிஷிகேஷ்


குறள்நெறி் போற்றிக் குவலயம் மெச்ச

சிறப்புடன் வாழ்க! மகிழ்வுடன் வாழ்க!

நிறைவுடன் வாழ்க! வளமுடன் வாழ்க!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


வாழ்த்தும் இதயங்கள்:

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எந்தச் செயலையும் செய்ய விளக்கமும்
செய்முறையும் உண்டெனினும் அந்தச் செயல்களை
இங்கே எதிர்பார்த்த நேரத்தைக் காட்டிலும்
நம்மால் விரைந்து முடித்தல் தவறல்ல!
செய்வதை ஆற்றலுடன் செய்.

மதுரை பாபாராஜ்

Thursday, December 14, 2023

சுசாந்த் பிறந்தநாள் வாழ்த்து


 

KK Grove Apt


 இந்தக் குறளுக்கும் அதன் பொருளுக்கும் உரியவர்

                  KK

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள்!

அறிந்தேன்! மகிழ்ந்தேன்! வாழ்த்துகள்!

788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

When a cloth slips from our body, hands will automatically hold the cloth from slipping. Likewise, voluntary help to a friend at the time of distress is true friendship.


MADURAI BABARAJ


நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எடுத்த செயலை நிறைவேற்ற வேண்டும்!
நிறைவேற்றும் முன்தரும் பாடத்தைக்  கற்றுத்
தெளிந்தே அதற்குரிய மாற்றுச் செயலைக்
கணித்தேதான் திட்டமிட்ட வண்ணம் இலக்கைக்
கனியவைத்தல் என்றும் சிறப்பு.

மதுரை பாபாராஜ்

Wednesday, December 13, 2023

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிறுவேலை யானாலும் அந்தப் பணியைத்
தொடர்தல் அவசியமாம்! ஒவ்வொரு நாளும்
நமது கடமையைப் பங்களிப்பை நாளும்
அளிக்க உறுதிசெய்தல் வேண்டும் உவந்து!
கடமை உணர்வு நிறைவு.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செயலைத் தொடர்ச்சியாக செய்து முடித்தல்
கடினமே! கொஞ்சம் அசந்தாலும்
போதும்
எடுத்த முயற்சிகள் எல்லாமே வீண்தான்!
விழிப்புணர்வு தேவை உணர்.

மதுரை பாபாராஜ்

Monday, December 11, 2023

கண்ணீரின்றி அமையாது வாழ்க்கை!


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


அன்றாட வாழ்வில் வலிமை, துணிவையும்
கொண்டுவர ஏராள மான வழியுண்டு!
நன்கு எளிதான ஒன்றே ஒழுக்கத்தை
நம்வாழ்க்கை தன்னில் பழக்கமாக மாற்றுதல்!
என்றும் ஒழுக்கத்தை நாடு.

மதுரை பாபாராஜ்

Sunday, December 10, 2023

இருக்கும் பொழுதே பேசு


 

Friday, December 08, 2023

குற்றமுள்ள நெஞ்சு


 

காலம் உணர்த்தும்


 

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேரம் செலவழித்தல் நம்முடைய நோக்கமல்ல!
நாம்செய்யும் எந்தச் செயலோ தரமான
நேரம் முதலீடு செய்கிறோமா என்பதைப்
பார்த்தே கணிப்பது நன்று.

மதுரை பாபாராஜ்

பதற்றமோ பதற்றம்!