Tuesday, November 30, 2021

நடைமுறை வாழ்வே மெய்

 நடைமுறை வாழ்வே மெய்!


கடைவிரிக்கும் வாழ்க்கையோ வேறாகும் இங்கே!

நடைமுறை வாழ்க்கையோ வேறாகும் இங்கே!

கடைவிரிக்கும் வாழ்வில் அறிவும் புகழும்

தடையின்றி வாழ்வார்! தலைநிமிர்ந்தும்  வாழ்வார்!

நடைமுறை வாழ்வில் தலைகுனிந்தே வாழ்வார்!

கடைவிரித்த வாழ்வும் நடைமுறை வாழ்வும்

புறவாழ்வு மற்றும் அகவாழ்வாம் இங்கு!

நடைமுறையே மெய்யான வாழ்வு.


மதுரை பாபாராஜ்

ஆதித்யா அம்மா அனுப்பியதன் தமிழாக்கம்.


ஆதித்யா அம்மா அனுப்பியதன் தமிழாக்கம்.


நாளும் இனிமை நிகழ்வை நினைவுறுத்த

மேலும் கனிவான மாந்தரை எண்ணவும்

காலைப் பொழுதோ அருமைப் பொழுதாகும்!

வாழ்த்துவதே நற்பண்பு சொல்


மதுரை பாபாராஜ்

 

குறள் 341



குறள் 341


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


பற்றுமேல் பற்றுவைத்துப் பல்பொருள் அங்காடி

சற்றே நுழைந்தான் எப்பொருள்மேல் பற்றினை

விட்டுவிட்டுச் செல்வதோ என்றே குழப்பமாகி

பற்றுவிட்டு வாங்காமல் வந்தான் வெளியில்தான்!

புற்றுநாகம் பற்றாகும் சொல்.


மதுரை பாபாராஜ்

தங்கள் சொல்

தங்கச்  சொல்...ஐயா.

தென்காசி கனியன் கிருஷ்ணன்


 

பாடலாசிரியர் மருதகாசி அவர்களின் நினைவுநாள்!


பாடலாசிரியர் மருதகாசி அவர்களின் நினைவுநாள்!


29.11.21


கருத்தாழம் மிக்க திரைப்படப் பாடல்

மருதகாசி அய்யாவின் ஆற்றலைக் கூறும்!

திரைப்படம் உள்ளவரை காலத்தை வென்று

நிலைக்கும்! புகழ்க்கொடி நாட்டும்! வணங்கு! 

அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Monday, November 29, 2021

இல்லற ரோசா அழகே!


இல்லற ரோசா அழகே!

முள்ளிருந்த போதிலும் ரோசா அழகே!
முள்ளாய் உறுத்தினாலும் வாழ்வில் இணையரோ
உள்ளத்தால் விட்டுக் கொடுத்தால் குடும்பமென்னும்
இல்லற ரோசா அழகு.

மதுரை பாபாராஜ்

 

நாடக மேடை


நாடக மேடை


வாழ்க்கை என்பது நாடக மேடை!

நாமெல் லோரும் நடிகர்கள்


ஒவ்வொரு நாளும் ஒரு வேடம்

வேடம் கலைந்ததும் மறுவேடம்!


வேடங்கள் எப்படிப் போட்டாலும்

அடிப்படைப் பண்புகள் மாறவேண்டும்!


எதிர்மறைப் பண்புகள் எல்லாமே

உதிர்ந்து போகும் சருகுகளே!


உதிர்க்க மறுத்து வாழ்ந்திருந்தால்

உறுத்தும் உந்தன் மனசாட்சி!


வேடம்  எத்தனைப் போட்டாலும்

உண்மை ஒருநாள் வெளிப்படுமே!


நேர்மறைப் பண்பைப் போற்றிடுவோம்

நிம்மதி யாக வாழ்ந்திடுவோம்!


மதுரை பாபாராஜ்







 

உன்னகமே நிம்மதி!


வணக்கம் நண்பரே!


நண்பர் IG சேகர் அனுப்பிய காலை வணக்கம் படம்!


பறவையே! இன்றைய கவிதை!


உன்னகமே நிம்மதி!


நிம்மதியைத் தேடி அலைகின்றாய்! தேடுகின்ற

நிம்மதி உன்னிடமே உள்ளதைக் கண்டுகொள்!

உன்னகத்தில் உள்ளதை ஏன்புறத்தில் தேடுகின்றாய்?

உன்னகமே நிம்மதியின் கூடு.


மதுரை பாபாராஜ்

நொடிப் பொழுதில்

     கவி புனையும்

மடி இல்லா

     மா கவியே!

தேடி உன்னை 

     நித்தம் வரும்

நாடி உன்னை 

     நாளும் வரும்

நற் கருத்தை

     வாழ்த்தி வரும்

ஓவியத்தின் உட்பொருளை

     உட் கொண்டு

பா தொடுத்து

     பா மாலையாய்

பாமரரும் புரியும்படி

     பாரெங்கும் பரவசமாய்

பாங்குடனே பகிர்ந்தளித்து

     பரவசத்தில் ஆழ்த்தும்

ஆற்றலை ஆராதித்து

     மதுரகவி பாபாவை

கவிராயர் அய்யாவை

     கைகூப்பி வணங்குகிறேன்!

தலைதாழ்த்தி வாழ்த்துகிறேன்!

     பார்போற்ற வாழ்கவென்று!


இமயவரம்பன்


நண்பர் இமயவரம்பனுக்கு நன்றி!


வான்மழையை விஞ்சுகின்ற தேன்மழை பாழையாய்

வாழ்த்து மழையை இமய வரம்பன்தான்

ஆழ்மன நட்புடன் தந்தார் மகிழ்ந்தேதான்!

வாழ்வாங்கு வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

vovRamasamy:

மடி இல்லா மாகவி! 200% உண்மை

👍👍👍


VOVCR:

நல்லன எல்லா திசைகளிலிருந்தும் வரட்டும்.

உங்களைப் பற்றிய நண்பர் இமயவரம்பன் பதிவு முற்றிலும் உண்மை..

பெரியகுளம் இராமசாமி ஐயாவும் இதே கருத்தை உடையவர்..

பாபா... பா புனைவதில் பாயும் புலி 🐯 😁👍😊🙏💐

 

நண்பர் நெல்லை இசக்கிராஜன் அனுப்பிய படம்


நண்பர் நெல்லை இசக்கிராஜன் அனுப்பிய படம்


குறள்:


எல்லா விளக்கும் விளக்கல்ல

 சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.


இவ்விளக்கோ வீட்டின் புறஇருளைப்

போக்கலாம்!

உள்ளத்தில் தேங்கும் இருளினைப் போக்குதல்

பொய்யாமை என்னும் ஒளிவிளக்கே!

அவ்விளக்கே

மெய்விளக்காம் வாழ்வில்! உணர்.


மதுரை பாபாராஜ்

 

கொடுமை


கொடுமை!

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

மு.வ உரை:

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.


வெளிநாட்டில் பெற்றோர்க்கு வேலை! அவரோ

செவியின்பம் கேட்பதற்குக் காயலையில் பார்ப்பார்!

தொடுதல் கிடைக்காது! ஏற்கலாம் இஃதை!

ஒருசிலர் ஊருக்கு வேண்டுமென்றே போவார்!

தொலைபேசி வாய்ப்பே குழந்தைக ளுக்கு!

கொடுமைதான் இத்தகைய வாழ்வு.


காயலை-- SKYPE


மதுரை பாபாராஜ்

 

தன்னலம்

 தன்னலம்!


உன்னுடைய தன்னலக் காரணத்தால் எங்களை

இங்கே பலியாடாய் மாற்றியது நல்லதல்ல!

பண்பற்ற உன்நடத்தை கண்டே பதறுகின்றோம்!

எங்களுக் கேனிந்த கேடு?


மதுரை பாபாராஜ்

கொடிது

 கொடிது!


மனமும் உடலும் உளைச்சல் நெருப்பில்  தினமும் கருகினால் எத்தனை நாள்தான்

ரணத்தின் வலியைப் பொறுப்பது இங்கே?

கணையாக மாறாதே! நீ.


எங்கிருக்க வேண்டுமோ அங்கிருக்க வேண்டுமென்பேன்!

எங்கெங்கோ வாழ்தலும் எப்படியோ வாழ்தலும்

தன்குடும்பத் தோடின்றி  தன்னல எண்ணமுடன்

இங்கே பலியாடாய் மாற்றி வதைக்கின்ற

எண்ணம் மிகவும் கொடிது.


மதுரை பாபாராஜ்


சரியாக வாழப் பழகு

 சரியாக வாழப் பழகு!


இரவில் வெகுநேரம் தூங்காமல் நாளும்

ஒருவாறாய்த் தூங்கியே நேரங் கழித்துப்

பகல்கழிந்த பின்பு விழித்தேதான் வந்தே

அரைகுறையாய்  நண்பகலில் காலை உணவை

எடுப்பார்! மாலை மதிய உணவும்,

நடுநிசியில் ஏற்பார் இரவு உணவை!

இதுதான் நடைமுறை என்றாகிப் போன

சொதப்பலான  வாழ்க்கை முறை.


சரியான நேரத்தில் தூங்கப் பழகி,

சரியான நேரத்தில் உண்ணப் பழகி,

சரியான நேரத்தில்  எல்லாம் பழகி

சரியாக வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்




Sunday, November 28, 2021

ஓரருவி யானதே ஐந்தருவி!


ஓரருவி யானதே ஐந்தருவி!

கட்டுக் கடங்காத வெள்ளம் பெருக்கெடுத்துச்

சுற்றிவந்த காரணத்தால் ஐந்தருவி மாறித்தான்

ஒட்டி உருவினிலே ஓரருவி யானதே!

கட்டுக்குள் வாழ்தல் அழகு.


ஐந்தருவி கட்டுக்குள் ஓடிவந்தால் என்றுமே

ஐந்தருவிக் காட்சி அழகாக பார்க்கலாம்!

ஐம்புலனைப் பேராசை வெள்ளமோ ஆட்கொள்ளும்

அந்தநிலை போலத்தான் வெள்ளம் பெருக்கெடுத்தால்

தன்னியல்பு மாறிவிடும் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

குறள் 881


நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:881)


பொழிப்பு (மு வரதராசன்): இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும்.


நிழலே துன்பம்:


கணவன் மனைவி ஒருவர்க் கொருவர்

நிழலாகி பக்குவமாய் வாழ்ந்தால்தான் இன்பம்!

தழலாகி வேற்றுமை கொண்டாலோ துன்பம்!

இணையர் இணக்கம் அழகு.


நீரே துன்பம்:


அளவாய்ப் பெய்தால் மழைநீரோ இன்பம்!

அளவின்றி வெள்ளமாகி நாட்டை வளைத்தால்

அளவற்ற துன்பமாய் மாறும் மழைதான்!

அளவாகப் பெய்தால் நலம்.


மதுரை பாபாராஜ்

 

Saturday, November 27, 2021

சிறுவர்கள் , இளைஞர்கள் பழக்கத்தை மாற்றினால் நன்று!

 சிறுவர்கள் , இளைஞர்கள் பழக்கத்தை மாற்றினால் நன்று!

-------------------------------------------------------------

காலைச் சிற்றுண்டி மணி 7-- 10

-------------------------------------------------------------

காலைமணி ஏழுக்குத் துயிலெழுந்து பல்துலக்கி

பாலோ குளம்பியோ இங்கே பருகவேண்டும்!

காலைமணி ஒன்பதுக்குள் நீராடி சிற்றுண்டி

காலைமணி ஒன்பதரைக் குள்ளாக சாப்பிட்டால்

மேனி சுறுசுறுப்பைப் பெறும்.


மதிய உணவு பிற்பகல் 1 மணி

இரவு உணவு.  இரவு  8-9 மணி

தூங்கும்நேரம் இரவு 10 மணி

--------------------------------------------------------

பிற்பகல்  ஒருமணிக்கு இங்கே உணவருந்தி

சற்றேதான் ஓய்வெடுத்து மாலைப் பொழுதிலே

பற்றுடன் பாலோ குளம்பியோ ஏற்கவேண்டும்!

சற்றே விளையாடி பின்பு படிக்கவேண்டும்!

எட்டுமுதல் ஒன்பதுக்குள் சாப்பிட்டே

பத்துமணிக்

கெல்லாம் இரவு படுக்கவேண்டும்! தூங்கவேண்டும்!

இப்படி வாழப் பழகு.


இப்படிப் பின்பற்றி வாழ்ந்தால் உடல்நலம்

முற்றிலும் சீர்படும்! உள்ளம் சுறுசுறுப்பாய்

எப்போதும் இங்கே இயங்கும் உடல்நிலையும்

அற்புதமாய் மாறும் உணர்.


மதுரை பாபாராஜ்



நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நண்பர் பன்னீர் செல்வம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


பறவைகளே! ஒமிக்ரோன் கொரோனா வரலாம்!


என்னடா! இந்தக் கொரோனாவோ போய்விடும்,

நம்பிக்கை வந்தபோது வேறு கொரோனாதான்

வந்துவிடும் அச்சம் வருகிறதா? என்செய்ய?

வென்றுகாட்டச் சூளுரைப்போம் நாம்.


மதுரை பாபாராஜ்

 

பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடி அவர்கள் அறிவுரை!


பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடி அவர்கள் அறிவுரை!


ஒமிக்ரான் கொரோனா வருமுன் காப்போம்!


வருமுன்னே காக்கும் நடவடிக்கை எல்லாம்

கருத்துடன் நாட்டில் எடுக்கவேண்டும் என்றே

பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்!

கரங்கொடுப்போம் தோள்கொடுப்போம் சூழ்ந்து.


மாநில ஆட்சியில் உள்ளவர்கள் எல்லோரும்

வேண்டிய எச்சரிக்கை தந்தே செயல்பட்டு்

சீண்டவரும் இந்தப் புதியவகை தொற்றுநோய்

தீண்டாமல் மக்களைக் காக்க நடவடிக்கை

மேற்கொள்ள முன்வருவோம் செப்பு.


மதுரை பாபாராஜ்

 

அனைவருடனும் களத்தில் நிற்பேன்


அனைவருடனும் களத்தில் நிற்பேன்!

-மாண்புமிகு முதல்வர். மு.க. ஸ்டாலின்!

அனைவருக்கும் நன்றி!


வெள்ள நிவாரணத் தொண்டுகளில் ஈடுபடும்

உள்ளத்தைக் கொண்டோர் மனிதநேயச் செம்மல்கள்!

அல்லும் பகலும் மழையில் நனைந்து பணிக்களத்தில்

சொல்லொணாத் துன்பத்தை ஏற்றே உழைக்கின்றார்!

எல்லோ ருடனும்நான் தோளோடு தோள்நிற்பேன்!

சொல்வது மட்டுமல்ல செய்துகாட்டும் நம்முதல்வர்

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


கொட்டும் மழையைப் பொருட்படுத் தாமலும்

அற்புத மாகப் பணியாற்றும் எல்லோரும்

நன்றிக் குரியவர்கள்! வாழ்த்தி வணங்குகிறோம்!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்




 

கவிஞர் பாலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


கவிஞர் பாலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


28.11.21


சிந்துவெளி என்றதும் துள்ளி வரும்பெயர்

எங்கள் கவிஞராம் பாலாதான்! பன்முகம்

இந்த ஒருமுகத்தின் ஆளுமை ஆற்றலாய்

இங்கே மிளிர்கிறது! பூத்துக் குலுங்குகின்ற

புன்னகை மன்னரே! நாட்டுக் குறளளித்த

நண்பரே! வள்ளுவரின்தோள்தொட்டுப்

பாடுகின்ற

வண்டமிழ்ப் பாவலரே! பல்லாண்டு வாழியவே!

பொன்மனப் பாவலரை வாழ்த்து.


தமிழ்நெடுஞ் சாலை விகடன் தொடரில்

நிகழ்வின் பயணங்கள் அற்புதம் என்பேன்!

மகத்தான பாலாவின் முத்திரைச் சொற்கள்

படிக்கப் படிக்கப் படிப்பதற்குத் தூண்டும்!

குறள்நெறிச் செம்மலை வாழ்த்து.



வாழ்த்தும் இதயங்கள்

மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

கண்மூடித்தனம்

 கண்மூடித்தனம்!


சொந்தக் குழந்தைகள் உள்ளம் தவித்திருக்க

எந்தக் குழந்தை யிடமோ மகிழ்ந்திருத்தல் 

என்ன நியாயமோ இங்கே தெரியவில்லை!

கண்மூடித் தனமென்றும் தப்பு.


மதுரை பாபாராஜ்

வானத்தின் பயமுறுத்தல்



வானத்தின் பயமுறுத்தல்!

27.11.21 மாலை மணி 7.20

குழந்தையோ கல்லெடுத்து வீசிருவேன் என்று

பயமுறுத்திப் பார்ப்பதைப் போலத்தான் வானம்

கடகட வென்றே உறுமி இடியை

உருட்டி மழைபெய்யப் போறேன்நான் என்றே

மிரட்டுது ! அஞ்சுகிறோம் நாம்.


மதுரை பாபாராஜ்

Friday, November 26, 2021

நண்பர் எழில் புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


நண்பர் எழில் புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்தின் தமிழாக்கம்.


உன்னுள்  இருக்கும் சிங்க வலிமையை

நன்குணர, இங்கே தெரியாத சிக்கல்கள்

பின்னும் முடிச்சுகளைக் கட்டவிழ்க்க முன்வந்தே

மன்னிக்க வேண்டும் உடனடியாய்!

மன்னித்தல்

பண்பே அமைதிக்குத் தீர்வு.


மதுரை பாபாராஜ்

 

படம் ஒன்று கவிதைகள் இரண்டு



 




படம் ஒன்று கவிதைகள் இரண்டு!

எப்போதும் கைபேசி காதோடு காதிருக்க
சுட்டும் சுடர்விழிகள் இங்கே மடிக்கணினி
கொட்டும் விவரத்தைப் பார்த்திருக்க
நாள்தோறும்
இப்படி வாழ்கின்ற கோலங்கள் வீட்டிலும்
என்றால்நாம் பேசுவ(து) என்று?

என்னதான் வேலையில் மூழ்கி இருந்தாலும்
தங்கள் குழந்தைக்கு வேண்டு்ம் உணவினைத்
தங்குதடை இன்றியே ஊட்டுகின்ற அம்மாவின்
அன்பிற்(கு) இணையுண்டோ? சொல்.

மதுரை பாபாராஜ்

வாழ்வில் வளங்கள் பல்கி பெருகிட
வளரும் தலைமுறையின் ஆவல்களை பூர்த்தி செய்ய
தம்மை வளர்த்த தலைமுறையின் நலத்தைக் காத்திட
ஏற்ற கடமைகளை செவ்வனே முடித்திட
காதில் கைபேசியுடன் மடிக்கணினி ஏந்திய நாங்கள் இருக்கும் கோலம் குடும்பத்திற்கான அழகு மிகுந்த ரங்கோலி...
பி.கு. பேசுவதற்கு எங்களுக்கும் ஆசை தான். புலி வாலைப் பிடித்தாகி விட்டது😳

மு.சரவணப் பெருமாள்,திண்டுக்கல்.

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்:


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்:


அன்பைத் தெரிவிக்க நண்பர் அனுப்பிய

வண்ண மலர்க்கொத்து தந்த வணக்கத்தை

நன்றியுடன் ஏற்றேன் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

அறிவிலி

 அறிவிலி!

பெற்றோரை நாளும் அலறவைக்கும் பிள்ளைகள்

கற்றிருந்த போதும் அறிவிலி என்பேன்!

எப்படியும் வாழ்வேன் என்விருப்பம் என்றுரைத்தால்

பெற்றோர் துடித்திருப்பார் நொந்து.


மதுரை பாபாராஜ்

சோதிடர்

 சோதிடர்!


சோதிடர் எல்லோர்க்கும் சுக்ரதிசை வந்துவிடும்

வாழ்க்கை மகிழ்ச்சிதான் என்றார்! எனக்குமட்டும்

பார்த்து தலைசுத்தும் சுத்ரதிசை என்றுசொன்னார்!

சோதிடரை விட்டகன்றேன் நான்.


மதுரை பாபாராஜ்


மழையே துயர்


மழையே துயர்!

மழையே!அளவாகப் பெய்தால் அழகே!

மழைநீ அளவின்றிப் பெய்தால் அழிவே!

மழையே! தொடர்மழையாய் மாறிய கோலம்

நிலையானால் வாழ்வே துயர்.


காற்றழுத்த மண்டலங்கள் நாளும் உருவாகி

ஆற்றலுடன் ஆழிக் கரையோர ஊர்களைத்

தாக்கும் நிலையெடுத்தால் தத்தளிப்பே வாழ்வாகும்!

சீற்றம் குறைந்தால் நலம்.



மதுரை பாபாராஜ்

27.11.21

 

வாழ்க்கை இதுதானா?


வாழ்க்கை இதுதானா?


வாழ்ந்தது வாழ்க்கையா? வாழ்வது வாழ்க்கையா?

வாழ்க்கை புரியவில்லை! வாழத் தெரியவில்லை!

வாழ்க்கைச் சுமைகளைத் தோளில்

சுமந்துவந்தேன்!

தோள்சுமையை இங்கே இறக்கிடும் நேரத்தில்

தோள்மீது பாறாங்கல் ஏற்றினார் என்செய்வேன்?

வாழ்ந்தது வாழ்க்கையா? வாழ்வது வாழ்க்கையா?

வாழ்க்கை இதுதானா? சொல்.


மதுரை பாபாராஜ்

 

மென்மையே அன்பு


மென்மையே அன்பு!


அன்பை நளினமாகக் காட்டினால் உள்ளத்தில்

புன்னகைப் பூமலரும்! அம்பாகப் பாய்ச்சினால்

புண்பட்டு வம்பாகப் போய்விடும் காயமாகும்!

மென்மையே அன்புக்குப் பண்பு.


மதுரை பாபாராஜ்

 

தக்காளி தவிர்!


தக்காளி தவிர்!


தக்காளி சேர்க்காமல் இங்கே சமைக்கின்ற

அக்கறை கொண்டே உணவைச் சமைத்தால்

தக்காளி காணும் யானைவிலை எப்படியும்

டக்கென்றே பூனைவிலை யாய்க்குறையும் 

பார்க்கலாம்!

தக்காளி வேண்டாம் தவிர்.

மதுரை பாபாராஜ்


ஓர் அன்பான (எச்சரிக்கை) வேண்டுகோள்*


 காரகுழம்பு

மோர்குழம்பு

பீர்கங்காய் பால்கூட்டு

புளிசாதம்

லெமன்சாதம்

கறிவேப்பிலை சாதம்

புதினா சாதம்

மிளகு ரசம்

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்

(கடலைமாவு சட்னி சப்பாத்திக்கு)

வெங்காய சட்னி

வேர்கடலை சட்னி

பூண்டு சட்னி

தேங்காய் சட்னி

தேங்காய்பால் சாதம்

அவரக்காய் பொரியல்

வெண்டைகாய் பொரியல்

 மசியல்

முருங்கைகீரை பொரியல்

பிரண்டை துவையல்

புதினா துவையல்


*இதுக்கெல்லாம் தக்காளி தேவைப்படாது. கொஞ்சநாளைக்கு சமாளிங்க சொந்தங்களே....😜*

 

Thursday, November 25, 2021

சிட்லபாக்கம் ஏரி!


சிட்லபாக்கம் ஏரி!


பரந்து விரிந்திருக்கும் சிட்லபாக்கம் ஏரி

அழகாக இங்கே அதிகமான நீரை

வெளியேற்றும் காட்சி அருமை அருமை!

அமைத்துக் கொடுத்தவரை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

நட்புத் திலகம் சந்திரன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!


நட்புத் திலகம் சந்திரன் அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

அகவைத் திருநாள் 70

25.11.21

தொன்றுதொட்டு நாளும் தொடர்கின்ற நட்பிலே

என்றும் திளைக்கின்றோம் உள்ளம் மகிழத்தான்!

அன்பு மனைவி மகளுடன் சுற்றங்கள்

பண்புடன் சூழ்ந்திருக்க பல்லாண்டு வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


எழுபது, எண்பதைக் கண்டேதான் நூறில்

விழுதுடன் வாழ்வாங்கு வாழ்க மகிழ்ந்து!

செழிப்புடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

உளைச்சலை நீக்கு!

 உளைச்சலை நீக்கு!

தலைகுனிந்து வாழ்கிறேன் எந்தன் தமிழே!

தலைநிமிர்ந்து வாழ வழிசெய்! மகிழ்வேன்!

சுழல்காற்றில் சிக்கி உருள்கின்றேன்! இங்கே!

உளைச்சலை என்தமிழே நீக்கு.


மதுரை பாபாராஜ்

முடக்கு

 முடக்கு!

நடமாட்டம் இன்றி முடக்கியே போட்டுப்

படுத்த படுக்கையாய் மாறும் நிலையைக்

கொடுத்தால் தமிழே! மகிழ்ந்திருப்பேன் இங்கே!

கொடுத்தேதான் என்னை முடக்கு.


மதுரை பாபாராஜ்


Wednesday, November 24, 2021

ராசிக்கல் துன்பம் போக்குமா?

 ராசிக்கல் துன்பம் போக்குமா?


ராசிக்கல் போடுவதால் துன்பங்கள் தீருமென்றால்

மேதினியில் துன்புறும் மக்கள் அனைவரும்

ராசிக்கல் போட்டால் உலகிலே துன்பங்கள்

ஓடி ஒளியுமா? சொல்.


மதுரை பாபாராஜ்

சி்ஆருக்கு வாழ்த்து!


அரசுப் பணியை

அறப்பணியாய்

ஆற்றியுள்ள தங்களைப்

போற்றுகிறேன்.

அன்பன்.....தென்காசி.

சி்ஆருக்கு வாழ்த்து!

அரசுப் பணியை அறப்பணியாய்ப் போற்றி

கவனமாய்ச் செய்து குறள்பணியைத் தொண்டாய்

தவமென மேற்கொள்ளும் ராசேந்ரன் வாழ்க!

புவிமெச்ச வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

பேரமைதி அச்சம் தரும்!

 

பேரமைதி அச்சம் தரும்!

ஆழ்கடலின் பேரமைதி! வானத்தின் பேரமைதி!
பாலையின் பேரமைதி! காடுகளின் பேரமைதி!
சோலையின்  பேரமைதி! சூழ்நிலையின் பேரமைதி!
ஆழ்மனத்தில் அச்சம் தரும்!

மதுரை பாபாராஜ்


நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படத்திற்குக் கவிதை!

பறவையே இன்றைய கவிதை கேள்!

சோலைக்குள் சென்று மலரெடுத்து நாடிவந்தே
காலை வணக்கத்தைக் கூறுகின்றாய்! நான்மகிழ்ந்தேன்!
ஆலமரக் குச்சியும் வேலமரக் குச்சியும்
காலமெலாம் பல்லுக் குறுதியாம்! ஈரடியும்
நாலடியும் சொல்லுக் குறுதியாம் வாழ்க்கையில்!
நாலும் இரண்டையும் போற்று.

மதுரை பாபாராஜ்


Tuesday, November 23, 2021

அய்யா மோகனசுந்தரம் அனுப்பிய படம்


அய்யா மோகனசுந்தரம் அனுப்பிய படம்


நேர்கொண்ட பார்வை நிலத்திலே

அஞ்சாமல் 

வீரநடை போடும் புதுமைப்பெண்

இப்பெண்ணோ?

பாரதி கண்ட கனவுப்பெண் ணாகத்தான்

மாறுவாளோ நாளைதான் இங்கு?


தலைசாய்த்து கைவீசி தண்ணீர்க் குடத்தை

நிலையாகத் தாங்கி கலைந்திருக்கும் கூந்தல்

அழகுடன் காலில்  கொலுசணிந்தே ஆகா!

நடையிலே வீரநடை போடும் சிறுமி 

அகங்குளிர வாழ்கவென்று வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்துக்குத் தமிழாக்கம்


நண்பர் எழில்புத்தன் ஆங்கிலச் சொல்லோவியத்துக்குத் தமிழாக்கம்


சிக்கலைப் பற்றியே பேசவேண்டாம்! சிக்கலை

எப்படித் தீர்ப்பது? என்றே செயல்படு! 

தீர்வற்ற சிக்கல் கிடையாது!

நம்முயற்சி

நேரம் கனிந்துவந்தால் தீர்ந்துவிடும் சிக்கல்கள்!

நேரம் முயற்சியே தீர்வு.


மதுரை பாபாராஜ்

 

செ. வ.இராமாநுசம் அவர்களுக்கு வாழ்த்து!


 உவமைக் கவிஞர சுரதா விருதுபெற்ற 

நற்றமிழ்ச் செம்மல் 

செ. வ.இராமாநுசம் அவர்களுக்கு வாழ்த்து!

23.11.21


உவமைக் கவிஞர் விருதுபெற்ற நண்பர்

உயர்தமிழ்ச் செம்மல் இராமா நுசனார்

பலவிருது பெற்று பலர்போற்ற வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

Monday, November 22, 2021

மாற்றியது யார்?


மாற்றியது யார்?


பூரி உருளைக் கிழங்கென்று வாழ்ந்திருந்த

காலம் மாறித்தான் பூரியும் பன்னீரும்

தோழமை கொண்டதே இன்றுதான்! இத்தகைய

மாறிவரும் மாற்றத்தை ஏற்றேதான் வாழ்கின்றோம்!

மாறிவர மாற்றியது யார்?


மதுரை பாபாராஜ்

VOV கவிஞர்  இமயவரம்பன் வாழ்த்து

பூரிக்கின்றேன்!

பூரியின் மாற்றம் கண்டு

கவிதையால் வாழ்த்த வந்த

கவிராயர் பாபா கண்டு

கற்கண்டாய் இனிக் குதென்று

செப்பித்தான் மகிழ்வேன் என்றும்!

 

நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய படத்திற்குக் கவிதை


நண்பர் வீதி விடங்கன் அனுப்பிய படத்திற்குக் கவிதை


முகத்திலே புன்னகை என்றும் மலர

அகத்திலே நம்பிக்கை கொண்டேதான் வாழ்ந்தால்

அடலேறாய் மாற்றுத் திறனாளி வெல்வார்!

சுடரொளி நம்பிக்கை தான்.


மதுரை பாபாராஜ்

 

குரோவ் அடுக்ககத்தில் பூனை!

 

குரோவ் அடுக்ககத்தில் பூனை!

ACAT IN THE GROVE APARTMENT 
FRONT PARK!

பூங்கா வுக்குள் பூனையொன்று
பாங்காய் நடந்தே வந்ததுபார்!

வருணும் கவினும் சர்வேசும்
தருணும் கௌதம் தாருக்கும்

பூனையைப் பார்த்து மகிழ்ந்தனராம்
சுற்றிச் சுற்றி வந்தனராம்

வருணும் கவினும் பூனைக்கு
பால்வேண்டும் என்றே வந்தாராம்

வசந்தா பாட்டி பாலெடுத்து
வருணிடம் தந்தே மகிழ்ந்தாராம்

வருணும் கவினும் பூனைக்குப்
பாலை வைத்துப் பார்த்தனராம்

பூனை பாலைக் குடித்துவிட்டு
மிடுக்காய் நடந்து சென்றதுபார்!

மதுரை பாபாராஜ்


சூடாமணி நிகண்டு (சுற்றம்)

 அன்பர்களே! வணக்கம்.

       சூடாமணி நிகண்டு

                  (சுற்றம்)


வள்ளுவர் குரல் குடும்பமும்

சுற்றத்தின் கீழ் வருகிறது.

இக்குடும்பம் வள்ளுவரது

குரலைத் தாங்கி வாழ்பவர்களை

இனம் கண்டு அவர்களை

சுற்றமாக்கி வள்ளுவத்தை

உலகளவில் உயரச் செய்வதில்

பெரும்பங்காற்றி வருகிறது.


இதில் இணைந்திருப்பவர்கள்

எல்லாம் பல்துறை வல்லுநர்கள்.

அசாத்தியமான திறன் உள்ள

வர்களைக் கொண்ட புலம்

இது.வாதத்திறன் மிக்கவர்கள்.

இங்கு கருத்திற்கும் கவிதைக்

கும் பஞ்சமில்லை.பன்மொழி

யிலும் திருக்குறளை எடுத்துச்

செல்கிறார்கள்.


இந்த குடும்பம் வாழ்வியலை

வள்ளுவரோடு எடுத்துச்

செல்லும் குடும்பம்.இதில்

அடியேனும் சிறு துரும்பாக

இணைந்திருப்பதில் பெருமை

கொள்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                வாழ்க!  வளர்க!


அன்பன் கிருஷ்ணன்.

தென்காசி

22-11-2021.

____________________________________

தென்காசி கிருஷ்ணனுக்கு வாழ்த்து.


வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தின் ஆற்றலையும்

பல்துறைப் பண்பாளர் வாதத் திறனையும் 

சொல்லிய பாங்கிலே அன்பர் கிருஷ்ணனின்

நல்மனம் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

காலத்தின் கட்டளை!

 காலத்தின் கட்டளை!


நாங்கள் குடியிருந்த வீடிருந்த சாலையில்

தேங்கும் மழைநீர்தான்! தத்தளித்துச் சென்றிருந்தோம்!

வீட்டையே மாற்றிவிட்டோம் தண்ணீரால் சிக்கலில்லை!

ஆனாலும் கீழ்வீட்டில் செய்யும் மராமத்தால்

காதைப்  பிளக்கும் துளைப்பான் ஓசையில்

வீடே அதிர்கிறது! நாமொன்று எண்ணினால்

காலத்தின் கட்டளை வேறு.


மதுரை பாபாராஜ்


Sunday, November 21, 2021

நண்பர் தமிழாசான் முருகேசன் அவர்களுக்கு வாழ்த்து!


நண்பர் தமிழாசான் முருகேசன் அவர்களுக்கு வாழ்த்து!


தமிழின் பிழைதிருத்திக் கற்பிக்கும் ஆசான்

வயலின் களையெடுத்து நெற்பயிரைக் காக்கும்

முயற்சி தளரா உழவரானார் வாழ்க!

உயர்வுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

 

Saturday, November 20, 2021

குட்டிக் குட்டி பொம்மைகள்!


குட்டிக் குட்டி பொம்மைகள்!


குட்டிக் குட்டி பொம்மைகள்!

 குட்டிக் குதிரை பொம்மைகள்!

குட்டி யானை பொம்மையும்

 குட்டி நாயின் பொம்மையும்

கொம்புக் குதிரை பொம்மையும்

 சுற்றி நிற்கும் காட்சியோ

என்ன அழகு பாருங்கள்!

 கண்ணைக் கவரும் பாருங்கள்!

எங்கள் வீட்டில் உள்ளவைதான்

 குட்டிக் குட்டி பொம்மைகள்!


மதுரை பாபாராஜ்

 

மகள் திருமதி உமா பாலு அனுப்பிய படத்திற்குக் கவிதை:


மகள் திருமதி உமா பாலு அனுப்பிய படத்திற்குக் கவிதை:


இலைகளில் சொட்டும் மழைத்துளிகள் அந்தக்

கிளையிலே பச்சைக் கிளியமர்ந்து பூவைக்

கொடுத்து வணக்கத்தைக் கூறுகின்ற பண்பை

ரசித்தேன்! திளைத்தேன் மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

 

தாத்தா I G சேகர் அவர்களின் மடியில் பேத்தியும் பேரனும்!


தாத்தா I G சேகர் அவர்களின் மடியில் பேத்தியும் பேரனும்!


வாழ்க பல்லாண்டு.


அதியனும் ஆதிராவும் செல்லமாக தாத்தா

மடியில் அழகாய் அமர்ந்துகொண்டு பார்க்கும்

மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்கின்றோம் நாங்கள்!

அகங்குளிர வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

 

புறத்தோற்றம் பொய்!

 புறத்தோற்றம் பொய்!


சிரிப்பு புறத்தில்! அழுகை அகத்தில்! பளபளக்கும் பாத்திரத்தில் உள்ளே இருக்கும்

அழுக்குக் குவியல் அதுபோல வாழ்வின்

புறத்தோற்றம் பொய்த்தோற்றம் பார்.


மதுரை பாபாராஜ்


Friday, November 19, 2021

Green Trends Adambakkam City link road


ceo@trendsinvogue.in

சிகையழகு நிபுணர் இம்மானுவேல் அவர்களுக்கு வாழ்த்து!

Green Trends Adambakkam City link road


அன்பாகப் பேசுகின்றார்! பண்பாய்ப் பழகுகின்றார்!

என்விருப்பம் கேட்டு சிகையழகு செய்கின்றார்!

கண்ணுங் கருத்துமாய்த் தன்கடமை ஆற்றுகின்ற

இம்மானு வேலுவை வாழ்த்தி மகிழ்கின்றேன்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

9003260981

Reply from Swetha training

Dear Mr. Babaraj

Thank you so much for your kind words; we really appreciate you taking the time out to share your experience with us.

We are delighted to hear about your experience and glad to know we met your expectations. It is such appreciation and feedback that motivates us to continue giving our best, we will ensure the salon team is updated on your feedback.

We look forward to serving  you again in the future. Thank you once again.

 


 

Thursday, November 18, 2021

அன்பின் வலிமை!


அன்பின் வலிமை!


அன்பு விதைகளை அங்கங்கே நட்டுவைத்தால்

கண்குளிரப் பூங்காவாய் நாளும் உருவாகும்!

நிம்மதிப் பூக்கள் மலர்ந்தே மணம்பரப்பும்!

அன்பின் வலிமை! உணர்.


மதுரை பாபாராஜ்

 

அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்.


அய்யா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படம்.


கதிரவனைக் காட்டுகின்ற வைகறை மேகம்!

புதிய உருவிலே மேகங்கள் கூட்டம்!

விடியும் பொழுதில் நகர்ப்புறத் தோற்றம்!

மகிழ்ச்சியைத் தூவும் அழகு.


மதுரை பாபாராஜ்

 

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


வணக்கம் நண்பரே!


நண்பர் IG சேகர் அனுப்பிய படம்


சென்னைக்குத் தந்த சிவப்புவண்ண எச்சரிக்கை

இன்று விலகியது! வானத்தைப் பார்க்கின்ற

வண்ணப் பறவையே அஞ்சாமல் நண்பரின் 

நட்பு வணக்கத்தை என்னிடம் கூறலாம் !

எப்போதும் நட்பே மகிழ்வு.


மதுரை பாபாராஜ்

19.11.21


 

நற்றமிழ் இராமாநுசரின் நட்புக்காக கவிதை:


வணக்கம்!

    எனது நண்பரின் மகள் சர்மிளா தீபத் திருநாளுக்காக விளக்கேற்றி வைக்கின்றார். 

       திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வைப்போம்! புற இருள் மற்றும் அகஇருள் இரண்டையும் நீக்கி வாழ்க்கையில் வெற்றியைப் பெறுவோம்!

வாழ்த்துகள்!

இவருக்கு ஒரு கவிதையை வழங்குங்கள் ஐயா!


நற்றமிழ் இராமாநுசரின் நட்புக்காக கவிதை:


ஒளிவிளக்கு ஏற்று!


கார்த்திகை நாளிலே காரிகை ஏற்றுகின்றாள்

காரிருளை நீக்கும் விளக்குகளை வீட்டில்தான்!

ஆர்ப்பரிக்கும் மாந்தர் புறஇருளை மற்றுமிங்கே

வேர்விடப் பார்க்கும் அகஇருளை நீக்கியே

வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்று.


மதுரை பாபாராஜ்


 

VOV Dr.அஷ்ரப் படப்புதிர் நாயகர் அவர்களுக்கு வாழ்த்து!


VOV Dr.அஷ்ரப் படப்புதிர் நாயகர் அவர்களுக்கு வாழ்த்து!


அனைத்துக் குறள்கள் கருத்துக்கும் ஏற்ற

மனங்கவரும் சித்திரத்தை அஷ்ரப் புதிராய்

அனுப்பியே பங்குபெறச் செய்தார்! மகிழ்ந்தோம்!

இணையற்ற தொண்டினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

மழையில் பயண அனுபவம் புதுமை!


மழையில் பயண அனுபவம் புதுமை!


தஞ்சை- திருச்சி - சென்னை 

நாள்:18.11.21


மணி 2.25 பிற்பகல்

ஓட்டுநர் நண்பர் சுப்ரமணியன்

பயணிகள்:நானும் மனைவி வசந்தாவும்


நீலவானந் தன்னைக் கருமேகம் மூடிவிட்ட

கோலத்தில் நீளப் புறவழிச் சாலையில்

காட்சி தெரிகிறது! நாங்கள் மகிழுந்தில்

சாலைப் பயணம் தொடர்கின்றோம்! அங்கங்கே

வேகத் தடையாய் மழைபெய்ய நின்றுநின்றே

சாகசம் செய்தே வருகின்றோம் சென்னைக்கு!

ஆகா! அனுபவம் நன்று.


மதுரை பாபாராஜ்

 

Wednesday, November 17, 2021

பேரன் நிக்கிலுக்காக எழுதியது


பேரன் நிக்கிலுக்காக  எழுதியது


நாள் 18.11.21


சென்னை மழையே! இன்றுபோய் நாளை வா!


சென்னை மழையே! மெதுவாகப் பெய்துகொள்!

என்பேரன் நிக்கிலோ தேர்வெழுத வேண்டுமாம்!

இன்றுபோய் நாளைவா! தேர்வு முடிந்துவிடும்!

அன்பாக வேண்டுகிறேன் போ.


மதுரை பாபாராஜ்

 

செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்களின் நினைவு நாள்!


🙏


செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்களின் நினைவு நாள்!

நாள் 18.11.21

செக்கிழுத்த செம்மல்! தியாகத் தழும்பேற்றார்!

இத்திரு நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டார்!

நற்றமிழில் தேன்குறளை ஆய்ந்தேதான் நூலளித்தார்!

எப்படியோ வாழ்ந்தவர் எப்படியோ சென்றுவிட்டார்!

கற்றவரை என்றும் வணங்கு.


மதுரை பாபாராஜ்

 

அய்யா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பியதன் தமிழாக்கம்.



அய்யா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பியதன் தமிழாக்கம்.


பிறந்தவீட்டில் தந்தைக்( கு)  இளவரசி அன்று!

அகத்தில் கணவனை ஆட்டிப் படைக்கும் 

அரசி,! புகுந்தவீட்டில் கோலமேற்றாள்

இன்று!

வரமாய் அமைந்தவள் பெண்.


மதுரை பாபாராஜ்


 

மதிப்பிற்குரிய துரைசாமி திருவாசகம் அய்யா அனுப்பியது!


மதிப்பிற்குரிய துரைசாமி திருவாசகம் அய்யா அனுப்பியது!


கொரோனா அமளியில் சிக்கித் தவிக்கும்

உலகில் அமதியை மீட்டெடுக்க வேண்டும்!

களமமைத்துப் போர்செய்ய நாடு

முயலும் 

நிலையும் மறையவேண்டும் இங்கு!


மதுரை பாபாராஜ்

 

ஓவியருக்கு வாழ்த்து!


ஓவியருக்கு வாழ்த்து!


ஒருகை அசைவிலே தூரிகை நான்கை

இயக்கியே ஓவியங்கள் நான்கை வரையும்

வியத்தகு ஆற்றலைக் கண்டே வியந்தோம்!

வளர்கின்ற ஆற்றலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்