Thursday, October 30, 2008

REVERBERATION—BABARAJ ENGLISH FREE VERSES

APARTHEID!

Apartheid!
You are an abominable Monster!
Crawling with long and vicious tongue!
Avaricious to have an ugly dip
In the ocean of human blood!
Adorning the length and breadth
Of your body with human bones and flesh
Piercing your wretched claws
Into the tender hearts of your victims!
They are not inferior!
They are not superior!
Inferiority and superiority
Not in colour or creed
But in the spotless thoughts and deeds!

URN OF ASH!

Urn of ash! Urn of ash!
Life is but an urn of ash!
Everyone is after mirth
on this damned and dusty earth!
The burning inner desires
Like raging waves of the ocean
Tempt our mind to trod on the evil path!
By hook or crook it leaps to reach the door
Not knowing it is an intangible horizon!
Wisdom, conscience and rectitude
Wither! Wither! And wither!
Violence, avarice and arrogance
Grow with Vigour! And vigour!
For desires transform the human beings onto beasts!
After all life is but an urn of ash!
------------------------------------------------------------------------------------------------------------
STAR WARS!

Oh! my little stars!
I ma happy that you don’t have wars!
How many of you? I can’t count!
How far you are? My eyes can’t measure!
Your twinkling nature I enjoy with rapture!
You don’t have tussles even with your neighbour!
But, you see on this earth!
Quarrels and quarrels as if our birth right!
The so called super powers with atomic innovations
Pave way for annihilation! And human extinction!
You are the symbol of serenity and co existence!
But they name the war as star wars!
What a shame!

INDIA IS ONE

The ice cold breeze of Himalayans
The tender breeze of Pothigai hills
The swinging waves of Indian ocean
Bay of Bengal and the Arabian sea
Chime the rhyme and reverberate
India is one and second to none!
Multilingual tongues and multifarious religions
Exist but co exist ! we are one on harmony map!
Despotism and violence we hate!
Democracy and non violence we elate!
Starwars we oppose! Global peace we propose!
Yes! India is one on this earth!
Second to none we sing with mirth!

STREET SINGER

Gandhiism! Socialism! Communism! Despotism!
So many isms are there like so many castes!
We are least bothered!
We want Food, Clothes and Shelter
Our basic amenities and birth rights!
They are at stake at the hands of exploiters!
Oh! Time !the deciding factor!
I am searching for you!
So sings the street singer!
-------------------------------------------------------------------------------------------------------







CRADLE BEYOND THE HORIZON

I want a cradle beyond the Horizon!
To have sound sleep without emotions!
Joy and sorrow: Pain and pleasure
The Nature’s tentacles! Nobody can escape!
When is the grip? When is the slip?
None can say but order of the day!
This mixed feast adorns every table!
But pain and sorrow only clip my table!
The sleepless nights are destined to me alone!
So, I want a cradle beyond the Horizon!
Oh! Sound sleep!
Could you descend on me at least there?

BENDS AND CURVES

Flock of birds fly and form
Bends and curves in the sky!
Fascinate our eye and thoughts!
Flowing rivers glide and form
Bends and curves on the earth!
A beautiful sight shaking hands
With the ocean at last!
Bends and curves towards the mountain top
Lengthen like the combed hair of a damsel!
Win our hearts and we heave many sighs!

DEDUCE

Some where we born! Somehow we grow!
Like lotus flowers yearning for Sun’s grace!
We float and float in the life’s stream
For a meaningful life! Some get and many do not!
But all live on hopes!
For better fertile crops in the near future!
Have we got fertility? Or met with futility?
We should deduce before we die!
We won’t do that!
For we still yearn and yearn!




NEED OF THE HOUR!

Rise like a Sun!
Piercing the obstacles of fanaticism!
Awake like roaring waves
Shattering the rocks of fundamentalism!
Launch your actions
Like powerful tempest
Uprooting the communalism!
Erase the boundaries of
Religions and implant unity and amity!
Pluck the tentacles of
Disparity and confrontation!
Smash the barriers of
Selfish designs under shades of religions!
Dismantle the chains of
Violence and orgy and anarchy!
Honour the humanism
Uphold the concept of nonviolence!
Choose the right path
Reach the goal through peaceful means!
Unite the entire human race
Join hand in hand feel the holy trace!
One voice! One thought! One goal!
Peace! Amity and Harmony
Bound to blossom
Carrying the fragrance
To the whole universe!

Tuesday, October 28, 2008

இந்திய -- இலங்கை கூட்டறிக்கை! ! ஓ!

=====================================================
போரை நிறுத்திவிட்டு கூட்டறிக்கை விட்டிருந்தால்
ஈரமனம் என்றேதான் சொல்லலாம் -- போரும்
தொடருமாம்! ஈழத் தமிழர்கள் வாழ
தொடருமாம் நற்பணிகள்! ஓ! .

வீடிழந்து வாழ்க்கையின் வேரோடும் ஆதாரக்
கோடிழந்து தத்தளித்து நாள்தோறும் --ஓடி
மறைந்தேதான் வாழ்கின்றார் ஏக்கத் தோடு !
மறையுமா வேதனை? சொல்.

பங்கெடுக்க மாட்டாரம் உள்நாட்டுச் சிக்கலில் !
வங்கதேசச் சிக்கலோ இந்தியாவின் அங்கமோ?
தங்களுக்கு நீதிஒன்று! மற்றவர்க்கு நீதிஒன்று!
இங்குமக்கள் கேட்கின்றார்! சொல்.

இந்தத் தருணத்தை ஏற்றே நிரந்தரமாய்
அந்தோ! இலங்கையில் தீர்வுகாண-- இந்தியா
வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்! இதயத்தில்
காய்தல் உவத்தலின்றி தான்.

Sunday, October 26, 2008

எங்கே செல்ல?

வீட்டுக்குள் சென்றால் மழைவெள்ளம் சூழ்ந்தது!
நாட்டமுடன் பள்ளிக்குச் சென்றாலோ -- நாட்டில்
மழையென்றே சொல்லி விடுமுறை என்றார்!
கலங்குகின்றேன்! என்குசெல்வேன்?சொல்.

This is Deepawali

Devilish thoughts you shed

Endeavour to achieve the good

Enlighten the mind with optimism

Power and Avarice are wings of destruction

Always be generous and kind and disciplined

Well being of others all should ensure

Arrogance and perversion will have boomerang effect

Loyalty and sincerity are rungs of progress

India inspires every Indian and Indians salute India!

--- Madurai Babaraj

Saturday, October 25, 2008

மழை பேசுகின்றேன்!

மழையே வராதா!முணுமுணுப்பைக் கேட்டேன்!
அழைத்த விருந்தாளி யாக -- மழைபெய்தேன்!
தாழ்ந்த பகுதிகளில் வெள்ளமாக ஓடினேன்!
காழ்ப்போ எனக்கில்லை! கூறு.

அணைகள் நிரம்பின! ஆறுகளில் வெள்ளம்!
மனைகளில் ஓடி வெறுப்புக்குள் ளானேன்!
மனங்குமுற மக்களோ சாடித் தவிக்க
தினமும் திகைக்கின்றேன்! செப்பு.

வயல்களில் எல்லாம் பயிர்கள் அழிய
துயரத்தின் எல்லையில் மக்கள் -- அயர்ந்தார்!
தவித்துத் துடிக்கின்றார்!நானென்ன செய்வேன்?
அவிழ்த்திடும் மேகமே ! சொல்.

வங்கக் கடலில் புயல்சின்னம் வந்துவிட்டால்
பொங்கிவரும் நானோ பொழிகின்றேன் -- தங்குமடம்
இல்லாமல் எங்கெங்கோ ஓடி ஒளிகின்றேன்!
தொல்லைகள் என்கின்றார் ! ஏன்?

கால்வாய்ப் பகுதிகளை வீடுகளை மாற்றிவிட்டால்
காலூன்ற நானெங்கே செல்வது?-- நாளும்
தெருக்களைத் தோண்டித்தான் பள்ளமாக்கிப் போட்டால்
பெருக்கெடுத்துத் தேங்குகின்றேன் நான்.

மழைநீர் வடிவதற்கு ஏற்றாற்போல் சாலை
நிலையிருக்க வேண்டுமிங்கே!ஆனால்--மழைவந்தால்
பார்க்கலாம் என்றேதான் மெத்தனமாய் நின்றிருந்தால்
யாரைப் பழிப்பதுநான்? சொல்.

செய்யும் பணியைத் திருத்தமாய்ச் செய்யாமல்
தொய்வாய் அரைகுறையாய் செய்துவிட்டு-- இவ்வுலகை
வாழவைக்க நான்வரும் போதென்னைச் சாடுவது
கோழைத் தனமென்பேன்! நான்.

-- மதுரை பாபாராஜ்

Friday, October 24, 2008

நாட்டில் பாலம் -- ஏட்டில் பாலம்

பாலம் இதழுக்கு வாழ்த்து)

போக்கு வரத்து நெரிசலைத் தீர்ப்பதற்கு
காக்கும் கரங்களாக பாலங்கள் -- ஆக்கபூர்வ
சிந்தனையின் வேர்களாக அங்கங்கே ஊன்றிநிற்கும்
தன்மையினைக் காண்கின்றோம் சாற்று.

ஆறுகளை நாம்கடக்க பாலங்கள் உள்ளன!
வேறுவேறாய் ஊர்களோ எந்தத் தொடர்புமின்றி
கூறுபோட்டு உள்ளதை வாகாய் இணைப்பதற்கு
ஈடுகட்டும் பாலங்கள் தாம்.

நாடுகள் ஒவ்வொன்றும் நல்லுறவை மேம்படுத்த
கூடுகட்டும் பண்பின் உவமைக்கோ -- பாடுபொருள்
ஆகநிற்கும் பாலங்கள்! இவ்வுலக வாழ்வியலின்
பாகமாக ஆனதென்றே பாடு.

கட்டுரைகள், சிந்தனையைத் தூண்டும் கவிதைகள்
இப்படி ஏந்திவந்தே இங்கேயோ -- நற்றமிழின்
சுற்றத்தை நாளும் இணைக்கும் பொதுநலத்தின்
அற்புதமே "பாலம் " இதழ்.

Tuesday, October 21, 2008

ஓடி விளையாடு தாத்தா

ஓடி விளையாடு தாத்தா -- நீ
ஓய்ந்திருக்க லாகாது தாத்தா

காலையிலே பேரனைத்தான் பள்ளிக்கு
கவனமாக அனுப்பவேண்டும் தாத்தா
மாலையிலே பள்ளிவிடும் நேரத்திலே
மலைக்காமல் அழைக்கவேண்டும் தாத்தா

வம்புசேட்டை சண்டித்தனம் பண்ணுவாங்க
மனதார பொறுத்துக்கணும் தாத்தா
அடிகூட கொடுப்பாங்க குழந்தைகள்
அத்தனையும் பொறுத்துக்கணும தாத்தா

ஓவியத்தைக் கத்துக்க கூடப்போகணும்
டியுசனுக்கு போவாங்க அங்கநிக்கணும்
தாவித்தாவி கராத்தேக்கு போனாலும்
தத்தித்தத்தி தாத்தாதான் கூடப்போகணும்

கண்ணயர்ந்து படுத்தாக்க போதுமய்யா
கதைகேட்டு வந்துவந்து சிணுங்குவாங்க
எத்தனையோ தாத்தாக்கள் இப்படித்தான்!
இன்பமான குழந்தைகளும் இப்படித்தான்!

ஓடி விளையாடு பாட்டி

ஓடி விளையாடு பாட்டி-- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாட்டி!

பேரனையும் பேத்தியையும் பாத்துக்கணும்
பேணிப்பேணி முறையாக வளர்க்கவேணும்
தலைசீவி பவுடர்பூசி பொட்டுவச்சி
சளைக்காம சீருடைய போட்டுவிட்டு

சிற்றுண்டி தருவதற்கு பாட்டிவருவா
சின்னப்பயல் ஓடிஓடி லூட்டிதருவான்!
செல்லமான கோபத்தோடு அதட்டினாலும்
செல்லக்குட்டி குழந்தைக்கு ஊட்டிவிடுவா!

மாலையிலே பள்ளிவிட்டு வந்தவுடனே
மனங்குளிர முத்தமிட பாட்டிவருவா!
பள்ளிப் பாடம் அத்தனையும் சொல்லித்தருவா
பாடங்களை அத்துப்படி ஆக்கிவிடுவா!

நிலாவைத்தான் காட்டிகாட்டி சோறுதருவா
நேர்த்தியான பொறுமையுடன் பாட்டியிருப்பா
நித்திரைக்குத் தாலாட்டுப் பாட்டுப்படிப்பா !
நித்தமுந்தான் இதைச்செய்தே வாழ்ந்துவருவா!

பாட்டிஎன்றால் குழந்தைகள் லூட்டியடிக்கும் !
பேரனுக்கும் பேத்திக்கும் பாட்டிபிடிக்கும்!

Sunday, October 19, 2008

மழலையாக மாறேனோ ?

மழலையாக இருந்தேதான்
மங்கையாக வளர்ந்துவந்தேன்!
வளமாக வாழ்வதற்கே
வரிசையாகக் கனவுகண்டேன்!

கனவுகண்ட பருவத்தில்
கைப்பிடித்த நாயகனோ
மணக்கோலம் தந்துவிட்டான்!
மகிழ்ச்சியிலே திளைத்திருந்தேன்!

ஓராண்டு ஈராண்டு
உருப்படியாய் ஓடியது!
சீராகத் தேரோடும்
சிறப்புகளை நினைத்திருந்தேன்!

கணவனுக்கு அடிமையாகக்
காரிகைநான் இருந்தநேரம்
கணவனிங்கே குடிவெறிக்கு
கரைமீறி அடிமையானேன்!

குடிகாரக் கணவனிடம்
கொடியின்றிப் போராட்டம்!
அடிவாங்கி உதைவாங்கி
அலைகின்ற அலங்கோலம் !

வேதனையும் சோதனையும்
வெறியாட்டம் போடுகின்ற
பாதகமே வாழ்க்கையானால்
பாரினிலே இன்பமேது?

இப்படித்தான் சீரழிதல்
இவ்வுலக வழ்க்கைஎன்றால்
அப்படியே மழலையாக
அம்மாநான் மாறேனோ?

மாறிவிட்டால் உன்மடியில்
மாசற்ற மழலையாவேன்!
ஊறிவரும் தாலாட்டில்
உலகத்தை நான்மறப்பேன்!
===========================================
கவிதை உறவு இதழில் வெளிவந்த கவிதை
============================================

மகளிர் மசோதா!

நாடாளு மன்றத்தில் நாளும் அரசியலார்
பாடாய்ப் படுத்துகின்றார் பண்பற்றோர் -- நாடே!
மகளிர் மசோதாவை மாண்புடனே ஏற்க
முகஞ்சுளித்து நிற்கின்றார்! ஏன்?

மேடை முழக்கத்தின் வேடம் கலைகிறது!
நாடே நகைக்கிறது! தன்னலத்தின் -- கூடுகளாய்
மாறி திசைமாறிச் செல்லும் அரசியலைச்
சாடிச் சலிக்கின்றார்! சாற்று.

கொள்கை அளவிலே கூற்றை ஏற்போம் !
கொள்கை நடைமுறையில் கூடுகட்ட -- எள்ளளவும்
ஏற்கமாட்டோம் என்றால் இடிமுழக்க பாரதியே !
பாட்டாலே பந்தாட வா.

இந்தியன் என்றே சொல்லு!

மனிதநேயக் கோயில் கட்டு!
மதவெறியை மூட்டை கட்டு!

அனைவரையும் ஒன்றாய்க் கூட்டு!
அமைதியென்னும் கொடியை நாட்டு!

இமயம்போல் நிமிர்ந்து நில்லு!
இந்தியன் நான் என்றே சொல்லு!

உமியாகப் பகையை ஊது!
உயர்ந்திடும் நமது நாடு!

வடிகட்டியாய் இரு!

எதைச்சொல்ல வேண்டும்! எதைச்சொல்ல வேண்டாம்!
இதையறிந்து கொண்டால்தான் இன்பம்!-- இதிலே
பெரியோர் வடிகட்டி போலிங்கே வாழ்ந்தால்
அருமைதான் என்றும்!அறி.

மனமே காரணம் !

எவ்விதப் பிடிப்பும் இன்றி
இவ்வுலக வாழ்க்கை தன்னைக்
கவ்வியே வாழ்ந்து காட்டும்
கலையினை எங்கே கற்றார்?

வரும்படி ஏது மில்லை!
வழிவகை ஒன்று மில்லை!
தருபவர் யாரு மில்லை!
தலைநிமிர்ந் தேதான் வாழ்வார்!

உறங்குதல் கொஞ்ச நேரம்!
உண்பது கிடைத்த தைத்தான்!
வறட்சியே வாழ்க்கை! ஆனால்
வறட்சியோ மனத்தில் இல்லை!

இருப்பதில் திருப்தி காணும்
இயல்பினைப் பெற்று விட்டால்
உருக்கிடும் துயரம் கூட
உருகிடும் பனியாய் மாறும்!

Saturday, October 18, 2008

சிறுவனின் ஏக்கம் !

குருவிகளே! குருவிகளே!
கூடுகட்டி வாழ்கின்ற
மரக்கிளையை நனைத்தேதான்
மழைக்கரங்கள் களிக்கிறதே!

பரபரப்பாய் எட்டித்தான்
பார்த்தேதான் கலங்குகின்றீர் !
அரவணைக்கும் தாய்க்குருவி
அணைக்கிறதே சிறகுகளால் !

ஓரமாகக் குடிசையிலே
ஒதுங்கித்தான் நின்றேதான்
பார்க்கின்றேன் தவிப்புடனே!
பையன்நான் சிறுவன்தான்!

உங்களைப்போல் நானுமிங்கே
ஒடுங்கித்தான் நிற்கின்றேன்!
உங்களுக்கோ தாயுண்டு!
உலகத்தில் எனக்கில்லை!
-----------------------------------
நன்றி:பாரதமணி அக்டோபர் 2008 இதழ்
------------------------------------

Wednesday, October 15, 2008

வேண்டும் நிரந்தரத் தீர்வு

இந்தியத் தாயே! இலங்கைத் தமிழர்கள்
செந்நீரும் கண்ணீரும் சிந்துகின்றார் -- உந்தன்
அரவணைப்பை நாடுகின்றார்! ஆதரவைத் தேடி
வருகின்றார் நித்தமும்! பார்.

அப்பாவி மக்கள் அருமைத் தமிழினத்தை
எப்பொழுதும் கொன்று குவிக்கின்றார்!--எப்பொழுது
இந்தக் கொடுமை முடியுமோ அம்மம்மா!
நொந்து துடிக்கின்றோம் நாம்.

இந்திய மீனவர்கள் தாக்கப் படுகின்றார் !
இன்றுவரை அக்கொடுமை தீரவில்லை!--கண்முன்னே
நித்தம் கொடுமைகள் கொக்கரித்தும் தீர்ப்பதற்கு
தத்தித் தயங்குவதும் ஏன்?

இலங்கைத் தமிழர்கள் சிக்கலுக்குத் தேவை
நிரந்தரத் தீர்வுதான்! நாடே!--உலகத்
தமிழினமே! ஒன்றுபடு! அந்தோ! இலங்கைத்
தமிழர்கள் வாடுகின்றார்!பார்.

Wednesday, October 08, 2008

பொறுமையின் மறுபெயர் மக்கள்!

கேபிள் பதிக்க
சாலைகளைத் தோண்டுவார்!
சரியாக மூட மாட்டார்!
மேடு பள்ளங்கள் வரவேற்கும்!
வண்டிகள் உருண்டு விழும்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

அங்கங்கே மின்சார வயர்கள்
தொங்கும்!கீழே தண்ணீரில் மிதக்கும்!
மின்சாரம் பாய்ந்து
விபத்துகள் நேரும்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

அரசுப் பேருந்தில்
மூச்சு முட்ட பயணம் செய்வார்!
நிறுத்தத்தில் உதிர்ந்து விழுவார்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

ஷேர் ஆட்டோவில்
உட்கார இடமின்றி
விளிம்பில் பயணந்தான்!
விழுந்தால் மரணந்தான்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

மின்தொடர் வண்டியில்
தொங்கித் தொங்கிப்
பயணம் செய்வார்!
நிலையம் வந்ததும்
கலைந்து சரிவார்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

பண்டிகை நாளில்
பொருட்களின் விலைகள்
விண்ணை முட்டும்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

கலப்படம் ஊழல்
தலைவிரித் தாடும் !
கொண்டாட்டம் போடும்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

வாக்கு பெறும்வரை
வாக்காளர் எஜமானர்கள்!
வெற்றி பெற்ற பிறகு
வாக்காளர் எடுபிடிகள்!
மக்கள் பொறுத்துக் கொள்வார்!

அன்றாடம் இப்படி எத்தனையோ உண்டு!
அரசும் கண்டுகொள்ளாது!
அதிகாரிகளும் கண்டுகொள்ளமாட்டார்!
மக்களும் பொறுத்துக் கொள்வார்!

இதுதான் நடைமுறை உண்மை!
கின்னர் சாதனையை விஞ்சும் பொறுமை!