Friday, June 30, 2023

மனித இயல்பு


 

சி ஆர்



குறள்நெறிச் செம்மலை வாழ்த்து!

CR
அனைத்துப் பதிவுகளைப் பார்த்து படித்து
மனதில் பதிகின்ற வண்ணம் கருத்தை
தினமும் தருகின்றார்! உள்ளத்தால் வாழ்த்து!
குறள்நெறிச் செம்மலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


எப்படி உங்களால் பேச்சுத் தமிழையே கவியாக்க முடிகிறது

என்னால் முடியவில்லையே என்ற பொறாமையும் தங்கள் மீதுண்டு.

நம்மாலும் முடியும் என்ற தாகமும் என்னுள் உள்ளது.

வழிகாட்டுங்கள்.அவ்வழியில் பயணிக்க நானும் முயல்கிறேன்.

தங்கள் முன் நான் சிற்றறிவு
உடையவனே.

தென்.கி
 

உருளும் பந்து


உருளும் பந்து!


கால்களுக்குள் பந்தாய் உருட்டி விளையாடிப்

பார்க்கின்றார்! நாளும் உதைக்க உருள்கின்றேன்!

யார்யாரோ என்னையோ இப்பக்கம் அப்பக்கம்

பார்க்காமல் தள்ளி உதைக்கின்றார்!

தாங்குகிறேன்!

தாங்குமட்டும் தாங்குவேன் கூறு!


மதுரை பாபாராஜ்

 

Thursday, June 29, 2023

நிழல் போர்


நிழல் போர்!

வயதான காலத்தில் நிம்மதி இல்லை!
பயத்தோடு வாழ்க்கை தினந்தோறும் என்றால்
நிழலோடு போர்செய்யக்  கூடுமா என்னால்?
நிழல்போர் ஏனோ எனக்கு?

மதுரை பாபாராஜ்
 

பதற்றம்



 பதற்றம்!


இறுக்கமான சூழ்நிலையில் எப்போதும் வாழ்க்கை

இருக்கவேண்டும் என்றிருந்தால் உள்ளம் துவண்டே

உருக்குலையும்! இங்கே அடுத்தென்ன என்று

பதற்றமே வாழ்வாகும் பார்.


மதுரை பாபாராஜ்

சோர்விலாள் பெண்


சோர்விலாள் பெண்!


கவலையின்றி வாழ்வதற்குக் கைகொடுக்கும் பெண்கள்!

சமையலையும் மேல்வேலை பார்ப்பதையும்  பெண்கள்

சுமையென்றே எண்ணாமல் நேரத்தில் வந்தே

அனைத்தையும் செய்து முடிக்கின்றார்!

வீட்டில்

மனம்மகிழ பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல

வகைசெய்யும் கோலம் அழகு.


பெற்றோர்க்கோ இங்கே உதவிகள் செய்கின்றார்!

உற்ற துணையாக மாறி கவலைகள்

சற்றுமின்றி பெற்றோர் பணியகம்

செல்வதற்கு

சத்தமின்றி ஊக்கமானார் சொல்.


பெற்றோர் வருமுன்னே பள்ளிசென்ற பிள்ளைகள்

எப்படியோ வந்துவிடும் காட்சிகள்! பிள்ளைகளை

சற்றும் கவலையின்றி பார்க்கும் பணிகளில்

பற்றுடன் வந்தே உதவுகின்றார் பெண்கள்தான்!

பிள்ளைகள் ஆயா விடந்தான் வளர்கின்றார்!

பெற்றோர் வருமட்டும் ஆயா பொறுப்புதான்!

இப்படி மாறியதே வாழ்வு?


தன்வீட்டை மற்றவர் வீட்டையும் பார்க்கின்ற

பெண்களுக்கு ஓய்வேது? என்னதான் காசுபணம்

வந்தாலும் நேரத்தில் சென்றே உதவுதல்

பண்பிற்கோ ஈடில்லை சொல்.


மதுரை பாபாராஜ்






 

தந்தையர் தினம்



 

எப்படி ஓட



 



Wednesday, June 28, 2023

குழந்தைகள் சொத்து


அன்பும் ஆதரவும் குழந்தைகள் சொத்து!


வாழ்ந்த தலைமுறை வாழும் தலைமுறைக்கு

வாய்ப்பை வழங்கி மகிழவேண்டும் நாள்தோறும்!

வாழ்விலே தாய்தந்தை அன்புடன் ஆதரவைச்

சேய்களுக்குத் தந்தே வளர்த்தல் கடமையாம்!

தாய்தந்தை இங்குணர்தல் நன்று


மதுரை பாபாராஜ்

 

சேய்களுக்குத் தேவை அன்பு

 சேய்களுக்குத் தேவை அன்பு!


தாய்தந்தைக் குள்ளே கருத்துகள் மாறுபடும்

சூழ்நிலைகள் தோன்றலாம்! அந்த வேறுபாட்டைச்

சேய்களிடம் கோபமாய்க் காட்டுகின்ற 

வக்கிரத்தின்

பாழ்மனப் பான்மையோ கேடு.


மதுரை பாபாராஜ்

வாழ்க்கை


 

இனிய பக்ரீத்திருநாள் வாழ்த.துகள்



 

மகள் திருமதி R.சுபாதேவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து


மகள் திருமதி R. சுபாதேவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!


அகவைத்திருநாள்: 29.06.23


கணவர்: C.ரவி

மகன்: செல்வன் R.S. சுசாந்த் ஸ்ரீராம்.


அறநெறி போற்றியே வாழ்க! வளர்க!

சிறப்புடன் இல்லறத்தில் அன்பாக வாழ்க!

கணவர் மகனுடன் வாழ்வாங்கு. வாழ்க!

மனைமாட்சி  போற்றி அகங்குளிர வாழ்க!

வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

 

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


ஒவ்வொரு தேவைக்கும் இங்கே சிறிதளவு
உந்துதல் எண்ணம் புறத்தில்  அவசியம்
என்று தெரிகிறது! அப்படி யானாலோ
உங்களதாய் ஏனிருக்க கூடாது? அச்செயல்தான்!
தன்முனைப்பே நல்லது செப்பு.

மதுரை பாபாராஜ்
 

Tuesday, June 27, 2023

நண்பர் அஷ்ரப் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து





நண்பர் அஷ்ரப் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து!

அகவைத் திருநாள்: 28.06.23

வள்ளுவத்தை ஒப்பீடு செய்கின்ற பன்முக
நல்லாற்றல் கொண்டிருக்கும் அஷ்ரப்பிங்கே
எல்லா வளங்களும் பெற்றேதான் வள்ளுவம்போல்
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
 

நண்பர் சுந்தரம்


 நண்பர் சுந்தரம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வெண்மலரும் செம்மலரும் பூத்துச் சிரித்திருக்க

அன்புடனே காலை வணக்கத்தைக் கூறுகின்றார்

நண்பரின் நட்பிற்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

எல்லையை உணர்


எல்லையை உணர்!

ஒட்டுவதும் தப்புதான்! வெட்டுவதும் தப்புதான்!

எப்படி இங்கே பழகினாலும் எல்லைக்குள்

வெட்டாமல் ஒட்டி உறவாடி வாழவேண்டும்!

எல்லை உணர்ந்து பழகு.


மதுரை பாபாராஜ்

 

Monday, June 26, 2023

ஐயா வைகுண்டநாதர்


அப்பா தெய்வத்திரு இராம களஞ்சியம் ஐயா அவர்கள் என்னை ஐயா வைகுணரட்நாதரைப்பற்றி கவிதை எழுதச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார். அது நிவேறாமல் என் மனதை உறுத்தியது. இன்றுதான் எழுதினேன். சம்பந்தி இராமகளஞ்சியம் ஐயாவை வணங்கி வழிபடுகின்றேன்.

ஐயா வைகுண்ட நாதரைப் போற்று!


திருச்செந்தூர் மாக்கடலில் தானாகத் தோன்றி

உருகாட்டி வந்தவர் வைகுண்ட நாதர்

பெருமையை எண்ணி வழிபட்டு வாழும்

பெரும்புகழ் கொண்டதிந்த நாடு.


சாதிமத வேறுபாடே இல்லாமல் மக்களை

மேதினியில் அங்கே கிணற்றில் குளிக்கவைத்தார்!

ஈடில்லா வண்ணம் சமபந்தி ஏற்பாட்டில்

பேதமின்றி உண்ண அறிவுறுத்தி போதித்தார்!

போதனைகள் அறநெறிதான் வாழ்த்து.


தாழக் கிடப்பாரைத் தற்காத்தல் தர்மமென்று

கோட்பாட்டை முன்வைத்தே எல்லாச் செயல்களையும்

போற்றினார் ஐயாதான் இங்கு.


மானுடம் காக்கவந்த இந்த மகானுக்கோ

ஈனமனம் கொண்டவர்கள் இன்னலை

தந்தார்கள்!

தேன்மன ஐயாவின் நற்பண்பால் சந்தித்தே

பாமணக்க வாழ்ந்தாரே இங்கு.


தர்மயுக மக்களாக மாற அறிவுரைகள்

தந்தேதான் வாழவைத்தார் நன்கு.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம்திங்கட்கிழமையில் வைகுண்டம்சென்றார்.


மதுரை பாபாராஜ்

 

மருமகன் ரவி




மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!

உன்பயணப் புள்ளியும் என்பயணப் புள்ளியும்

ஒன்றல்ல! ஆனாலும் நம்வழியில் என்றேனும்

சந்தித்தால் நாமோ ஒருவர்க் கொருவரிங்கே

பண்புடன் ஊக்கப் படுத்தவேண்டும் 

வாழ்விலே!

என்றும் விலகுதல் கேடு.

மதுரை பாபாராஜ்




 

Sunday, June 25, 2023

மைத்து அப்பா முரளி



நண்பர் முரளி அனுப்பிய படத்திற்கு கவிதை!


கிழக்கில் கதிரவன் வந்தான், வணக்கம்

உளங்கனிந்து கூறுகிறேன் என்றேதான் பார்க்கும்

மலரனுப்பி காலை வணக்கத்தைக் கூறும்

முரளியை வாழ்த்துகிறேன் இங்கு.


மதுரை பாபாராஜ்

 

திருக்குறள் உடைமைகள்



Saturday, June 24, 2023

சாகச மங்கை ராபி நத்தேனியல்


 சாகச மங்கை சாதனை மங்கை ராபி நத்தேனியல் மற்றும் அண்ணனுக்கு வாழ்த்து!


கள்ளங் கபடமற்ற பேச்சு சிரிப்புடன்

உள்ளத் துணிவும் பயமறியா ஆர்வமும்

துள்ளலாக சாகச எண்ணம் கனிந்துவர

தன்வாழ்க்கை தன்கையில் என்றே சகோதரர்

அன்பிலுள்ள ராபியை வாழ்த்து.


மெய்சிலிர்க்க வைக்கும் மலையின் வளைவுகளில்

மெய்சிலிர்க்கும் வண்ணம் பயணத்தைத் திட்டமிட்டே

தைரியமாய்ச் சென்றுவரும் ராபியையும் அண்ணனையும்

உள்ளபடி வாழ்த்துகிறேன் நான்.


தம்பி உடையார் படைக்கஞ்சார் என்பதை

அண்ணன் உடையார்  மலைக்கஞ்சார்

என்றேநாம்

சற்றேதான் மாற்றியே வாழ்த்தலாம் இங்குதான்!

அற்புதமே அன்புதான் சொல்.


உயரத்தைக் கண்டால் இமைகள் இமைக்க

மலைக்கும்! அதிலெல்லாம் நின்று வாழ்வை

இயற்கையின் காட்சிகளைக் கண்டே ரசிக்கின்ற

உளங்களை வாழ்த்துகிறேன் நான்.


மதுரை பாபாராஜ்


அவரவர் துயரம்


 

இல்லற யோகா


 

மகத்தாக வாழலாம்


 

மருந்தே விருந்து


 

பெற்றோரே பொறுப்பு


 பெற்றோரே பொறுப்பு!


தடம்மாறிச் செல்லும் குழந்தைகளைப் பெற்றோர்

தடம்மாறா வண்ணந்தான் பாதுகாத்து

தங்கள்

கடமை, பொறுப்புகளைச் செவ்வனே செய்தால்

தடம்மாறிச் செல்லாமாட்டார் சாற்று.


மதுரை பாபாராஜ்



எப்படி ஓட

 எப்படி ஓட?


கண்களைக் கட்டிவிட்டார்! கால்களைக் கட்டிவிட்டார்!

என்னையோ ஓடத்தான் சொல்கின்றார் எப்படியோ!

என்னால் முடியவில்லை என்றால் சிரிக்கின்றார்!

என்செய்வேன் நானிங்கே? சொல்.


மதுரை பாபாராஜ்


அன்பினைக் காட்டப் பழகு


 அன்பினைக் காட்டப் பழகு!


அன்பிற்கும் உண்டோ அடைக்கின்ற தாழென்றே

அன்பின் அருமையை வள்ளுவர் கூறுகின்றார்!

என்புருகும் அன்பென்றே சொல்லும் இலக்கியங்கள்!

அன்பால் முடியாத ஒன்றில்லை இவ்வுலகில்!

அன்பை இயல்பாகக் காட்டினால் வெற்றியுண்டு!

அன்பினைக் காட்டப் பழகு.


மதுரை பாபாராஜ்


அம்மா


 அம்மா!


பத்துமாதம் மட்டுமா வாழ்வில் சுமக்கின்றாள்?

எப்போதும் ஏதோ ஒருகோலம் ஏற்றேதான்

எப்படியும் நாளும் சுமக்கின்றாள் அம்மாதான்!

இல்லறத்தின் ஆணிவேர் தாய்.


விட்டுக் கொடுக்கும் தியாக மனப்பான்மை,

சுற்றம் சிறக்கவைக்கும் பக்குவப் பண்புகள்,

தன்னலத்தை விட்டே  குடும்பம் தலைநிமிர

என்றும் துணையாவாள் தாய்.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில் புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

செயலை முடிக்க எடுக்கின்ற நேரம்
இயல்பாய்க் குறைவுதான்! ஆனாலும் அந்தச்
செயல்களைச் செய்வதற்குத் தீர்மானம் செய்ய
எடுக்கின்ற நேரம் அதிகமாகும்! இந்தத்
தடைகளைத் தாண்டிச் சிறந்த முறையில்
செயல்களைச் செய்தல் சிறப்பு

மதுரை பாபாராஜ்
 

Friday, June 23, 2023

சிலுவை


 சிலுவையில் தொங்குகிறேன்!


சிலுவையில் என்னை அறைந்துவிட்டு

நீயோ

வலியைப் பொறுத்துக்கொள் என்றே 

இதயம்

வலிக்க வலிக்கவே ஆணி அடித்துச்

சிரிக்கின்றார் என்செய்வேன் நான்?


மதுரை பாபாராஜ்


ஆயிரம் ஈட்டிகள்


 ஆயிரம் ஈட்டிகள்!


சூழ்நிலைகள் ஆயிர மாயிரம் ஈட்டிகளாய்ப்

பாய்ந்துவந்து தாக்குகின்ற நேரத்தில் 

தள்ளாடிச்

சோர்ந்து விழுந்தே தடுமாறும் கோலத்தில்

வாழ்க்கை நகர்கிறது இங்கு.


மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி



மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


செய்வதைத் திருந்தச் செய்!


மற்றவர்கள் என்னசொல்வார் என்றே நினைக்காதே!

முற்றும் விளைவுகளை நீங்கள்தான் ஏற்கவேண்டும்!

குற்றமறச் செய்யப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

பொம்லாட்டம்


பொம்மலாட்டம்!


விருந்தினர்கள் வந்துபோகும் காட்சிகள் வீட்டில்

அரங்கேற்றம் கண்டால்தான் இல்லறம் வாழும்!

விருந்தினர் வந்துபோக வில்லை எனிலோ

மரப்பாச்சி பொம்மலாட்டம் போலத்தான் என்றும்

உயிரோட்டம் காணாது வீடு.


மதுரை பாபாராஜ்

 

வரம்பிற்குள் பேசு


வரம்பிற்குள் பேசு!


எலும்பற்ற நாக்கோ எடுத்தெறிந்தே பேசும்!

உளைச்சலைத் தந்தே கதிகலங்கச் செய்யும்!

நிலைகுலைய வைத்தேதான் புண்படுத்திப் பார்க்கும்!

வரம்பிற்குள் பேசப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

கவிவித்தகர் பொற்கை




 சிறுகூடல் பட்டியில் சந்தக் கவிதை

நறுந்தமிழ் தேன்சிந்தும் பொற்கை தலைமை!

கவியரசர் கண்ணதாசன் நற்புகழ் பாட

கவிஞர்கள் கூடிக் கவியரங்கம் பாடிச்

செவிக்கு விருந்தளிப்பார் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


Thursday, June 22, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

எதையும் வெளியிலே தேடுதற்கு முன்னால்
அவைகளோ உங்களுக்குள்  உங்களைச் சுற்றி
கிடைக்கிறதா என்றேதான் தேடுங்கள்! தேடும்
நிலையிலே ஏராள மாக கிடைக்கும்!
மலர்களுக்குள் தேனுண்டு! செப்பு.

மதுரை பாபாராஜ்
 

எந்தச்சிறகில் எந்த வானம்?


எந்தச் சிறகில் எந்த வானம்?


பலரின்  சிறகில் அவரவர் வானம்!

சிலரது வானமோ ஊரிலேயே காண்பார்!

சிலரது வானம் வெளியூர் களிலே!

சிலரது வானம் அடுத்தமாநி லத்தில்!

சிலரது வானம் வெளிநாடு தன்னில்!

அவரவர் வாய்ப்புகள் ஏற்ப சிறகை

விரிப்பார் பறப்பார் முனைந்து


மதுரை பாபாராஜ்

கவிஞர் பாலா:

ஆமாம் பாபா 

அவரவர் வானம் 

அவரது சிறகு 

பால் வீதியில் 

ஏது சூல திசை!



 

நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படம்




 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நேர்மறை சிந்தனைகள் தூண்டுகின்ற நன்மைகள்!

ஊர்ந்துவரும் தேனிசையாய் மாறும் ஒலிகள்தான்!

மேனி அசைவுகள் நல்ல நடனமாகும்!

பூவிதழ்ப் புன்னகை இங்கே சிரிப்பாகும்!

ஈவிரக்க உள்ளம் தியானமாகும்! வாழ்க்கையோ

நாளெல்லாம் கொண்டாட்டந் தான்.


மதுரை பாபாராஜ்

சுசாந்த் நண்பர்கள் இன்பச்சுற்றுலா!


இன்பச் சுற்றுலாவில் பேரன் சுசாந்த்தும் நண்பர்களும்!


ஒன்பது நண்பர்கள் வெள்ளருவி வீழ்ச்சியிலே

இன்பத்தின் எல்லையில் கும்மாளம் போட்டேதான்

நன்றாய்க் குளிக்கின்ற காட்சிகளைக் கண்டேதான்

கண்குளிரப் பார்த்தேன் ரசித்து.


பாபா தாத்தா

 

செந்தமிழே சொல்வாயா?

 செந்தமிழே சொல்வாயா?


என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ?

என்ற குழப்பத்தில் ஓடுதடா வாழ்க்கை!

இந்தநிலை மாறுமோ? எப்படித்தான் மாறுமோ?

செந்தமிழே! சொல்வாயா? வந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

ஒவ்வொன்றும் நேரம் இணைந்ததுதான்! அச்செயலை
நம்மால் அடையாளம் காண முடிந்துவிட்டால்
முன்னேற்றம் காண்போம் விரைந்து.

மதுரை பாபாராஜ்
 

Wednesday, June 21, 2023

நண்பர் முருகு அனுப்பிய படம்





நண்பர் முருகு அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நீலவானம் மேலே மரங்கள் அணிவகுப்பும்

கீழே நெளிந்தோடும் ஓடை பசுமையுடன்

கோல வயல்வெளியும்

கண்ணைக் கவர்ந்திட

ஆகா கவிதைக்(கு) அமிழ்து.


மதுரை பாபாராஜ்

 

ரவியின்தமக்கை வருகை


ரவியின் தமக்கை திருமதி லதா சூரியபாபு மற்றும் அவரது நாத்தனார்  வந்தனர்!


21.06.23


ரவியின் தமக்கை லதாவின் அகமோ

மகிழ்ந்திருக்க  மாம்பழங்கள் அன்புடன்  தந்தார்!

அகங்குளிர எண்ணற்ற மாம்பழங்கள் தம்மை

முகம்மலர பெற்றோம் திளைத்து.


மதுரை பாபாராஜ்


 

பாடல்