Saturday, August 27, 2016


குறள்களைச் சொல்லிக் கொடு!

மதங்களின் பின்னணியில் பள்ளிகள் வந்தால்
மதவெறியில் வேற்றுமையை மாணவர்கள் கற்பார்!
மதச்சின்னம் வீட்டுக்குள் போற்று! பள்ளி
புறக்கணிக்க வேண்டும்! உணர்.

எல்லா மதத்தினரும் வந்துபோகும் பள்ளியில்
நல்லதல்ல இங்கே மதம்சார்ந்த நூல்கள்தான்!
நல்ல நெறிகளைக் காட்டும் குறள்களை
எல்லோர்க்கும் சொல்லிக் கொடு.

தமிழ்நாட்டில் தமிழ்!

இன்றிருக்கும் சூழ்நிலையில் மாணவ மாணவியர்
சொந்தத் தமிழ்மொழியில் பின்தங்கும் போக்குகளே
அங்கங்கே தென்படும் கோலத்தைக் காண்கிறோம்!
என்னதான் தீர்வோ இதற்கு?

ஆங்கிலம் இந்திமீது காட்டுகின்ற ஆர்வத்தை
ஏனோ தமிழ்மீது காட்டவில்லை பள்ளிகள்?
ஏனோ விதியென்று சொல்லித் தருகின்றார்!
ஊனமாக்கிப் பார்க்கின்றார் தாய்மொழியாம் நற்றமிழை!
ஊனமனப் பித்தரைச் சாடு.

தயங்காதே!(28.8.16)

எங்கேநீ ஓடினாலும் ஓடி ஒளிந்தாலும்
உன்கடமை உன்பின்னே வந்தே அணிவகுக்கும்!
பங்களிப்பைத் தந்தேதான் ஆகவேண்டும்! தப்பிக்கும்
தந்திரங்கள் வீணாகும் பார்.

Thursday, August 25, 2016


தேன்! தேன்!

பிரித்தேன்! படித்தேன்! ரசித்தேன் !திளைத்தேன்!
சிலிர்த்தேன்!மலைத்தேன்! களித்தேன் !மலைத்தேன்
குடித்தேன்! மகிழ்ந்தேன்! தெரிந்தேன் விழைந்தேன்
தெளிந்தேன் அவைதான் குறள்.


                         சொல்வாயா?

அளியே! அளியே! மலரின் இதழைக்
களித்துச் சுவைக்கும் அளியே! மலரில்
களித்துச் சுவைத்த அமுதில் உனக்குத்
தெளிவாய்ப் பிடித்த தெது?
-----------------------------------------------------------------------------------------


Solomon proverbs

23 A fool finds pleasure in wicked schemes,
    but a person of understanding delights in wisdom.

முட்டாள் எதிர்மறைச் சிந்தனையில் இன்புறுவான்!
கற்றறிந்தோன் நேர்மறைப் பண்புகளில் இன்புறுவான்!
தொற்றிப் படரும் கொடிகளுக்கு கொம்பைப்போல்
வெற்றிக்கு நல்வழியைப் பற்று.

Wednesday, August 24, 2016

கடமையே கடவுள்

இறைவனை நம்புவது வேறு! தமிழே
இறைவனையே நம்புவது வேறு! கடமை
நிறைவேறும் பண்பில் திறமையைக் காட்டு!
இறையருள் கிட்டும் உணர்.

அனைவரையும் அரவணைப்போம்!

எண்ணற்ற நம்பிக்கை பின்னிப் பிணைந்திருக்கும்
நம்நாட்டில்  இத்தகைய நம்பிக்கை மட்டுமே
என்றும் கைகொடுக்கும் என்பதை யாரேற்பார்?
அன்பே அனைத்தின் தளம்.

குடும்பம்

இரண்டில் இருந்துநான் ஒன்றாக வந்தேன்!
இரண்டாக மாறினேன் இரண்டில் இருந்தே
பரம்பரை தோன்றும் வளரும் படரும்!
உலகில் குடும்ப அமைப்பு.

வள்ளுவம்

நல்லவர்கள் நல்லவராய் வாழ வழிகாட்டும்!
பொல்லாதோர் நல்லவராய் மாற  நெறிகாட்டும்!
இல்லாமை நீங்க திசைகாட்டும்! நற்றமிழே!
வள்ளுவத்தின் சாரம் இது.

கருத்தின் இலக்கணம்

சுருக்கம்,எளிமை,தெளிவு, இவையே
எழுதும் கருத்தின் இலக்கண மாகும்!
ஒருவருக்கும் இங்கே புரியாத வண்ணம்
எழுதுவதை என்றும் தவிர்.

Solomon proverb

22 The blessing of the Lord brings wealth,
    without painful toil for it.

பண்பாளர் ஆசிகள் தூண்டித் துலங்கவைக்க
முன்னேறும் நல்லுழைப்பால் சேர்த்த வளங்களின்
பின்னணியில் இங்கே மலைப்பு தெரியாது!
மங்காமல் ஊறும் வளம்.

Sunday, August 21, 2016


Solomon proverbs

21 The lips of the righteous nourish many,
    but fools die for lack of sense.

சான்றோர் அறிவுரையால் எண்ணற்றோர் வாழலாம்!
கூன்விழுந்த மன்பதையும் இங்கே நிமிர்ந்துவிடும்!
ஆனால் அறிவிலியின் சொற்கள் புறக்கணிப்பால்
வீணாகிப் போகும் உதிர்ந்து.


காலின் குறும்புத் தனம்
---------------------------------------
கால்வந்து கால்களைத் தீண்டியது!கால்களோ
காலை முறைத்தன! காலும் சிரித்தேதான்
கால்களைச் சீண்டியது!  கால்களோ துள்ளின!
காலின் குறும்புத் தனம்.


கால்-- காற்று


தளம்

சிலரிடம் நட்புடன் பேசுவோம்! மற்றும்
சிலருடன் பேசிவிட்டுச் சென்றிடுவோம்! வேறு
சிலரிடம் பார்த்தும் சிரித்தும் நகர்வோம்!
பலருடன் நாமோ பழகினாலும் நட்பின்
தளமோ சிலரிடந் தான்.

தேரோட்டம்!

தேரொன்று வீதியிலே நேராகப் போனாலும்
நேரமும் கோணமும் வேறாகிப் போய்விட்டால்
தேரடிக்குப் போகின்ற தேருக்கே சிக்கல்தான்!
தேரோட்டி என்செய்வான்? சொல்!

Saturday, August 20, 2016

Solomon proverbs

20 The tongue of the righteous is choice silver,
    but the heart of the wicked is of little value.

நீதிமானின் சொற்கள் விலைமதிப் பற்றது!
ஈடில்லா நற்புகழை ஏந்திவரும்!  வஞ்சகரின்
மாசு படிந்த இதயத்தின் சிந்தனையைத்
தூசியாய்த் தான்மதிப்பார் சொல்.

Solomon proverbs

19 Sin is not ended by multiplying words,
    but the prudent hold their tongues.

எப்பொழுதும் பேசி சளைக்கவைக்கும் பண்புள்ளோர்
மற்றவரின் ஏசலுக்கே ஆளாவார்! நாவடக்கி
உற்றதை இங்கே சுருக்கமாகப் பேசுகின்ற
உத்தமரை வாழ்த்தும் உலகு.

Solomon proverbs

18 Whoever conceals hatred with lying lips
    and spreads slander is a fool.

பொய்யை புரட்டை இதழில் மறைத்து,
துள்ளவைத்துப் பார்க்கும் பழிச்சொல்லை மற்றவர்மேல்
அள்ளித் தெளிக்கும் அற்பனை மூடனென்றே
சொல்லிச் சிரிப்பார் உணர்.

ஆடி ஆடி

ஆ டிமாதக் காற்றிலே அம்மி பறக்குமென்றார்!
ஆடிமாதம் வந்தது காற்றுமில்லை! அம்மியா?
தேடினேன் காகிதம் கூட பறக்கவில்லை!
ஆடியே பொன்மொழி வீண்.

Thursday, August 18, 2016


Solomon proverbs

17 Whoever heeds discipline shows the way to life,
    but whoever ignores correction leads others astray.

சொல்வதைக் கேட்டே ஒழுக்கமுடன் வாழ்ந்தால்
நல்வாழ்வைக் காணலாம்! தவறைத் திருத்தாமல்
சொல்வதையும் மீறி  தனிவழியில் செல்பவர்கள்
எள்ளலுக் காளாவார் பார்.


Solomon proverbs

16 The wages of the righteous is life,
    but the earnings of the wicked are sin and death.

நல்லோர் உழைப்பில் கனியும் வருமானம்
எல்லா வளங்களையும் வாழ்விலே கொண்டுவரும்!
கள்ளமனக் கெட்டவர்கள் ஈட்டும் வருமானம்
தொல்லையும் சிக்கலும் தான்.


Solomon proverbs

15 The wealth of the rich is their fortified city,
    but poverty is the ruin of the poor.

செல்வந்தன் சேர்த்துவைக்கும் செல்வம் அவருக்கு
நல்லரண் கொண்ட நகராகும்! கண்மணியே!
வல்லூறாய்க் கொத்தும் வறுமையோ ஏழையைத்
துள்ளவைக்கும் பேரழிவாம் பார்.


Solomon proverbs

14 The wise store up knowledge,
    but the mouth of a fool invites ruin.

அளவுடன் பேசுவோன் சேகரித்தல் ஞானம்!
வளவள வென்றே உளறுவோன்  சூன்யம்!
உளறல் அழிவில்  முடியும்! சுழன்று
சுழல்கின்ற நாவை அடக்கு.


Solomon proverb

13 Wisdom is found on the lips of the discerning,
    but a rod is for the back of one who has no sense

புரிந்துகொள்ளும் ஆற்றல் அறிவின் தெளிவு!
புரிந்துகொள்ளும் உள்ளமற்ற பண்பின் வீழ்ச்சிச்
சரிவைச் சமாளிக்க ஊன்றுகோல் ஒன்று
வழிகாட்ட வேண்டும் உணர்.


Solomon proverb

12 Hatred stirs up conflict,
    but love covers over all wrongs.

வெறுப்பு நெருப்பில் பகையனல் வீசும்!
இறுகிய நட்பில் நடுநிலை மாறும்!
உறுத்தும் தவறையும் மூடி மறைக்கும்!
வெறுப்பும் விருப்பும் தவிர்.



வாழைப்பூ வடை
---------------------------------------
வாழைப்பூ தோலை, நரம்புகளை நீக்கிவிட்டு
வேகவைத்து நீர்வடித்(து) அரைக்கவும்! பின்பிங்கே
வெங்காயம், பூண்டு , பொரிகடலை,சீரகம்,
வண்ணப் பெருஞ்சீ ரகத்துடன், சாம்பார்தூள்
கண்கவர் தேங்காய்ச் சில்லும்,கரம்மசாலா
வெண்ணிற உப்புக் கலவை அரைத்தேதான்
இந்த இரண்டையும் சேர்த்து வடைதட்டி
எண்ணெயுடன் வாணலியில் போட்டே எடுத்துப்பார்!
அம்மம்மா! வாழைப்பூ தேன்வடை வந்துவிடும்!
நன்கு சுவைக்கலாம் நாம்.

Solomon proverbs

11 The mouth of the righteous is a fountain of life,
    but the mouth of the wicked conceals violence

சான்றோரின் இன்சொல் உயிரளிக்கும் நீரூற்று!
ஆணவக் கார்னின் வன்சொல்லோ புண்படுத்தும்
ஊனமன வக்கிரத்தின் ஊற்றாகும்! அம்மம்மா
ஈனத்தின் உச்சம் அது.

Sunday, August 14, 2016

நம்நாட்டின்.
70 ஆம் விடுதலை நாள்
 15.08.2016
-------------------

இந்திய நாடு இந்திய நாடு
என்றே சேர்ந்து பாடு
விடுதலை பெற்று நிமிர்ந்தது
என்றே
வீரத் தோடு பாடு

கல்வி கேள்வி ஞானம்
மனதின் வளமாய் தியானம்
கொண்டது நமது நாடு
தினமும் கொண்டாடு

இமயம் தொட்டுக் குமரி வரைக்கும்
எழுச்சி எழுச்சி எழுச்சி
இந்தியர் என்ற உணர்வில் தானே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி!

அணைகள் பள்ளி கல்லூரி
தொழில்கள் உழவெனஏற்றம்தான்
கணினித் துறையா கனிம வளமா
விண்ணைக் கிழிக்கும் ஏவு கணைகளா
மண்ணைக் கிழிக்கும் கலங்களா
எங்கே இல்லை முன்னேற்றம்
எதிலே இல்லை முன்னேற்றம்

ஓடச் செய்தோம் அன்னியரை
ஆள விட்டோம் நம்மவரை
உலகில் இருக்கும் குறைகளைப்போல்
இங்கே உண்டு என்றாலும்
இந்தியர் நாம்தான் உழைத்திடுவோம்!
நாட்டை உயர்த்த தோள்கொடுப்போம்!



கவிஞனின் ஏக்கம்!

எப்படி என்கவிதை என்றுகேட்டேன்! தம்பியே
சற்றே வளரவேண்டும் என்றார்! சரியென்றேன்!
சற்றே வளர்ந்தேன் ! மறுபடியும் காட்டினேன்!
முற்றவில்லை என்றார்! முதிர்ந்ததும் காட்டினேன்!
முற்றிவிட்டாய் மற்றவர்க்குஏணியாகேன் என்றனர்!
நற்றமிழே என்முடிவைப் பார்.

நான் ஞானியல்ல!

உருவம் உயிரைச் சுமப்பதால் அந்த
உருவம் உருவமா? இல்லை உயிரே
உருவைச் சுமப்பதால்  அந்த உருவம்
உருவமா?  இல்லை உருவும் உயிரும்
இருப்பால் உருவா? விளம்பு.

Saturday, August 13, 2016

Solomon Proverb

10 Whoever winks maliciously causes grief,
    and a chattering fool comes to ruin.

வஞ்சகப் பார்வை துயரைக் கொடுக்கும்!
கண்ணே !அறிவிலிப் பார்வையோ பேரழிவைத்
தந்தே தடுமாற வைத்துவிடும்! வாழ்க்கையில்
நன்னெறிப் பார்வையே நன்று!

Solomon proverb 9

Whoever walks in integrity walks securely,
    but whoever takes crooked paths will be found out.

நேர்வழியில் ஒற்றுமையாய் வாழ்பவர்கள் பாதுகாப்பாய்
வாழ்கின்றார்! கண்ணே குறுக்கு வழிவாழ்க்கை
வாழ்வோர் தடுமாறி வீழ்வார் நொந்தேதான்!
நேர்வழியே நிம்மதியின் ஊற்று.

Solomon Proverbs

8.The wise in heart accept commands,
    but a chattering fool comes to ruin.

இதயத்தில் ஞானமுள்ளோன்  கட்டளையை ஏற்பான்!
அகமாசால் வீண்சொற்கள் பேசுபவன் நாளும்
தடம்மாறி கெட்டழிவான்! வீணாவான் இங்கே!
சுடரொளி ஞானமுடன் வாழ்.

குறள்வழி வாழ்வோம்

மடலை விரிக்கத்தான் பூக்கள்! துணிந்து
சிறகை விரிக்கத்தான் புள்கள்! நாளும்
கடலை கடக்கத்தான் கப்பல்! தமிழே!
அறநெறி வாழத்தான்  இங்கே குறள்கள்!
குறள்வழி வாழ்ந்தால் சிறப்பு.

Friday, August 12, 2016

 Solomon Proverbs

8.The wise in heart accept commands,
    but a chattering fool comes to ruin.

இதயத்தில் ஞானமுள்ளோன் கட்டளையை ஏற்பான்!
அகமாசால் வீண்சொற்கள் பேசுபவன் நாளும்
தடம்மாறி கெட்டழிவான்! வீணாவான் இங்கே!
சுடரொளி ஞானமுடன் வாழ்.


Solomon proverb 7

7 The name of the righteous is used in blessings,[b]
    but the name of the wicked will rot.

பண்பாளர் நற்பெயரோ என்றும் நிலைத்திருக்கும்!
வன்கணாளர் அற்பப் பெயரோ உடனடியாய்
தண்ணீரில் எழுத்தாய் மறைந்தே அழிந்துவிடும்!
என்றுமே நற்பெயரை ஈட்டு.


குறள் இயந்திரம்

தண்ணீரின் மாசகற்ற இங்கே இயந்திரம்!
மண்ணக மாசகற்ற இங்கே இயந்திரம்!
என்றும் மனமாசை நீக்க திருக்குறள்
ஒன்றே இயந்திரமாம் சொல்.


Solomon proverbs

6 Blessings crown the head of the righteous,
    but violence overwhelms the mouth of the wicked.

அறவழியில் வாழ்ந்தால் மகுடங்கள் உண்டு!
தடம்மாறும்  வன்முறை வாழ்வென்றால்  என்றும்
புறந்தள்ளி மூழ்கடித்து வாய்மூட வைக்கும்!
அறமே சிறப்பைத் தரும்.


செய்யும் தொழிலை மதி!

எந்தத் தொழிலெனினும் ஆர்வமும் ஈடுபாடும்
ஒன்றித் திளைக்க உழைக்கின்ற பக்குவத்தில்
முன்னேற்றம் தேடிவரும்! எந்தத் தொழிலையும்
கண்ணெனப் போற்றி உழை.


Solomon proverb 5

5 He who gathers crops in summer is a prudent son,
    but he who sleeps during harvest is a disgraceful son.

கோடைப் பருவம் பயிர்களைச் சேகரித்து
நாடறிய வாழ்பவன் நல்லவன்! கண்மணியே!
தூதனுப்பித் தூண்டும் அறுவடைக் காலத்தை
மோசமான சோம்பலுடன் தூங்கிக் கழிப்பவனோ
வேதனையின் மொத்த உரு.


Solomon proverbs

4 Lazy hands make for poverty,
    but diligent hands bring wealth

உழைக்காமல் சோம்பித் திரிவோரின் வாழ்வில்
களைகட்டிக் கூத்தாடி நிற்கும் வறுமை!
உழைப்பாலே முன்னேறும் நல்லவரின் வாழ்வில்
தழைக்கும் வளமை விழைந்து.

Solomon proverbs

3 The Lord does not let the righteous go hungry,
    but he thwarts the craving of the wicked.

நேர்வழியில் வாழ்வோர் பசியில் துடிக்கவைத்துப்
பார்ப்பதை என்றும் விரும்பமாட்டார்! என்றாலும்
தேள்மனத்தோர் பேராசை தாகத்தைத் தீர்க்கமாட்டார்!
வாய்மைதான் வெல்லும் நிமிர்ந்து.

Sunday, August 07, 2016


உன்னையே நீயறிவாய்!

உனக்குள் உன்னை உனதாக்கி உன்னை
உனக்குள் எடைபோட்டே உன்னைக் கணித்தால்
உனக்குள் உனைநீ உணர்வாய்! பிறர்யார்
உனக்குள் உனைப்புகழ? சொல்.

நட்பு வாழ்க! வளர்க!

அகத்தில் விதைக்கின்ற நட்பு விதைகள்
அகத்துள் வளர்ந்து செழித்து விரிந்து
முகத்தில் மலர்ந்து மணக்கும் சிரிப்பாய்
படரும் தொடரும் நிலைத்து.



ஹிரோஷிமா தினம்
அஞ்சலிக் கவிதை!

          06.08.16

நாகசாகி மற்றும் ஹிரோஷிமா ஊர்களை
நீசமனம் கொண்ட அமெரிக்கா குண்டுகளை
வீசித்தான் பேரழிவால் நாசமாக்கிப்பார்த்தது!
பாதிப்பால் இன்றளவும் மக்கள் துடிக்கின்றார்!
வேதனையில் பங்கெடுப்போம் நாம்.



Explaining the meaning of ‘Association’. He said:
“The rain drop from the sky: if it is caught in hands, it is pure enough for drinking. If it falls in a gutter, its value drops so much that it can’t be used even for washing the feet. If it falls on hot surface, it perishes. If it falls on lotus leaf, it shines like a pearl and finally, if it falls on oyster, it becomes a pearl. The drop is same, but its existence & worth depend on with whom it associates.”
Always be associated with people who are good at heart.
Send this to all right minded people with beautiful heart
[8/4, 9:59 PM] மதுரை பாபாராஜ்: விவேகானந்தர் கருத்து தமிழாக்கம்

மழைநீர் கரங்களில் என்றால் குடிநீர்!
கலங்கிய குட்டையில் மாசடைந்த நீராம்!
அழகான சிப்பியில் முத்தாக மாறும்!
தளமிங்கே சூடானால் தன்னுரு மாயும்!
குளத்தா மரையின் இலைமேல் ஒளிரும்!
மழைத்துளி சேருமிடத் தன்மையை ஏற்கும்!
கலந்துற வாடும் சேர்க்கை பொறுத்தே
உலகில் தனிமனிதப் பண்பு.

Tuesday, August 02, 2016


110  வௌவுதல் நீக்கு

ஆசை வெறியானால் வக்கிரத்தைத் தூண்டிவிடும்!
நீசனாக மாற்றித்தான் மாற்றார் பொருள்களைக்
கூசாமல் இங்கே அபகரிக்கத் திட்டமிடும்!
பாதக எண்ணத்தை நீக்கு.





109  வையத் தலைமை கொள்

தன்னலமற்ற கொள்கை, தியாக மனப்பான்மை,
உண்மை, ஒழுக்கம், மனிதநேயச் சிந்தனை,
அஞ்சாமை, மாசற்ற உள்ளம் படைத்தவரை
என்றும் தலைவரெனப் போற்று.
பாரதியின் புதிய ஆத்திச்சூடி நிறைவு

108  வேதம் புதுமை செய்

மாற்ற முடியாத தல்லவே வேதங்கள்!
மாற்றத்தில் ஆக்கபூர்வ மாற்றங்கள் ஏற்படுத்தி
ஏட்டளவில் இன்றி  நடைமுறைக் கேற்றவண்ணம்
மாற்றியே பின்பற்று வோம்

107  வெடிப்புறப் பேசு

நேருக்கு நேராய் ஒளிவு மறைவின்றி
பாரபட்ச மில்லாமல் சொல்லவந்த நற்கருத்தை
யாருக்கும் அஞ்சாமல் பேசுகின்ற ஆற்றலே
பேரும் புகழும் தரும்.

Monday, August 01, 2016


பற்றுக பற்றை

தாய்நாடு தாய்மொழி தம்மை மறந்துவிட்டுச்
சேய்கள் வளருமானால் நாட்டின் எதிர்காலம்
கேள்விக் குறியாகும்! கேலிப் பொருளாகும்!
சேய்களிடம் இப்பற்றை ஊட்டு


106  வீரியம் பெருக்கு

தாழ்வு மனப்பான்மை கோழைத் தனமாகும்!
தாழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்கும் ஆற்றலே
வீர மனப்பான்மை ஆகும்! அத்தகைய
வீரத்தை நாளும் பெருக்கு.


சுவர்கள்

அவரவர் பிள்ளை குடும்பங்கள் என்றே
சுவரெழுப்பி வாழ்கின்ற காலகட்டம் இன்று!
சுவர்களை மீறி உறவிழையைப் பின்னும்
கலைகற்று வாழ்தல் சிறப்பு.


105  விதையினைத் தெரிந்து இடு

                   1
எந்தப் பருவத்தில் எந்தவிதை போடவேண்டும்
என்றே அறிந்துகொண்டு மண்ணில் பயிரிட்டால்
அந்தப் பயிர்செழிக்கும்! நாட்டில் வளங்கொழிக்கும்!
கண்டபடி நட்டால் இழப்பு.

                     2
நேரம் பருவம் அறிந்தே செயல்பட்டால்
காலம் கனிந்துவந்தே திட்டம் நிறைவேறும்!
நேரம் தவறினால் குழப்பம் முடிவாகும்!
வேரூன்ற நற்பருவம் பார்



உணவு

அரிசி பருப்பு காய்கறிகள்
கோதுமை மற்றும் பழவகைகள்
இயற்கை யான பானங்கள்
எல்லாம் இங்கே நல்லதுதான்!
குப்பை உணவைத் தவிர்ப்போமே
உடல்நலம் காத்து வாழ்வோமே!
செயற்கை பானங்கள் வேண்டாமே
பலவகை நோய்கள் வந்திடுமே!
பசித்த பின்பே சாப்பிடுவோம்
செரிமானம் ஆகும் உணர்ந்திடுவோம்!
அடிக்கடி சாப்பிட ஏங்காதே!
வேதனை தன்னை வாங்காதே




விடுதலைக்கு வித்திட்டதிலகர்  நினைவுநாள்!

01.08.2016

இந்திய நாட்டின் விடுதலை முன்னோடி!
இந்திய நாட்டின் கிளர்ச்சிக்குத் தந்தையென்று
அன்னியர் பட்டம் கொடுத்தனர் கொக்கரித்தே!
எங்கள் விடுதலை எங்கள் பிறப்புரிமை
சிங்க முழக்கமிட்டார் நம்திலகர்  நெஞ்சுயர்த்தி!
இந்தியத் தாயின் புரட்சித் திலகமானார்!
இந்தியர்கள் இங்கே விடுதலை வாழ்வுபெற
வெங்கொடுமை ஏற்றார் வணங்கு.


104  வான நூல் பயிற்சி கொள்

மண்ணகத்தின் அற்புதத்தைக் கண்டே வியக்கின்றோம்!
விண்ணகத்தின் பால்வீதி, கோள்களின் கூட்டமைப்பைக்
கண்ணே! அறிந்துகொண்டால்  ஞானம் விரிவடையும்!
என்றுமே ஞானதாகம் கொள்.


103  வருவதை மகிழ்ந்துண்

அமையாத வாழ்வை நினைத்தேங்க வேண்டாம்!
அமைந்ததில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்! என்றும்
மனையில் மகிழ்ச்சி பெருகும்! நாளும்
மனத்திருப்தி கூடும் உணர்.

102  லௌகிகம் ஆற்று

உலகின் நெறிமுறையைப் பின்பற்றி நாளும்
உளமகிழ்ந்தே இல்லறத்தைக் காக்கும் பணியில்
சுரக்கும் கடமைப் பொறுப்புகளை ஏற்றே
உரமாகி வாழ்தல் வரம்